உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விவேக் (நகைச்சுவை நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விவேக்
2019 இல் விவேக்
பிறப்புவிவேகானந்தன்[1][2]
(1961-11-19)19 நவம்பர் 1961 [3]
சங்கரன்கோவில், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு17 ஏப்ரல் 2021(2021-04-17) (அகவை 59) [4]
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், சமூக செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987–2021
பெற்றோர்அங்கையா, மணியம்மாள்
வாழ்க்கைத்
துணை
அருள்செல்வி
பிள்ளைகள்அமிர்தா நந்தினி
தேஜசுவினி
பிரசன்னா குமார் (இ. 2015)
விருதுகள்பத்மசிறீ (2009)
மதிப்புறு முனைவர் பட்டம் (2015)

விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021)[5] தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

பிறப்பு

இவர் 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார்.[6] விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு.[7] இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.[8] ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார்.[7] சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார்.[7] ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர்.[7] மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்காற்றினார். சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது.[7] இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர் தனது மனதில் உறுதி வேண்டும் (1987) படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார்.[7] அதன் பின்னர், சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க, கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் குடியேறினார்.[7] அருட்செல்வி என்பவரைத் திருமணம் முடித்து அமிர்தா நந்தினி, தேஜசுவினி,[7] பிரசன்னா குமார் (இறப்பு: 2015 அக்டோபர் 29) என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

திரைப்பட வாழ்க்கை

1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலப்படுத்தியது.

இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.[9]

விருதுகள்

விஜய் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

தமிழக அரசு விருதுகள்

மற்ற விருதுகள்

  • சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
  • சிறப்பு சான்றாயர் விருது - ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
  • சிறந்த ஆண் நகைச்சுவை விருது - எடிசன் விருதுகள்
  • சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல்
    பண்பலை வானொலி விருதுகள்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)

நன்மதிப்பு

திரைப்படங்கள்

நடிகராக

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1987 மனதில் உறுதி வேண்டும் அறிமுகம்
1989 புதுப்புது அர்த்தங்கள் விட்டல்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1990 ஒரு வீடு இரு வாசல்
புது மாப்பிள்ளை
கேளடி கண்மணி
1991 இதய வாசல்
புத்தம் புது பயணம்
ஜென்ம நட்சத்திரம்
எம் ஜி ஆர் நகரில்
அன்பு சங்கிலி
இதய ஊஞ்சல்
நண்பர்கள்
1992 வெற்றி முகம்
உரிமை ஊஞ்சலாடுகிறது
தம்பி பொண்டாட்டி
கிழக்கு வீதி
கலி காலம்
புதுசா படிக்கிறேன்
இன்னிசை மழை
1993 உழைப்பாளி
பாஸ் மார்க்
பட்டுக்கோட்டை பெரியப்பா
1994 வீரா (1994)
புதிய மன்னர்கள்
வாச்மென் வடிவேல்
வனஜா கிரிஜா
வா மகளே வா
வாங்க பாட்னார் வாங்க
நம்ம அண்ணாச்சி
பொங்கலோ பொங்கல்
எங்க முதலாளி பாண்டுரங்கன்
1995 நந்தவனத் தெரு
மாயாபஜார் 1995
தாயகம்
தொட்டில் குழந்தை
முத்துக் குளிக்க வாரீயளா
இளைய ராகம் சாமி
காந்தி பிறந்த மண்
பெரிய இடத்து மாப்பிள்ளை
1996 காலமெல்லாம் காதல் வாழ்க
மைனர் மாப்பிள்ளை கிச்சா
அவதாரப் புருசன்
எனக்வொரு மகன் பிறப்பான்
சுபாஷ்
1997 நேருக்கு நேர்
தினமும் என்னைக் கவனி பாலராமன்
பகைவன்
சிஷ்யா
பெரிய இடத்து மாப்பிள்ளை ராமு
1998 காதல் மன்னன்
மறுமலர்ச்சி நாகராஜன்
காதலே நிம்மதி
உன்னுடன்
சொல்லாமல்
கண்ணெதிரே தோன்றினாள்
அரிச்சந்திரா
நாம் இருவர் நமக்கு இருவர் பார்த்தசாரதி
1999 நினைவிருக்கும் வரை
பூமகள் ஊர்வலம் சக்தி
வாலி விக்கி
ஒருவன்
விரலுக்கேத்த வீக்கம் ராமனாதன்
உனக்காக எல்லாம் உனக்காக மதி
முகம்
அதான்டா இதான்டா புண்ணியகோடி
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
உன்னருகே நானிருந்தால் வெற்றி: சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
ஆசையில் ஒரு கடிதம் ராமலிங்கம்

