உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுமலை குகைகள், பிரலிமட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குகையின் வாயில்
குகை வாயில்
குகை பிரலிமட்டம் நெடுமாலையில் உள்ள குழிகள்

நெடுமலை குகைகள் என்பவை இந்தியாவின், கேரள மாநிலத்தின், இடுக்கி மாவட்டம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தின் எல்லையில் உள்ள பிரலிமட்டத்தில் உள்ள குகைகள் ஆகும். பாறைக் குகையின் கருங்கல் பாறை மீது செதுக்கு வேலைகள் செய்யபட்ட குகைகள் இங்கே உள்ளன. தொல்லியல் ஆய்வாளரும் யுஜிசி ஆராய்ச்சி அறிவியலாளருமான டாக்டர் பி. ராஜேந்திரன் கருத்துப்படி, குகைகளின் காலவரிசையை கவனித்தால் இவை கிமு 4000 காலகட்டத்திய புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என்கிறார்.

நெடுமாலையில் உள்ள பிரலிமட்டத்தில் மூன்று குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரலிமட்ட குகைகளில் பல குழிகளும் தேய்த்து மெருகூட்டபட்ட தரைப்பகுதிகளும் உள்ளன.

வரலாற்றுக்கு முந்தைய பாறைக் குகை

[தொகு]
வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய பாறைக் குகை

இது வரலாற்று காலத்துக்கு முந்தைய காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட தங்குமிடம் ஆகும். இது 4 மீட்டர் நீளம், 2 மீ அகலம் மற்றும் 1.5 அடி தடிமன் கொண்ட ஒரு பெரிய ஒற்றை பாறையை மேற்கூரையாக கொண்டுள்ளது. இது 5 அடி உயரமுள்ள இரண்டு பாறைகளின்மீது வைக்கபட்டுள்ளது. குகை வடக்கு-தெற்காக உள்ளது குகையின் வாயில் கிழக்கு பக்கத்தில் உள்ளது. குகை 5 அடி உயரம் கொண்டதாகவும், இரண்டு அல்லது மூன்று நபர்கள் உள்ளே தங்கக் கூடியதாகவும் உள்ளது. இத்தகைய கனமான பாறை மேற்கூரையை வைப்பதற்காக எடுத்துவர ஆரோக்கியமான மனிதர்களும் கூட்டுப்பணியும் தேவை. எர்ணாகுளம் மாவட்டத்தின் நெடுமாலையில் உள்ள பரலிமட்டத்தில் காணப்படும் குகை தங்குமிடம் பெருங்கற்காலப் பண்பாட்டின் கல்திட்டை அல்லது முனியறையின் சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பதாக இல்லை. ஆனால் கடந்த காலத்தில் மனிதர்களின் தங்குமிடமாக இருதிருக்க வாய்ப்பு உள்ளது.

அமைவிடம்

[தொகு]

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் மஞ்சல்லூர் பஞ்சாயத்தில் பிரலிமட்டம் நெடுமாலை உள்ளது. இது கடலிக்காட்டில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், வசக்குளத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. .பயணிகள் கடினமான நிலப்பரப்பில் செல்லவேண்டி இருக்கும். கடலிக்காடு வழியாக காவனா புலுக்காயத் கடாவில் இரண்டு கிலோமீட்டர் நீளத்தை கடக்கும்போது, வழியில் சிறிய மலைகளை கடக்கவேண்டி இருக்கும். Google வரைபடம்

குறிப்புகள்

[தொகு]