மலேசிய துணைப் பிரதமர்
மலேசிய துணைப் பிரதமர் Timbalan Perdana Menteri Deputy Prime Minister of Malaysia | |
---|---|
மலேசிய மரபுச் சின்னம் | |
உறுப்பினர் | அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
வாழுமிடம் | செரி சாத்ரியா |
அலுவலகம் | பெர்தானா புத்ராவின் மேற்குப் பகுதி, புத்ராஜாயா |
பரிந்துரையாளர் | மலேசியப் பிரதமர் |
நியமிப்பவர் | சுல்தான் அப்துல்லா மலேசியப் பேரரசர் |
பதவிக் காலம் | பேரரசரின் விருப்பப்படி |
முதலாவதாக பதவியேற்றவர் | அப்துல் ரசாக் உசேன் |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957 |
ஊதியம் | ரிங்கிட் 18,168.15/மாதம்y[1] |
இணையதளம் | www |
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலேசியத் துணைப் பிரதமர் (ஆங்கிலம்: Deputy Prime Minister of Malaysia, மலாய்: Timbalan Perdana Menteri Malaysia; ஜாவி: تيمبلن ڤردان منتري مليسي) என்பது மலேசியாவில் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் பதவியாகும். 1957-இல் உருவாக்கப்பட்ட இந்தப் பதவியில் இதுவரை 13 துணைப்பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர்.
இந்தப் பதவியை முதல் பிரதமராக பதவி வகித்த துங்கு அப்துல் ரகுமான் உருவாக்கினார். இருப்பினும் சில அமைச்சரவைகள் துணைப் பிரதமரை நியமிப்பதைத் தவிர்த்து உள்ளன.
பொது
[தொகு]சூலை 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை 13-ஆவது மலேசிய துணை பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பணியாற்றினார். பிரதமராகப் பதவியேற்பதற்கு முன் 40 நாட்கள் மட்டுமே துணை பிரதமராக இருந்தார். வரலாற்றில் மிகக் குறுகிய காலம் துணைப் பிரதமராக இருந்தவர் என்றும் அறியப்படுகிறார்.[2]
அதிகாரப்பூர்வ இருப்பிடம்
[தொகு]துணைப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் புத்ராஜாயா; ஸ்ரீ சதாரியாவில் (Sri Satria) உள்ளது. முன்பு ஸ்ரீ தாமானில் இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PM and cabinet ministers salary". Archived from the original on 2014-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
- ↑ "Ismail Sabri appointed DPM, Hishammuddin now senior minister". 7 July 2021.