அன்ஷி தேசியப் பூங்கா
Appearance
அன்ஷி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அன்ஷி தேசியப் பூங்காவிலுள்ள சாலை | |
அமைவிடம் | கர்நாடகம், இந்தியா |
ஆள்கூறுகள் | 15°1′N 74°23′E / 15.017°N 74.383°E |
பரப்பளவு | 340 |
நிறுவப்பட்டது | செப்டம்பர் 2, 1987 |
நிருவாக அமைப்பு | முதன்மை தலைமைக் கானகப் பாதுகாவலர் (காட்டுயிர்), கர்நாடகம் |
www |
அன்ஷி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Anshi National Park) கர்நாடகம் மாநிலத்திலுள்ள வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் சில பகுதிகள் கோவா மாநிலத்திற்கு உட்பட்டவை. இங்கு வங்கப் புலிகள், இந்திய யானைகள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன,
புலிகள் பாதுகாப்புத் திட்டம்
[தொகு]இப்பூங்காவின் 340 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வருகிறது. இத்திட்டம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.[1]
அமைவிடம்
[தொகு]இப்பூங்காவானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 27–927 மீட்டர்கள் உயரம் கொண்டது.
மின் உற்பத்தி
[தொகு]இப்பூங்காவினுள் பல்வேறு நீர்மின் நிலையங்கள் மற்றும் நியூக்ளியர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajendran, S, Karnataka gets its fourth Project Tiger sanctuary, archived from the original on 20 சூலை 2008, பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச்சு 2007
வெளி இணைப்புகள்
[தொகு]- Map National Parks and Wildlife Sanctuaries of Karnataka