உள்ளடக்கத்துக்குச் செல்

பைதல்மலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைதல்மலா
பைதல்மலா
உயர்ந்த புள்ளி
உயரம்1,371.6 m (4,500 அடி)
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புപൈതൽമല
பெயரின் மொழிமலையாளம்
புவியியல்
அமைவிடம்இந்தியா, கேரளம், கண்ணூர் மாவட்டம், தளிப்பறம்பா வட்டம்
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
நிலவியல்
மலையின் வகைசுற்றுலா
ஏறுதல்
எளிய வழிபொட்டன்ப்ளேவிலிருந்து, குடியன்மாலா வழியாக

பைதல்மலா (Paithalmala[1]) என்பது இந்தியாவின் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடமாகும். கடல் மட்டத்திலிருந்து 1372 மீ உயரத்தில் பொட்டன்பிளேவ் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இது கண்ணூரில் மிக உயர்ந்த சிகரமாகும். [2] இது   தளிப்பறம்பாவிலிருந்து 40 கி.மீ தொலைவிலும்,   கண்ணூரிலிருந்து 65 கி.மீ. [3] தொலைவிலும் கேரள கர்நாடக எல்லையில் குடகு காடுகளுக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், மலையேறுபவர்கள், ஓய்வுக்கு வருபவர்கள் போன்றோருக்கு மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது.

பைதமலாவில் மலையேற்றம்

[தொகு]

பைதமலாவில் இரண்டு மலையேற்ற பருவங்கள் உள்ளன. அவை பருவமழை காலம் மற்றும் கோடைக்காலம் ஆகும். மழைக்காலமானது (சூன் முதல் அக்டோபர் வரை) பைத்தல்மலாவில் மலையேறும் ஒளிப்படக்காரர்களை இங்குள்ள மூடுபனி மலைகளும், இதை போர்த்தியுள்ள காடுகளும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். நாள் முழுவதும், குறிப்பாக சூலை மாதத்தில் மழை பெய்யும் போது பசுமையில் இலயிக்கலாம். நடைமுறையில், தீவிரமான காலநிலை காரணமாக கோடையில் மலையேற்றம் எளிதானது அல்ல. அட்டைகள் அவ்வப்போது வரும் யானைகளைக் காண இயலும்.

பைத்தல்மலா மலை உச்சி: பின்னணியில்

மழைக்காலத்தைத் தொடர்ந்து பைத்தல்மலாவில் குளிர் காலநிலை நிலவும். அப்போது மலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் புல் முழுமையாக உயரமாக வளர்கிறது. அவை ஏழு அடிக்கு மேல் வளருவதால், நடந்து செல்வது கடினம். வழக்கமான பாதையைக் கண்டுபிடிப்பதும் கடினமான செயலாகிறது. திசம்பர் மாதத்திற்குள், வன பராமரிப்பாளர்கள் புற்களுக்கு தீ வைத்து, மீதமுள்ள காடுகளை கவனிக்கின்றனர். இது மலையேற்ற அனுபவத்தை எளிதாக்குகின்றது. என்றாலும் இதற்குப் பிறகும், மலையேற்றத்திற்கு ஏற்றதாக இப்பகுதி இருப்பதில்லை, ஏனெனில் உருவாகியுள்ள கரும் புகை, இரண்டு வாரங்களுக்குப் பிறகே போகிறது. இங்கு மலையேற்றத்திற்கு சிறந்த நேரம் சனவரி முதல் மார்ச் வரையாகும். கடும் சூரிய வெப்பம் நிலவலாம்.

செய்ய வேண்டியவை

[தொகு]

மலையடிவாரத்தில் சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட ஒரு கண்காணிப்புக் கோபுரம் உள்ளது. இதை பைதான் பள்ளத்தாக்கிலிருந்து 45 நிமிட நடைப்பயணத்தில் அடையலாம். மலையேற்றமானது அடர்ந்த காடு வழியாக தொடங்குகிறது.

மலையை நோக்கிய ஒரு வனப்பாதை

கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து பள்ளத்தாக்கின் தோற்றமானது மூச்சடைக்கக் கூடியது. கண்ணூர் மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை இங்கு இருந்து பார்வையாளர்கள் காணலாம்.

