மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர்
மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர் Minister of Energy Transition and Water Transformation Menteri Peralihan Tenaga dan Transformasi Air Malaysia | |
---|---|
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு | |
சுருக்கம் | PETRA |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 |
முதலாமவர் | இசுமாயில் அப்துல் ரகுமான் (Ismail Abdul Rahman) (இயற்கை வளத்துறை அமைச்சர்) |
இணையதளம் | www |
மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Energy Transition and Water Transformation; மலாய்: Menteri Peralihan Tenaga dan Transformasi Air Malaysia) என்பவர் மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். இந்த அமைச்சு மலேசிய இயற்கை வளங்கள், எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சில் இருந்து பிரிந்ததன் விளைவாக, 2023 டிசம்பர் 12-ஆம் தேதி, புதிதாக இந்த அமைச்சு உருவாக்கப்பட்டது.[1]
மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சர், மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்குத் துணை அமைச்சர் ஒருவர் உதவியாக உள்ளார். மலேசிய ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் மூலமாகத் தன் அமைச்சை நிர்வகித்து வருகிறார்.
பொது
[தொகு]இந்த அமைச்சு மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றங்களைக் கவனிக்கும் அரசு அமைப்பாகும். சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களைத் திட்டமிடுவது; ஊக்குவிப்பது; ஒருங்கிணைப்பது; இந்த அமைச்சின் தலைமை நோக்கமாகும்.
மேலும் மலேசியக் காடுகளில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது; பாதுகாப்பது; காடு வளர்ப்பது; நிலச் சீரழிவுகளைத் தணிப்பது; போன்றவை இந்த அமைச்சின் குறிப்பிடத்த செயல்பாடுகள் ஆகும். அத்துடன் மலேசியாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர்களின் பட்டியல்
[தொகு]எரிசக்தி/ஆற்றல் மாற்றத் துறை அமைச்சர்கள்
[தொகு]எரிசக்தி/ஆற்றல் மாற்றத் துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் சரவாக் கூட்டணி சபா மக்கள் கூட்டணி
தோற்றம் | பெயர் (பிறப்பு - இறப்பு) |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | # | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
அப்துல் கனி கிலாங் Abdul Ghani Gilong (1932–2021) |
கூட்டணி (ஐக்கிய சபா தேசிய அமைப்பு) |
பணிகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் | 1972 | 1974 | அப்துல் ரசாக் உசேன் (I) | |||
முகமது யாக்கோப் Mohamed Yaacob (1926–2009) |
பாரிசான் (அம்னோ) | எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் | 1974 | 1976 | அப்துல் ரசாக் உசேன் (II) | |||
லியோ மோகி Leo Moggie Irok (b. 1941) |
பாரிசான் (சரவாக் டயாக் மக்கள் கட்சி) |
எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சர் | 1978 | 15 ஜூன் 1989 | உசேன் ஓன் (II) மகாதீர் முகமது (I · II · III) | |||
ச. சாமிவேலு Samy Vellu (1937–2022) |
பாரிசான் (மஇகா) | 15 ஜூன் 1989 | 3 மே 1995 | மகாதீர் முகமது (III · IV) | ||||
லியோ மோகி Leo Moggie Irok (பிறப்பு. 1941) |
பாரிசான் (சரவாக் டயாக் மக்கள் கட்சி) |
எரிசக்தி, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் | 4 மே 1995 | 14 டிசம்பர் 1999 | மகாதீர் முகமது (V) | |||
எரிசக்தி, நீர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் | 15 டிசம்பர் 1999 | 26 மார்ச் 2004 | மகாதீர் முகமது (VI) அப்துல்லா அகமது படாவி (I) | |||||
லிம் கெங் எய்க் Lim Keng Yaik (1939–2012) |
பாரிசான் (கெராக்கான்) | 27 மார்ச் 2004 | 18 மார்ச் 2008 | அப்துல்லா அகமது படாவி (II) | ||||
சசிமான் அபு மன்சூர் Shaziman Abu Mansor (பிறப்பு. 1964) |
பாரிசான் (அம்னோ) | 19 மார்ச் 2008 | 9 ஏப்ரல் 2009 | அப்துல்லா அகமது படாவி (III) | ||||
பீட்டர் சின் பா குய் Peter Chin Fah Kui (பிறப்பு. 1945) |
பாரிசான் (சரவாக் மக்கள் கட்சி) | எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர்வள அமைச்சர் | 10 ஏப்ரல் 2009 | 15 மே 2013 | நஜீப் ரசாக் (I) | |||
மெக்சிமஸ் ஓங் கி லீ Maximus Ongkili (பிறப்பு. 1953) |
பாரிசான் (ஐக்கிய சபா கட்சி) | 16 மே 2013 | 9 மே 2018 | நஜீப் ரசாக் (II) | ||||
இயோ பி இன் Yeo Bee Yin (பிறப்பு. 1983) |
பாக்காத்தான் (ஜசெக) | எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் | 2 ஜூலை 2018 | 24 பிப்ரவரி 2020 | மகாதீர் முகமது (VII) | |||
சம்சுல் அனுவார் நசரா Shamsul Anuar Nasarah (பிறப்பு. 1967) |
பாரிசான் (அம்னோ) | எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் | 10 மார்ச் 2020 | 3 ஆகஸ்ட் 2021 | முகிதீன் யாசின் (I) | |||
தகியுடின் அசன் Takiyuddin Hassan (பிறப்பு. 1961) |
பெரிக்காத்தான் (பாஸ்) | 30 ஆகஸ்ட் 2021 | 24 நவம்பர் 2022 | இசுமாயில் சப்ரி யாகோப் (I) | ||||
பட்லி யூசோப் Fadillah Yusof (பிறப்பு. 1962) |
சரவாக் கூட்டணி (பூமிபுத்ரா கட்சி) | எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சர் | 12 டிசம்பர் 2023 | 7 பிப்ரவரி 2024 | அன்வார் இப்ராகிம் (I) | |||
ஆற்றல் மாற்றம் மற்றும் நீர் மாற்றத் துறை அமைச்சர் | 7 பிப்ரவரி 2024 | பதவியில் உள்ளார் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New ministry a part of govt's focus on renewable energy, says deputy minister". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-13.