மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை
Appearance
மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை Attorney General's Chambers Jabatan Peguam Negara Malaysia جابتن ڤڬوام نڬارا | |
மலேசிய மரபுச் சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1946 |
வகை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | 45, பெர்சியாரான் பெர்டானா, வளாகம் 4, பெர்டானா புத்ரா, மத்திய அரசு நிர்வாக மையம் புத்ராஜெயா மலேசியா |
பணியாட்கள் | 1,974 (2024)[1] |
ஆண்டு நிதி | RM 241,567,100 (2024 - 2025)[1] |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | மலேசியப் பிரதமர் துறை |
வலைத்தளம் | www |
மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை அல்லது அட்டர்னி ஜெனரல் துறை (ஆங்கிலம்: Attorney General's Chambers; மலாய்: Jabatan Peguam Negara Malaysia; சீனம்: 总检察长办公室) என்பது மலேசிய தலைமை வழக்குரைஞர் தலைமையிலான அரசு நிறுவனம் ஆகும்.
மலேசிய அரசாங்கத்தின் சட்டம் தொடர்பான பொறுப்புகள்; குற்றவியல் வழக்குகளைக் கையாளுதல்; முன்வரைவு சட்டங்களைத் தயாரித்தல்; மற்றும் அரசாங்கம் தொடர்பான குடியியல் (சிவில்) வழக்குகளை நிர்வகித்தல்; போன்றவற்றுக்கு இந்தத் துறை பொறுப்பு வகிக்கிறது.
குறிக்கோள்
[தொகு]இந்தத் துறையின் முதன்மைக் குறிக்கோள் என்பது அனைத்துக் கட்டங்களிலும் தரமான சேவைகளை வழங்குதல்; தரமான சட்டங்களை வழங்குதல்; மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி திறமையாகவும், நியாயமாகவும், சமமாகவும் செயல்படுவதே ஆகும்.
செயல்பாடுகள்
[தொகு]- மத்திய அரசு; மற்றும் மாநில அரசுகளுக்கு பன்னாட்டுச் சட்டத்துறை, சரியா (Syariah) சட்டத் துறைகளில் அறிவுரைச் சேவைகளை வழங்குதல்
- சட்டச் சிக்கல்கள் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு சட்ட நிலையிலான சான்றுகளை வழங்குதல்
- மத்திய அரசிற்கான அனைத்துச் சட்டங்களையும் உருவாக்குதல்.
- குற்றத் தண்டனைக்குரிய (Criminal) வழக்குகளில் வழிமுறைகளை வழங்குதல்
- அரசாங்கத்தின் அனைத்து குடியியல் (Civil) வழக்குகளில் பங்கேற்பது
- சட்டத் திருத்தங்கள் மற்றும் சட்ட மறுபதிப்புகளை நிர்வகித்தல்; மற்றும் சட்ட சீர்திருத்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல்
மேலும் காண்க
[தொகு]- மலேசிய தலைமை வழக்குரைஞர்
- மலேசிய அரசியலமைப்பு
- மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவு
- மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022
- மலேசிய சட்டம் 1963
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Attorney General's Chambers 2024" (PDF). Attorney General's Chambers. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- Attorney General's Chambers of Malaysia பரணிடப்பட்டது 30 திசம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்
- Malaysian Judiciary
- Malaysian Bar Council