பைதான் மலைகளில் மலையேறுபவர்கள்

பார்வையாளர்களில் பெரும்பாலோர் கண்ணிப்பு கோபுரத்தைச் சுற்றி நேரத்தைச் செலவழித்து தங்கள் மலையேற்றத்தை முடிக்கிறார்கள். ஆனால் பைதமலாவில் உள்ள உற்சாகமூட்டும் பெரும்பாலான பகுதிகள் வேறு இடங்களில் அமைந்துள்ளன.

மலை உச்சியில் இருந்து இயற்கை காட்சி

மலையேற்றத்தின் சிறந்த பகுதி, கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து அடர்ந்தத காடு வரை நடந்து செல்வதுதான். மலைகளின் மேல் வலதுபுறம் குடகு காடுகளின் மயக்கும் காட்சிகளையும், இடதுபுறம் பைத்தால் பள்ளத்தாக்கின் காட்சிகளையும் இரசிக்கலாம். இங்குள்ள புல்வெளி பிரமிக்க வைக்கிறது. மலையேற்றத்தைத் தொடங்க சிறந்த நேரம் அதிகாலை ஆகும். பள்ளத்தாக்கிலிருந்து காலை உணவு உண்ட பிறகு, மாலையில் பயணம் முடியும். மதிய உணவு, தண்ணீர், சிற்றுண்டி போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

இயற்கையைப் பாதுகாத்தல்

[தொகு]

கேரளத்தின் இயற்கை பகுதிகளில் மனித நடமாட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படாத சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இதை பார்வையாளர்கள் குடித்து கூத்தடிக்கும் இடமாக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதால் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இல்லை. சுவர்களும், தடுப்புகளும் உடைந்து அல்லது அழிக்கப்படுவதால் கண்காணிப்புக் கோபுரம் மோசமான நிலையில் உள்ளது. கோபுரத்தின் சுற்றுப்புறங்கள் பீர் போத்தல்கள் சிதறிக்கிடக்கின்றன. மேலும் பிற சுற்றுலா இடங்களைப் போலவே, நெகிழியும் இங்கே பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தூய்மையான தண்ணீரைப் பெறும் நீரோடைகள் கூட நெகிழிப் பைகள் மூலம் மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆயினும்கூட, மலை உச்சியானது பெரும்பாலும் மாசுபடாமல் உள்ளது. மேலும் பார்வையாளர்கள் அதைப் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எப்படி அடைவது

[தொகு]

அருகிலுள்ள பேருந்து நிலையம்  : பொட்டன் பிளேவ் ( தளிப்பறம்பாவிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. கண்ணூர் பணிமனையில் இருந்துடி பொட்டன்பிளேவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பல பேருந்துகளை இயக்குகிறது, இல்லையெனில் ஜீப் போன்ற பிற சேவைகளைப் பயன்படுத்தலாம். ).

அருகிலுள்ள தொடருந்து நிலையம்  : கண்ணூர் தொடருந்து நிலையம்.

அருகிலுள்ள வானூர்தி நிலையம் : கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் / கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் / மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்.

மலை உச்சியை இரண்டு வெவ்வேறு திசைகளிலிருந்து அடையலாம்; பொட்டன்பிளேவ் (குடியன்மலை அருகே) மற்றும் கப்பிமலை (அலக்கோடு அருகே). என்றாலும், பொட்டன் பிளேவிலிருந்து மலையேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, ஏனெனில் போட்டன் பிளேவிலிருந்து காட்டின் துவக்கம் வரை அனைத்து எல்லா வானிலையிலும் பயன்படுத்தக்கூடிய சாலை வசதி உள்ளது. அங்கிருந்து மலையேற்றம் தொடங்குகிறது. இந்த வழியில் குடில்கள் உள்ளன. திருப்பங்களுடன், குறுகியதாகவும் உள்ள சாலை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதால் குடியன்மாலாவிலிருந்து பைதமலா பள்ளத்தாக்கு வரை செல்லுதல் புத்துணர்ச்சியூட்டுகிறது.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைதல்மலா&oldid=3350750" இலிருந்து மீள்விக்கப்பட்டது