ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் Ibrahim Iskandar of Johor
| |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
17-ஆவது யாங் டி பெர்துவான் அகோங் ஜொகூர் சுல்தான் | |||||||||
2019-இல் இப்ராகிம் | |||||||||
யாங் டி பெர்துவான் அகோங் | |||||||||
ஆட்சிக்காலம் | 31 சனவரி 2024 முதல் | ||||||||
பதவியேற்பு | அறிவிக்கப்படவில்லை | ||||||||
துணை | நசுரின் சா | ||||||||
முன்னையவர் | அப்துல்லா | ||||||||
பிரதமர் | அன்வர் இப்ராகீம் | ||||||||
ஜொகூர் சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 23 சனவரி 2010 முதல் | ||||||||
முடிசூட்டுதல் | 23 மார் 2015 | ||||||||
முன்னையவர் | சுல்தான் இசுகந்தர் | ||||||||
வாரிசு | துங்கு இசுமாயில் | ||||||||
பிறப்பு | 22 நவம்பர் 1958 ஜொகூர் பாரு நகரம், மலாயா | ||||||||
துணைவர் | ஜொகூர் சுல்தானா சரித் சோபியா (தி. 1982) | ||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
மரபு | ஜொகூர் தெமாங்கோங் | ||||||||
தந்தை | சுல்தான் இசுகந்தர் இப்னி அல்மார்கும் சுல்தான் இசுமைல் அல்-கலீதி | ||||||||
தாய் | யோசபீன் ரூபி திரெவொரோ | ||||||||
மதம் | சுன்னி இசுலாம் | ||||||||
இராணுவப் பணி | |||||||||
சார்பு | ஜொகூர் | ||||||||
சேவை/ | ஜோகூர் அரச படைத்துறை | ||||||||
சேவைக்காலம் | 1977 முதல் | ||||||||
தரம் | தளபதி | ||||||||
படைப்பிரிவு | ஜோகூர் படைத்துறை |
சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்கும் சுல்தான் இசுகந்தர் (Sultan Ibrahim ibni Almarhum Sultan Iskandar, மலாய்: سلطان إبراهيم ابن المرحوم سلطان إسکندر; பிறப்பு: 22 நவம்பர் 1958) மலேசியாவின் 17-ஆவதும், தற்போதைய யாங் டி பெர்துவான் அகோங் (மன்னர்) ஆவார், இவர் ஜொகூரின் ஐந்தாவது சுல்தானும் ஆவார்.
இவர் 2024 சனவரி 30 அன்று மலேசியாவின் மன்னராக பதவியேற்றார்.[1] இவர் இந்த ஐந்தாண்டுப் பதவிக்காக 2023 அக்டோபர் 27 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
பொது
[தொகு]பிறப்பு
[தொகு]இப்ராகிம் இசுகந்தர் 1958-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி மலாயா, ஜொகூர், ஜொகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில், அவரின் தாத்தா, ஜொகூர் சுல்தான் சர் இப்ராகிம் மசூர் (Sultan Sir Ibrahim Al-Masyhur ibni Almarhum Sultan Abu Bakar Al-Khalil Ibrahim Shah) ஆட்சியின் போது பிறந்தார்.
இப்ராகிம் இசுகந்தர், ஜொகூர் சுல்தான் இசுகந்தரின் மூன்றாவது பிள்ளை; மற்றும் மூத்த மகன் ஆவார். இப்ராகிம் இசுகந்தரின் தந்தையாரின் பெயர் ஜொகூர் சுல்தான் இசுகந்தர் (Sultan Iskandar ibni Almarhum Sultan Ismail).
இப்ராகிம் இசுகந்தரின் தாயார்
[தொகு]சுல்தான் இசுகந்தர் இசுமாயிலின் முதல் மனைவி ஜோசபின் ரூபி டிரெவோரோ. இங்கிலாந்து, தார்குவே மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்தானியப் பெண்மணி ஆகும். சுல்தான் இசுகந்தர் இசுமாயில் இங்கிலாந்தில் படிக்கும் போது ஜோசபின் ரூபி டிரெவோரோவைச் சந்தித்தார்.[3][4][5][6] 1956-ஆம் ஆண்டில், ஜோசபின் ரூபி டிரெவோரோ, சுல்தான் இசுகந்தரை மணந்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாக கல்சோம் பிந்தி அப்துல்லா என்ற பெயரைப் பெற்றார்.
