ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்
சிறீ சத்ய சாய் மாவட்டம்
శ్రీ సత్య సాయి జిల్లా (தெலுங்கு) | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை பகுதி |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
பெயர்ச்சூட்டு | சத்திய சாயி பாபா |
தலைமையிடம் | புட்டபர்த்தி |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | ஸ்ரீ பி.பசந்த் குமார் , இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர் | ஸ்ரீ ராகுல் தேவ் சிங் , இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,771 km2 (3,000 sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | srisathyasai |
சிறீ சத்ய சாய் மாவட்டம் (Sri Sathya Sai district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் அனந்தப்பூர் மாவட்டத்தின் தர்மாவரம், பெனுகொண்டா, கதரி மற்றும் புதிதாக நிறுவப்பட்ட புட்டபர்த்தி வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[1][2]
சத்திய சாயி பாபா நினைவாக நிறுவப்பட்ட ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் 7,771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், 17.22 இலட்சம் மக்கள் தொகையையும், 6 சட்டசபை தொகுதிகளையும், 3 வருவாய் கோட்டங்களையும் கொண்டுள்ளது.[3]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]7,771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 32 மண்டல்களும், தர்மாவரம், இந்துப்பூர், புட்டபர்த்தி மற்றும் கதிரி எனும் 4 நகராட்சிகளும் மற்றும் 425 ஊராட்சிகளும் கொண்டது.
மண்டல்கள்
[தொகு]# | தர்மாவரம் வருவாய் கோட்டம் | கதிரி வருவாய் கோட்டம் | புட்டபர்த்தி வருவாய் கோட்டம் | பெனுகொண்டா வருவாய் கோட்டம் |
---|---|---|---|---|
1 | தர்மாவரம் | கதிரி | புக்கப்பட்டினம் | பெனுகொண்டா |
2 | பத்தலப்பள்ளி | தலுபுலா | கொத்தசெருவு | சோமன்டேபள்ளி |
3 | தடிமர்ரி | நம்புலபுலகுந்தா | புட்டபர்த்தி | ரோத்தம் |
4 | முதிகுப்பா | கண்டலபெண்டா | நல்லமாதா | இந்துப்பூர் |
5 | இராமகிரி | நல்லாச்செருவு | ஓபுளாதேவராச்செருவு | சில்மாத்தூர் |
6 | கனகனபள்ளி | தனக்கல்லு | கொரந்தலா | மதகாசிரா |
7 | சென்னை கொத்தப்பள்ளி | அமதகுரு | பரிகி | |
8 | லேபட்சி | |||
9 | குடிபண்டா | |||
10 | ரோல்லா | |||
11 | அமராபுரம் | |||
12 | அகாலி |
அரசியல்
[தொகு]ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:
- இந்துப்பூர் (மக்களவை தொகுதி)
சட்டமன்றத் தொகுதிகள்:[4]
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | பெயர் | ( SC / ST /எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | நாடாளுமன்றம் தொகுதி உள்ளன |
---|---|---|---|---|
156 | 275 | மடகாசிரா | SC | இந்துப்பூர் (மக்களவை தொகுதி) |
157 | 276 | இந்துப்பூர் | இல்லை | |
158 | 277 | பெனுகொண்டா | ||
159 | 278 | புட்டபர்த்தி | ||
160 | 279 | தர்மாவரம் | ||
161 | 280 | கதிரி |