உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால்ட்(II) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட்(II) அசிட்டேட்டு
கோபால்ட்(II) அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
71-48-7 (anhydrous) Y
6147-53-1 (tetrahydrate) N
ChemSpider 6041 Y
InChI
  • InChI=1S/2C2H4O2.Co/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2 Y
    Key: QAHREYKOYSIQPH-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2C2H4O2.Co/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2
    Key: QAHREYKOYSIQPH-NUQVWONBAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6277
  • [Co+2].[O-]C(=O)C.[O-]C(=O)C
UNII 3XC4P44U7E Y
பண்புகள்
Co(C2H3O2)2
வாய்ப்பாட்டு எடை 177.02124 கி/மோல் (நீரிலி)
249.08 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் இளஞ்சிவப்பு படிகங்கள் (நீரிலி)
செறிவான சிவப்புப் படிகங்கள் (நான்கு நீரேற்று)
மணம் புளிப்புக்காடி (நான்கு நீரேற்று)
அடர்த்தி 1.705 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை 140 °C (284 °F; 413 K) (நான்கு நீரேற்று)
கரையும்
கரைதிறன் ஆல்ககால், நீர்த்த அமிலங்கள், ஐந்தசிட்டேட்டு ஆகியனவற்றில் கரையும். (நான்கு நீரேற்று)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.542 (நான்கு நீரேற்று)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் J.T. Baker MSDS
Lethal dose or concentration (LD, LC):
503 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கோபால்ட்(II) அசிட்டேட்டு (Cobalt(II) acetate) என்பது அசிட்டிக் அமிலத்தின் கோபால்ட்(II) உப்பாகும். பொதுவாக Co(C2H3O2)2(H2O)4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்கு நீரேற்று வடிவத்தில் இது காணப்படுகிறது. தொழிற்சாலை வினையூக்கியாக கோபால்ட் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு மற்றும் அமைப்பு

[தொகு]

கோபால்ட் ஆக்சைடு அல்லது கோபால்ட் ஐதராக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் கோபால்ட்(II) அசிட்டேட்டு உண்டாகிறது.

CoO + 2 HC2H3O2 + 3 H2O → Co(C2H3O2)2(H2O)4

நான்கு தண்ணீர் மூலக்கூறுகள் மற்றும் இரண்டு அசிட்டேட்டு ஈனிகளுடன் ஒருங்கிணைவு கொண்டுள்ள, கோபால்ட் மைய எண்முக அமைப்பை நான்குநீரேற்று வடிவ கோபால்ட்(II) அசிட்டேட்டு ஏற்றிருப்பதாக எக்சு கதிர் படிகவியல் தெரிவிக்கிறது.[1]

பயன்கள்

[தொகு]

பலவகையான எண்ணெய் உலர்த்திகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக கோபால்ட்(II) அசிட்டேட்டு பயன்படுகிறது. வண்ணப்பூச்சுகள் மற்றும் நெய்வணங்களை கடினப்படுத்தலுக்கு உதவும் வினையூக்கியாகவும் இது பயன்படுகிறது.[2]

வினைகள்

[தொகு]

சாலியென்H2 உடன் கோபால்ட் அசிட்டேட்டு வினைபுரிந்து, இடைநிலைத் தனிம ஈராக்சிசன் அணைவுச் சேர்மமான சால்கோமைன்|சால்கோமைனைத்]] தருகிறது.:[3]

Co(OAc)2 + salenH2 → Co(salen) + 2 HOAc

பாதுகாப்பு

[தொகு]

கோபால்ட் உப்புகள் யாவும் நச்சுத்தன்மை கொண்டவையாகும்.[4]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Van Niekerk, J. N.; Schoening, F. R. L. (1953). "The crystal structures of nickel acetate, Ni(CH3COO)2·4H2O, and cobalt acetate, Co(CH3COO)2·4H2O". Acta Cryst. 6 (7): 609–612. doi:10.1107/S0365110X5300171X. 
  2. John Dallas Donaldson, Detmar Beyersmann, "Cobalt and Cobalt Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_281.pub2
  3. Appleton, T. G. (1977). "Oxygen Uptake by a Cobalt(II) Complex". J. Chem. Ed. 54 (7): 443. doi:10.1021/ed054p443. 
  4. MallBaker MSDS[தொடர்பிழந்த இணைப்பு]