9 ஜூன் 1962 இல், சுல்தான் இசுகந்தர், சுல்தானா சனாரியாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இசுகந்தர் இசுமாயிலை, ஜோசபின் ரூபி டிரெவோரோ விவாகரத்து செய்தார். பின்னர் ஜோசபின் இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்றார்.[7]
இப்ராகிம் இசுகந்தரின் முப்பாட்டனார் 1959 மே 8 அன்று இலண்டனில் காலமானார். இதனால், இப்ராகிம் இசுகந்தரின் தாத்தா ஜொகூர் சுல்தான் இசுமாயில் அல் கலிடி (Sultan Sir Ismail Al Khalidi) ஜொகூர் சுல்தான் ஆனார். அந்த வகையில், இப்ராகிம் இசுகந்தர் தன் தந்தைக்குப் பிறகு, அரியணை வாரிசு நிலையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். 1968 முதல் 1970 வரை, ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள டிரினிட்டி கிராமர் பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் படிக்க இப்ராகிம் இசுகந்தர் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார்.
இராணுவப் பயிற்சிகள்
[தொகு]இப்ராகிம் இசுகந்தர் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அடிப்படை இராணுவப் பயிற்சிக்காக கோத்தா திங்கியில் உள்ள புலாடா இராணுவப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் உள்ள போர்ட் பென்னிங்; மற்றும் பின்னர் வட கரொலைனாவில் உள்ள போர்ட் பிராக் இராணுவக் கல்லூரிகளில் இராணுவப் பயிற்சிகளையும் பெற்றார்.[8]
இப்ராகிம் இசுகந்தர் 3 சூலை 1981 அன்று ஜொகூர் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.[8] அன்றிலிருந்து இசுதானா பாசிர் பெலாங்கியில் வசித்து வருகிறார்.[9][10] அவர் 26 ஏப்ரல் 1984-இல் இருந்து 25 ஏப்ரல் 1989 வரையில் ஜொகூர் அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். அப்போது அவரின் தந்தை மலேசியாவின் பேரரசராக பணியாற்றினார்.[8][11]
ஜொகூர் சுல்தான் பதவி
[தொகு]22 சனவரி 2010 அன்று இப்ராகிம் இசுகந்தரின் தந்தை சுல்தான் இசுகந்தர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[12] சுல்தான் இசுகந்தர் அதே இரவில் இறந்தார். அடுத்த நாள் காலையில் இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் சுல்தானாகப் பதவியேற்றார்.[13]
இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர் சுல்தானாகப் பொறுப்பெற்ற பின்னர், 30 ஜூன் 2011 அன்று, தஞ்சோங் பாகார் தொடருந்து நிலையத்தில் இருந்து கடைசி தொடருந்தை ஓட்டினார். 1923-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் இடையிலான தொடருந்து பாதையைத் தன் தாத்தா சுல்தான் இசுமாயில் முதன்முதலாகத் திறந்துவிட்டதால், கடைசி தொடருந்தை தான் செலுத்த விரும்புவதாகவும்; அந்த வகையில் கடைசி தொடருந்தை தஞ்சோங் பாகார் தொடருந்து நிலையத்தில் இருந்து வெளியேற்றுவது சாலப் பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.
புதிய அரச நகரமாக மூவார்
[தொகு]சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் 5 பிப்ரவரி 2012 அன்று ஜொகூர் பாருவிற்குப் பதிலாக மூவார் நகரை ஜொகூர் மாநிலத்தின் புதிய அரச தலைநகராக அறிவித்தார்.[14] 22 நவம்பர் 2012 அன்று மூவார் நகரில், சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் தன் பிறந்தநாளைக் கொண்டாடியதன் மூலம், ஜொகூர் பாருவிற்கு வெளியே பிறந்தநாளைக் கொண்டாடிய ஜொகூரின் முதல் ஆட்சியாளர் எனும் சிறப்பையும் பெறுகிறார். மூவார் நகரம் "அமைதியானது, அழகானது மற்றும் முற்போக்கானது; வரலாறு மற்றும் பாரம்பரியம் நிறைந்தது" என்பதால் அவர் அந்த நகரத்தைத் தேர்ந்தெடுத்தாக அறியப்படுகிறது.