2000'களில்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் அடிக்குறிப்புகள்
2000 திருநெல்வேலி
ஏழையின் சிரிப்பில் அரசு
சுதந்திரம் சுர்புரா
தை பொறந்தாச்சு குட்டி
முகவரி ரமேசு
அலைபாயுதே
சந்தித்த வேளை
கந்தா கடம்பா கதிர்வேலா
குஷி விக்கி
கரிசக்காட்டு பூவே
பெண்ணின் மனதை தொட்டு கந்தசாமி
டபுள்ஸ்
உன்னைக் கண் தேடுதே
பட்ஜெட் பத்மநாபன் கிருஷ்ணன்
கண்டேன் சீதையை
பாளையத்து அம்மன் கல்யாணராமன்
பிரியமானவளே
சீனு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
2001 லூட்டி தியாகராஜன்
நாகேஸ்வரி
மின்னலே சொக்கலிங்கம்
எங்களுக்கும் காலம் வரும் சந்தோஷ்
குட்டி
உள்ளம் கொள்ளை போகுதே
டும் டும் டும் ஜிம்
சூப்பர் குடும்பம் ஹரி
பத்ரி அழகு
மிடில் கிளாஸ் மாதவன் மணிமாறன்
லவ்லி அழகேஷ் (அல் கேட்ஸ்)
தில் 'மெகாசீரியல்' மாதவன்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி ராமமூர்த்தி
பூவெல்லாம் உன் வாசம் வரதன்
அள்ளித்தந்த வானம் தமிழ் கிறுக்கன்
12 பி மதன்
ஷாஜகான் பூபதி
மனதை திருடிவிட்டாய் வளையாபதி
பார்த்தாலே பரவசம்
மஜ்னு மனோ
வடுகப்பட்டி மாப்பிள்ளை
2002 விவரமான ஆளு 'சூட்கேஸ்' சுப்பு
அழகி டாக்டர் தேசிங்கு
ரோஜாக்கூட்டம் ஆறுமுகம்
தமிழன் நந்தகுமார்
கோட்டை மாரியம்மன்
தென்காசிப்பட்டிணம் மாணிக்கம் பிள்ளை என்ற மாப்பிள்ளை
ஷக்கலக்க பேபி
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே சுப்பு
யூத் கருத்து கந்தசாமி
ரன் மோகன் வெற்றி, சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, தமிழக அரசின் சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது
வெற்றி, ஐ. டி. எப். ஏ. சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது
நம்ம வீட்டு கல்யாணம்
யுனிவர்சிட்டி 'ஆல்தோட்ட' பூபதி
காதல் வைரஸ் புதிர்
2003 காதல் சடுகுடு 'சூப்பர்' சுப்பு
பாப் கார்ன்
சாமி வெங்கட்ராமன் வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, ஐ. டி. எப். ஏ. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
அன்பே அன்பே
பார்த்திபன் கனவு மனோ வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது
லேசா லேசா சந்துரு
விசில் சகாதேவன்
ஐஸ் புலிகேசி
காதல் கிசு கிசு தமிழ் செல்வன்
தித்திக்குதே 'பஞ்ச்' பாலா
திரீ ரோசஸ் சங்கர்
தென்னவன் 'தாதா' மணி
தூள் நாராயணசுவாமி (நரேன்)
பாய்ஸ் சுந்தரம் (மங்களம் சார்)
அலை மதன்
திருமலை பழனி
எனக்கு 20 உனக்கு 18 கபில்
ஜூட் சிவா
2004 உதயா பஷீர்
எதிரி 'ஆட்டோ' சம்பத்
பேரழகன் குழந்தை வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
செல்லமே ஹரிச்சந்திரா
அரசாட்சி
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி கணேஷ்
2005 தக திமி தா விவேக்
கனா கண்டேன் சிவராமகிருஷ்ணன்
அந்நியன் சாரி வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது
அன்பே வா
வணக்கம் தலைவா ஏரிச்சாமி
2006 சரவணா வி. சி. தாமோதரன்
ஆதி புல்லட் வெற்றி, விஜய் விருதுகள் - சிறந்த நகைச்சுவை நடிகர்
பரமசிவன் அக்னிபுத்திரன்
மதராசி பாண்டி
கள்வனின் காதலி
திருட்டு பயலே யோகராசா
மது மதன்
நீ வேணும்டா செல்லம் ரேணிகுண்டா ரெட்டி
ஜாம்பவான் டாக்டர் சுபாஷ்
2007 ஆழ்வார் பொன்ஸ்
அகரம்
சிவாஜி அறிவு வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது
துள்ளல் முத்து
வீராப்பு ரத்தன்
கிரீடம்
உற்சாகம் அய்யனார்குடி ராஜா
பசுபதி மே / பா. ராசக்காபாளையம் தாஸ்
2008 தூண்டில் மேக்
சண்டை மணி, நாட்டாமை
சிங்கக்குட்டி பாலு
குருவி ஆப்ஸ் வெற்றி, ITFA சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
ஆயுதம் செய்வோம் கந்தசாமி
ஜெயம் கொண்டான் கோபால்
துரை 'அறுசுவை' அம்பி
பொம்மலாட்டம் மதுரை
2009 படிக்காதவன் 'அசால்ட்' ஆறுமுகம் பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
பெருமாள் இடிதாங்கி, இந்திராசேனா ரெட்டி
1977 பரமன்
குரு என் ஆளு அழகப்பன் வெற்றி, எடிசன் விருதுகள் - சிறந்த நகைச்சுவை நடிகர்
இந்திர விழா 'ஒப்பிலா' மணி
ஐந்தாம் படை தாந்தோணி
அந்தோனி யார்? கிங்பிஷர்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2010 தம்பிக்கு இந்த ஊரு 'சோல' குமார் [11]
சிவப்பு மழை [12]
மகனே என் மருமகனே 'சிங்கபட்டி' சிங்காரம் [13]
சிங்கம் 'ஏட்டு' எரிமலை [14]
பெண் சிங்கம் திருப்பதி [15]
பலே பாண்டியா லண்டன் [16]
வாடா எம்.ஆர்.ராதா கிருஷ்னா
உத்தம புத்திரன் ஏகாம்பரம் [17]
2011 சீடன் கிம்பிடி சாமி [18]
பவானி ஐ. பி. எஸ் கிரிவலம்
மாப்பிள்ளை குழந்தை சின்னா [19]
ஒரு நுனாக்காத இன்ஸ்பக்டர் சிங்கம் மலையாளம் திரைப்படம்
வெடி வருன் சன்தோஸ் [20]
2014 வேலையில்லா பட்டதாரி அழகுசுந்தரம்
2015 என்னை அறிந்தால்

