இந்தியாவில் தொலைபேசி எண்கள்
அமைவிடம் | |
---|---|
நாடு | இந்தியத் |
கண்டம் | ஆசியா |
அணுக்க குறியெண்கள் | |
நாட்டை அழைக்க | +91 |
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு | 00 |
வெளியூர் முன்னொட்டு | 0 |
அழைப்பு திட்டம் | |
வகை | பொது |
நிலவழி எண்கள்
[தொகு]எஸ்.டி.டி கோடு எனப்படும் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு நகரத்துக்கும், கிராமத்துக்கும் நிலையாக வழங்கப்பட்டிருக்கும். பெரிய நகரங்களுக்கு இரண்டு இலக்க எண்களும், பேரூர்களுக்கு மூன்று இலக்க எண்களும், சிற்றூர்களுக்கு நான்கு இலக்க எண்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.[1]
- பெருநகரங்களுக்கான முன்னொட்டு எண்கள்
- 11 - புது தில்லி, தில்லி
- 22 - மும்பை, மகாராட்டிரம்
- 33 - கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- 44 - சென்னை, தமிழ்நாடு
- 40 - ஐதராபாத், தெலுங்கானா
- 80 - பெங்களூர், கருநாடகம்
- 20 - புனே, மகாராட்டிரம்
- 79 - அகமதாபாத், குசராத்து
இரண்டாம் நிலை நகரங்களுக்கான தொலைபேசி முன்னொட்டு எண்கள். இவை மூன்று இலக்கத்தை உடையவை.
- 135 - தேராதூன், உத்தராகண்டம்
- 161 - லூதியானா, பஞ்சாப் பகுதி
- 175 - பட்டியாலா, பஞ்சாப் பகுதி
- 141 - செய்ப்பூர், இராசத்தான்
- 291 - சோத்பூர், இராசத்தான்
- 294 - உதயப்பூர், இராசத்தான்
- 251 - கல்யாண், மகாராட்டிரம்
- 260 - வாப்பி, குசராத்து
- 261 - சூரத்து, குசராத்து
- 265 - வடோதரா, குசராத்து
- 326 - தன்பாத், சார்க்கண்ட்
- 361 - குவகாத்தி, அசாம்
- 364 - சில்லாங், மேகாலயா
- 413 - புதுச்சேரி நகரம், புதுச்சேரி
- 421 - திருப்பூர், தமிழ்நாடு
- 422 - கோயம்புத்தூர், தமிழ்நாடு
- 424 - ஈரோடு, தமிழ்நாடு
- 427 - சேலம், தமிழ்நாடு
- 431 - திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
- 452 - மதுரை, தமிழ்நாடு
- 471 - திருவனந்தபுரம், கேரளம்
- 474 - கொல்லம், கேரளம்
- 484 - கொச்சி, கேரளம்
- 487 - திருச்சூர், கேரளம்
- 495 - கோழிக்கோடு, கேரளம்
- 497 - கண்ணூர், கேரளம்
- 532 - அலகாபாத், உத்தரப் பிரதேசம்
- 512 - கான்பூர், உத்தரப் பிரதேசம்
- 522 - இலக்னோ, உத்தரப் பிரதேசம்
- 542 - வாரணாசி, உத்தரப் பிரதேசம்
- 551 - கோரக்பூர், உத்தரப் பிரதேசம்
- 101 - மவூ, உத்தரப் பிரதேசம்
- 612 - பட்னா, பீகார்
- 674 - புவனேசுவரம், ஒடிசா
- 712 - நாக்பூர், மகாராட்டிரம்
- 731 - இந்தோர், மத்தியப் பிரதேசம்
- 734 - உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
- 744 - கோட்டா, இராசத்தான்
- 751 - குவாலியர், மத்தியப் பிரதேசம்
- 755 - போபால், மத்தியப் பிரதேசம்
- 761 - ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
- 816 - தும்கூர், கருநாடகம்
- 821 - மைசூர், கருநாடகம்
- 824 - மங்களூர், கருநாடகம்
- 831 - பெல்காம், கருநாடகம்
- 836 - ஹுப்பள்ளி-தார்வாடு, கருநாடகம்
- 861 - நெல்லூர், ஆந்திரப் பிரதேசம்
- 863 - குண்டூர், ஆந்திரப் பிரதேசம்
- 866 - விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
- 877 - திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்
- 883 - ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்
- 884 - காக்கிநாடா, ஆந்திரப் பிரதேசம்
- 870 - வாரங்கல், தெலுங்கானா
- 891 - விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
லேண்டுலைன் எனப்படும் நிலவழித் தொலைபேசி எண்கள் பத்து இலக்கங்களை கொண்டவை.
நிலவழித் தொலைபேசி எண்களின் முதல் பாகம் அந்த ஊருக்கான எண்ணாகவும், இரண்டாம் பாகம் அந்த தொலைபேசிக்கான எண்ணாகவும் இருக்கும். தொலைபேசிக்கான முதல் இலக்கம் நிறுவனத்தை அடையாளம் காண உதவும். 020-30303030 என்ற எண்ணில், 020 என்பது புனேவையும், 3 என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தையும், மற்ற எண்கள் தொலைபேசியையும் குறிக்கின்றன.
தொலைபேசியின் முதல் எண்
- 2 - பிஎஸ்என்எல், மகாநகர் டெலிபோன் நிகம்
- 3 - ரிலையன்ஸ் கம்யூனிகேசன்
- 4 - ஏர்டெல்
- 6 - டாட்டா டெலிசர்விசசு
ஒரே ஊரில் இருந்து அவ்வூரில் உள்ள மற்றொரு எண்ணை அழைக்க முன்னொட்டு எண் தேவையில்லை. மற்றொரு ஊரில் உள்ள தொலைபேசியில் இருந்து அழைக்கும்பொழுது, ஊரின் முன்னொட்டு எண்ணையும் சேர்க்க வேண்டும். கைபேசிகளில் இருந்து பேசினால், எண்களுக்கு முன்னர் 0 இட்டு அழைக்க வேண்டும்.
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ இந்தியாவில் உள்ள ஊர்களுக்கான எஸ்.டி.டி எண்கள் - பி.எஸ்.என்.எல்
- ↑ "TRAI for 10-digit landline numbers to meet crunch". Archived from the original on 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.