மூவார் நகரத்தில் உள்ள அனைத்து பழைய கட்டிடங்களையும் மாநிலப் பாரம்பரிய வளாகங்களாக மாநில அரசு தன் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் கருத்து தெரிவித்தார். பேருந்து மற்றும் வாடகைக்கார் வளாகங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதன் மூலம் சுங்கை மூவார் ஆற்றின் தூய்மையை உள்ளூர் அதிகாரிகள் பாதுகாக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
சுல்தான் இப்ராகிம் இசுகந்தர், 23 மார்ச் 2015 அன்று ஜொகூர் சுல்தானாக முடிசூட்டப்பட்டார்.[15] சுல்தான் இப்ராகிம் இசுகந்தர், மத மிதவாதத்தை ஆதரிப்பதில் குறிப்பிடத்தக்கவர்; மற்றும் மலேசிய முசுலீம் கலாசாரத்தில் அரபுமயமாக்கல் ஏற்படுவதை விமர்சித்துள்ளார்.[16] மலேசியாவில் பட்டப்படிப்பு இல்லாத ஒரே சுல்தானாக இருந்த போதிலும், அவர் ஜொகூர் மாநிலத்திற்கு தரமான கல்வியை வழங்குவதில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.
பேரரசர் பதவி
[தொகு]27 அக்டோபர் 2023 அன்று, மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை, பகாங் சுல்தான் அப்துல்லாவுக்கு பதிலாக இப்ராகிம் இசுகந்தரை 17-ஆவது மலேசிய பேரரசராகத் தேர்ந்தெடுத்தது.[17][18] அதே நேரத்தில், மலேசிய ஆட்சியாளர்களின் மாநாடு, பேராக் சுல்தான் நசுரின் சாவை துணை பேரரசராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுத்தது.[19]
இசுதானா நெகாராவின் அதிகாரப்பூர்வ பேரரசர் பதவிப் பிரமாணம் 31 சனவரி 2024 அன்று நடந்தது.[1]
விருதுகள்
[தொகு]ஜொகூர் விருதுகள்
[தொகு]- - Royal Family Order of Johor (DK I)
- - Order of the Crown of Johor (SPMJ) – Dato' (1980)
- - Order of the Loyalty of Sultan Ismail (SSIJ) – Dato (1990)[20]
- - Order of Sultan Ibrahim of Johor (SMIJ) – Dato' (2015)[21]
- - சுல்தான் இசுமாயில் முடிசூட்டு பதக்கம் (1960)
- - சுல்தான் இசுமாயில் முடிசூட்டு பதக்கம் (1981)
மலேசிய விருதுகள்
[தொகு]- மலேசியா :
- - Order of the Royal Family of Malaysia (2024)
- - Order of the Crown of the Realm (DMN) (2024)
- - Order of the Defender of the Realm (SMN) – Tun (2024)[22]
- - Order of Loyalty to the Crown of Malaysia (2024)
- - Order of Merit (2024)
- - Order of Meritorious Service (2024)
- - Order of Loyalty to the Royal Family of Malaysia (2024)
- கெடா :
- - Royal Family Order of Kedah (DK) (2018)[23]
- கிளாந்தான் :
- - Royal Family Order of Kelantan (DK) (2010)[24]
- - (SPMK) – Dato' (1994)[24]
- நெகிரி செம்பிலான் :
- - Royal Family Order of Negeri Sembilan (DKNS) (2011)[25][26]
- பகாங் :
- - Family Order of the Crown of Indra of Pahang (DK I) (2023)[27]
- - Family Order of the Crown of Indra of Pahang (DK II) (1997)[24]
- பேராக் :
- - Royal Family Order of Perak (DK) (2010)[28]
- பெர்லிஸ் :
- - Perlis Family Order of the Gallant Prince Syed Putra Jamalullail (DK) (2010)
- - Order of the Crown of Perlis (SPMP) – Dato' Seri[24]
- சபா :
- - Order of Kinabalu (SPDK) – Datuk Seri Panglima
- சரவாக் :
- - Order of the Star of Hornbill Sarawak (DP) – Datuk Patinggi (2009)[29]
- சிலாங்கூர் :
- - Royal Family Order of Selangor (DK I) (2010)[30]
- திராங்கானு :
- - Family Order of Terengganu (DK I) (2013)[31]
வெளிநாட்டு விருதுகள்
[தொகு]- பகுரைன் :
- - (Wisam al-Shaikh ‘Isa bin Salman Al Khalifa) - (2017)[32]
- புரூணை :
- - Royal Family Order of the Crown of Brunei (DKMB) – (2014)[33][34]
- - (2017)[35]
- பிலிப்பீன்சு :
- - (GCrS) (Datu) - Order of Sikatuna (2019)[36]
கௌரவ முனைவர் பட்டங்கள்
[தொகு]- சிங்கப்பூர் :
- சட்டத்துறை - சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) – (2022)[37]
- மலேசியா :