தயாரிப்பில்

எண் திரைப்படம் குறிப்புகள்
1 கந்தா தயாரிப்பில்
2 நான்காம் முறை தயாரிப்பில்
3 கடமை கன்னியம் கட்டுப்பாடு தயாரிப்பில்
4 நல்வரவு தயாரிப்பில்
5 சித்திரம் தயாரிப்பில்
6 வழிப்போக்கன் தயாரிப்பில், கன்னடம்
முதல் முறை வில்லனாக
7 இத்தனை நாளாய் எங்கிருந்தாய் தயாரிப்பில்
8 இளமை இதோ இதோ தயாரிப்பில்
9 சொல்லி அடிப்பேன் தாமதம்

மறைவு

இவர் 16 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி 17 ஏப்ரல் 2021 அதிகாலை 4.30 மணிக்கு காலமானார்.[21][22] பிறகு இவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம். ஜீ இந்துஸ்தான் தமிழ். 17 ஏப்ரல் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Chennaimath.Org: Category – Sri Ramakrishna Vijayam". Archived from the original on 6 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  3. "Exclusive biography of @Actor_Vivek and on his life". FilmiBeat.
  4. "Exclusive biography of @Actor_Vivek and on his life". FilmiBeat.
  5. Vivek, Tamil film actor dies in Chennai hospital, Times of India, 17 April 2021.
  6. நடிகர் விவேக் காலமானார். நியூஸ்18 தமிழ். 17-ஏப்ரல் -2021. நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தவர். {{cite book}}: Check date values in: |year= (help)
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 லோகநாயகி (26 நவம்பர் 2000). "இன்னமும் காலேஜ் போறான் என் மகன்". ஆனந்த விகடன். 
  8. தி இந்து நடிகர் விவேக்கின் தந்தை மரணம் 26.நவம்பர்.2014
  9. http://in.news.yahoo.com/43/20090126/812/tnl-list-of-padma-awardees.html
  10. 51st Annual Manikchand Filmfare Award winners – Times Of India பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம். Articles.timesofindia.indiatimes.com (2004-06-04). Retrieved on 2012-02-05.
  11. "Thambikku Indha Ooru". Sify. 6 March 2010. Archived from the original on 30 December 2016. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  12. Rangarajan, Malathi (16 April 2010). "For the record — Sivappu Mazhai". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/For-the-record-Sivappu-Mazhai/article15693887.ece. 
  13. "Magane En Marumagane". Sify. 21 May 2010. Archived from the original on 10 May 2017. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  14. Devi Ravi, Bhama (29 May 2010). "Singam Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 21 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170321075847/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/singam/movie-review/5987899.cms. 
  15. Kumar, S. R. Ashok (3 June 2010). "Penn Singam: Family fare". The Hindu. http://www.thehindu.com/features/cinema/Penn-Singam-Family-fare/article16240683.ece. 
  16. Srinivasan, Pavithra (2010). "Bale Pandiya could have been better". Rediff. Archived from the original on 25 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  17. "Uthamaputhiran". Sify. 4 November 2010. Archived from the original on 3 October 2015. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  18. Srinivasan, Pavithra (25 February 2011). "Review: Seedan is no match to the original". Rediff. Archived from the original on 30 December 2016. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  19. Srinivasan, Pavithra (8 April 2011). "Review: Mappillai is a bad copy of the original". Rediff. Archived from the original on 20 January 2017. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  20. Srinivasan, Pavithra (3 October 2011). "Review: Sameera stands out in Vedi". Rediff. Archived from the original on 4 August 2016. பார்க்கப்பட்ட நாள் 29 December 2016.
  21. நடிகர் விவேக் காலமானார். தினமணி இதழ். 17-ஏப்ரல் -2021. {{cite book}}: Check date values in: |year= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  22. நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
விவேக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_(நடிகர்)&oldid=4091279" இலிருந்து மீள்விக்கப்பட்டது