உள்ளடக்கத்துக்குச் செல்

போத்துண்டி அணை

ஆள்கூறுகள்: 10°32′34″N 76°38′08″E / 10.54278°N 76.63556°E / 10.54278; 76.63556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போத்துண்டி அணை
போத்துண்டி அணை
போத்துண்டி அணை is located in இந்தியா
போத்துண்டி அணை
10°32'34"N 76°38'8"E
போத்துண்டி அணை is located in கேரளம்
போத்துண்டி அணை
போத்துண்டி அணை (கேரளம்)
போத்துண்டி அணை is located in தமிழ் நாடு
போத்துண்டி அணை
போத்துண்டி அணை (தமிழ் நாடு)
அமைவிடம்கேரளம், பாலக்காடு மாவட்டம்
புவியியல் ஆள்கூற்று10°32′34″N 76°38′08″E / 10.54278°N 76.63556°E / 10.54278; 76.63556
நோக்கம்Irrigation
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது19 ஆம் நூற்றாண்டில் அணையும், 1968 இல் நீர்ப்பாசன திட்டமும் மேற்கொள்ளபட்டது
அணையும் வழிகாலும்
உயரம்32.61 மீட்டர்கள் (107.0 அடி)
நீளம்1,680 மீட்டர்கள் (5,510 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு50,914,000 m3 (41,277 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு43,900,000 m3 (35,590 acre⋅ft)
மேற்பரப்பு பகுதி2.75 km2 (1 sq mi)
இயல்பான ஏற்றம்108.204 மீட்டர்கள் (355.00 அடி)

போத்துண்டி அணை (Pothundi Dam) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் போத்துண்டி கிராமத்திற்கு அருகிலுள்ள பாசன பயன்பாட்டுக்கான அணை ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை இந்தியாவின் பழமையான அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது பாலக்காடு மாவட்டத்தில் 5,470 எக்டேர்கள் (13,500 ஏக்கர்கள்) பரப்பளில் பரவியள்ளது. இந்த அணையானது நெம்மாரா, அயலூர், மெலர்கோடு பஞ்சாயத்துக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறது. [1] மண் அணையின் அசாதாரண அம்சம் அகடு சுவர் ஆகும், இது வெல்லம் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் கட்டப்பட்டுள்ளது. [2]

போத்துண்டி அணை பூங்கா

நீர்த்தேக்கத்தின் கரையில் நடைபெறும் பிரபலமான திருவிழாவானது நெம்மாரா வலெங்கி வேலா விழா என்று அழைக்கப்படுகிறது. [2]

இடவியல்

[தொகு]

இந்த அணையானது அய்லாம்புழா ஆற்றின் துணை ஆறுகளான மீனிச்சிலாடிபுழா மற்றும் பாடிபுழா ஆறுகளுக்கு குறுக்கே போத்துண்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. நெல்லியம்பதி மலைகளின் பின்னணியில் இந்த ஆறுகள் சுமார் 400 மீட்டர் (1,300 அடி) உயரத்தில் இணைகின்றன. இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியான 31 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) பகுதியில் தேக்கு மரங்கள் அடர்த்தியாக கொண்ட காடுகள் நிறைந்துள்ளன. [1] சித்தூர் வட்டத்தில் உள்ள இந்த அணையானது நெம்மாராவிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து 42 கிலோமீட்டர்கள் (26 mi) தொலைவிலும், நெல்லியம்பதியிலிருந்து 17 கிலோமீட்டர்கள் (11 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

வரலாறு

[தொகு]

19 ஆம் நூற்றாண்டில் நீர்ப்பாசனத்திற்காக கட்டப்பட்ட இந்த அணையானது 1971 ஆம் ஆண்டில் ரூ .23.425 மில்லியன் செலவில் முடிக்கப்பட்ட நடுத்தர நீர்ப்பாசன திட்டமாக உருவாக்கப்பட்டது. [1] [3] அணை நீரானது பாசனத் தேவைக்கு மட்டுமல்லாமல் உள்நாட்டு மீன்வளத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Pothundi Irrigation Project JI02682". Government of India. Archived from the original on 2015-05-26.
  2. 2.0 2.1 2.2 "Dams in Kerala". ENVIS Centre Kerala.
  3. "Places Of Tourist Interest". National Informatics Centre. Archived from the original on 2016-05-10.
  4. "3. Kerala". Food and Agricultural organization.

நூலியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போத்துண்டி_அணை&oldid=3621812" இலிருந்து மீள்விக்கப்பட்டது