- தொழில்நுட்ப இயந்திரவியல் - மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் (UTHM) – (2023)[38]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "65-Year Old Sultan Ibrahim Assumes the Throne as Malaysia's New King". Lokmat Times. Archived from the original on 31 January 2024. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ "Malaysia picks powerful ruler of Johor state as country's new king under rotation system" (in en). அசோசியேட்டட் பிரெசு. 27 October 2023 இம் மூலத்தில் இருந்து 27 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231027172003/https://apnews.com/article/malaysia-king-johor-rotation-c6e942eaa60e18804e12e46c922cead3.
- ↑ Facts on File Yearbook, Published by Facts on File, inc., 1957, Phrase: "Married: Prince Tengku Mahmud, 24, grandson of the Sultan of Johore, & Josephine Ruby Trevorrow, 21, daughter of an English textile..."
- ↑ Morris (1958), pg 244
- ↑ Information Malaysia: 1985
- ↑ The International Who's Who 2004, pp. 827
- ↑ Morais (1967), pg 198
- ↑ 8.0 8.1 8.2 Karim, Tate (1989), pp. 572
- ↑ Magnificent abode for royalsபரணிடப்பட்டது 5 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம், Fauziah Ismail, JohorBuzz, New Straits Times
- ↑ Day of fun and feasting, TEH ENG HOCK and MEERA VIJAYAN, 15 October 2007, The Star (Malaysia)
- ↑ Thanam Visvanathan, Ruler with deep concern for people–Sultan Iskandar revered as protective guardian and helpful to all his subjects, pg 1, 8 April 2001, New Sunday Times Special (Sultan of Johor's Birthday)
- ↑ Tunku Mahkota Johor Appointed Regent Effective Today பரணிடப்பட்டது 4 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம், 22 January 2010, Bernama
- ↑ Tunku Ibrahim Ismail Proclaimed As Sultan Of Johor பரணிடப்பட்டது 26 சனவரி 2010 at the வந்தவழி இயந்திரம் 22 January 2010, Bernama
- ↑ ABDULLAH, HAMDAN RAJA (25 November 2012). "Muar declared as royal town of Johor". The Star (Malaysia). Archived from the original on 1 February 2024. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ "Coronation of Johor Sultan". The Star (Malaysia). 23 March 2015 இம் மூலத்தில் இருந்து 25 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150325165805/http://www.thestar.com.my/News/Nation/2015/03/23/Storify-Johor-Coronation/.
- ↑ "Malaysian democrats pin their hopes on the country's royals". The Economist. 28 January 2017 இம் மூலத்தில் இருந்து 4 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170204110337/http://www.economist.com/news/asia/21715699-they-make-unlikely-saviours-malaysian-democrats-pin-their-hopes-countrys-royals.
- ↑ "Sultan Ibrahim of Johor to be appointed Malaysia's king, 34 years after his father's reign". Channel News Asia. 27 October 2023 இம் மூலத்தில் இருந்து 27 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231027092249/https://www.channelnewsasia.com/asia/sultan-johor-next-malaysia-king-ydpa-agong-monarchy-3876646.
- ↑ "Malaysian sultans choose new king in unique rotational monarchy". Al Jazeera. 27 October 2023 இம் மூலத்தில் இருந்து 27 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231027101526/https://www.aljazeera.com/news/2023/10/27/malaysian-sultans-choose-new-king-in-unique-rotational-monarchy#:~:text=The%20Yang%20di%2DPertuan%20Agong%20or%20“King%20of%20Kings”,more%20active%20role%20in%20politics..
