உள்ளடக்கத்துக்குச் செல்

அருவிக்குழி அருவி, கோட்டயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருவிக்குழி அருவி (Aruvikkuzhi Waterfalls) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோட்டையம் மாவட்டத்தின், கோட்டயம் நகரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அருவியாகும். கேரளத்தின் பத்தனம்திட்டாவிலும் அருவிக்குழி அருவி என்று இதே பெயரில் அழைக்கப்படும் ஒரு அருவி உள்ளது. பல்லிக்காதோடு கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி உள்ளது. சுமார் 30 அடி உயரம் கொண்டதாகவும் மழைக்காலத்தில் மட்டுமே நீருள்ள அருவியாகவும் இந்த அருவி உள்ளது. கோடை காலத்தில் அருவிக்குழி அருவி ஏறக்குறைய வறண்டு கிடக்கிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tourist Guide to South India. Sura Books. 2003. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174781758.