பூமலை
பூமலை (மலையாளம் : പൂമല) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், திரிசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது திருச்சூர் நகரத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]பூமலை என்ற பெயர் பூவம் மரத்திலிருந்து வந்தது (பூக்க மரம்), இது ஒரு காலத்தில் இங்கு ஏராளமாக இருந்தது. இங்கு வாழ்பவர்கள் இந்த பெயரானது 'பூவன் பழம்' ( வாழைப்பழ வகை) என்பதிலிருந்து வந்தது என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த வாழை இங்கு பெருமளவில் வளர்க்கப்பட்டதாம்.
விளக்கம்
[தொகு]நடு திருவிதாங்கூரிலிருந்து வந்த கிறிஸ்தவ குடியேறிகள் இப்பகுதியில் குடியேறும் வரை பூமலை பொதுவாக ஒரு காடாக இருந்தது. இது இந்தியாவின் பிரபலமான சுற்றுலா மலை வழிடங்களில் ஒன்றாகும். இங்கு பயணிகளை ஈர்க்கும் பகுதிளில் முனியறையும்( துறவி ஒருவர் தியானித்த குகை) அடங்கும். பூமலைவின் தெற்குப் பகுதியில் உள்ள சிறிய அணை உள்ளது துவக்கத்தில் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக மட்டுமே இது கட்டப்பட்டது, பின்னர் சிறு நீர்ப்பாசனத் துறையால் நிர்வகிக்கப்பட்டது. இன்று, இது வளர்ந்து வரும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது, ஏனெனில் திரிசூரின் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு (டி.டி.பி.சி) அணையின் சுற்றுப்புறங்களை அழகுபடுத்துவதற்காக 2008 இன் துவக்கத்தில் 50 லட்சம் மதிப்பிலான திட்டங்களை மேற்கொண்டது. பூமலை அணையை ஒரு சுற்றுலா மையமாக அதிகாரப்பூர்வமாக உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் 21 மார்ச் 2010 அன்று அறிவித்தார். இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 94.50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் வடக்கே மற்றொரு அணையான, பத்தழகுண்டு உள்ளது, இது தற்போது நீர்ப்பாசனத்திற்காக மட்டுமே பயன்பட்டுவருகிறது. இங்கு பரம்பாயி, பூமலை, சோட்டுபாறை என்னும் சில கிராமங்கள் உள்ளன. இப்போது இந்த கிராமங்கள் எல்லாம் பூமலை என்று ஒன்றாக அழைக்கப்படுகின்றன. பூமலையிலும், இதைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்களாக செப்பாரா குகைகள், பத்தழகுண்டு அணை, பம்பூரம்பாபாறை போன்றவை ஆகும். பூமலையில் இரண்டு பள்ளிகள் மற்றும் ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது.
பூமலை பெஸ்ட் என்பது ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த நிகழ்வில் உணவு, பொழுதுபோக்கு போன்ற பலவற்றோடு சுமார் ஒரு வாரம் நீடிக்கும்.
-
பூமலாவிலிருந்து ஒரு பார்வை
-
பூமலை மலை
-
பூமலை மலை
-
பூமலை மலை
-
பூமலை மலையிலிருந்து ஒரு காட்சி
-
முனியாரா (துறவி ஒருவர் தியானித்த குகை)
-
முனியாரா (துறவி தியானித்த குகை)