- ↑ "Johor Ruler Sultan Ibrahim is new Agong for five years from January 31, 2024; Perak's Sultan Nazrin named as deputy". Malay Mail. 27 October 2023 இம் மூலத்தில் இருந்து 27 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231027080621/https://www.malaymail.com/news/malaysia/2023/10/27/johor-ruler-sultan-ibrahim-is-new-agong-to-serve-five-years-from-january-31-2024-peraks-sultan-nazrin-is-deputy-agong/98675.
- ↑ See photo
- ↑ "Laman Web Rasmi Kemahkotaan DYMM Sultan Ibrahim, Sultan Johor". kemahkotaan.johor.gov.my. 30 March 2015. Archived from the original on 27 January 2021. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
- ↑ "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1987" (PDF). Archived from the original (PDF) on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2016.
- ↑ DK (Kedah) பரணிடப்பட்டது 14 ஏப்பிரல் 2018 at the வந்தவழி இயந்திரம் The Star
- ↑ 24.0 24.1 24.2 24.3 "Penerima Darjah Kebesaran, Bintang, dan Pingat Persekutuan". Archived from the original on 22 March 2019. பார்க்கப்பட்ட நாள் 15 June 2016.
- ↑ DKNS – Articles in Malay 1 : 1 பரணிடப்பட்டது 13 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம், 3. Utusan (with photo) பரணிடப்பட்டது 2 மார்ச்சு 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Maintenance Page" (PDF). Archived from the original on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 13 March 2021.
- ↑ King confers DK Pahang Award on Johor Sultan, receives DK Johor Award பரணிடப்பட்டது 9 திசம்பர் 2023 at the வந்தவழி இயந்திரம் The Star
- ↑ Sultan of Perak 82nd birthday honours list பரணிடப்பட்டது 26 சனவரி 2024 at the வந்தவழி இயந்திரம் The Star
- ↑ Tunku Mahkota Johor dahului senarai penerima darjah kebesaran Sarawak பரணிடப்பட்டது 22 நவம்பர் 2023 at the வந்தவழி இயந்திரம் Mstar
- ↑ "DK I 2010". awards.selangor.gov.my. Archived from the original on 30 September 2023. பார்க்கப்பட்ட நாள் 22 September 2023.
- ↑ "Johor Sultan Heads Terengganu Honours List" (PDF). Archived from the original (PDF) on 9 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.
- ↑ "Johor Ruler receives Bahrain's highest award". The Star Online. 26 November 2017 இம் மூலத்தில் இருந்து 9 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201109010150/https://www.thestar.com.my/news/nation/2017/11/26/johor-sultan-receives-bahrain-highest-award/.
- ↑ 柔佛苏丹依布拉欣 获陛下颁赠DKMB勋章, Article in Chinese பரணிடப்பட்டது 12 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Their Majesties in Johor for DKMB Conferment Ceremony". Borneo Post. 9 November 2014 இம் மூலத்தில் இருந்து 23 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201023031732/https://www.theborneopost.com/2014/11/09/their-majesties-in-johor-for-dkmb-conferment-ceremony/.
- ↑ "Brunei sultan to mark 50 years on throne with lavish celebrations". New Straits Times. AFP. 5 October 2017 இம் மூலத்தில் இருந்து 8 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191108090448/https://www.nst.com.my/world/2017/10/287447/brunei-sultan-mark-50-years-throne-lavish-celebrations.
- ↑ "Sultan of Johor receives order of Sikatuna from Philippine President". Bernama. 10 July 2019 இம் மூலத்தில் இருந்து 25 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190725152426/http://www.bernama.com/en/news.php?id=1744784.
- ↑ Mohan, Matthew (21 July 2022). "Johor Sultan awarded honorary degree by NUS during visit to Singapore". Channel NewsAsia. Archived from the original on 22 July 2022. பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.
- ↑ Shah, Mohd Farhaan (2 December 2023). "Johor Sultan receives honorary PhD from UTHM". The Star. Archived from the original on 2 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Ibrahim Ismail of Johor தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Official profile
- Official website of his coronation on 23 March 2015