உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால்ட்(II) சயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட்(II) சயனேட்டு
இனங்காட்டிகள்
38150-63-9 Y
InChI
  • InChI=1S/2CNO.Co/c2*2-1-3;/q2*-1;+2
    Key: JXDJYNWFLIUUIU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 15345298
  • C(#N)[O-].C(#N)[O-].[Co+2]
  • C(=[N-])=O.C(=[N-])=O.[Co+2]
பண்புகள்
Co(OCN)2
வாய்ப்பாட்டு எடை 142.97 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கோபால்ட்டு(II) தயோசயனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கோபால்ட்(II) சயனேட்டு (Cobalt(II) cyanate) என்பது Co(OCN)2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்

கருதுகோள்நிலையிலுள்ள இந்த எளிய கோபால்ட்(II) சயனேட்டு தயாரிக்கப்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், டெட்ரா ஐசோசயனனேட்டோகோபால்ட்(II) அயனி (Co(NCO)42-) அறியப்படுகிறது. இதன் நீல நிறம் கோபால்ட்(II) அயனிகளுக்கான தர சோதனையாகப் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு

[தொகு]

கோபால்ட்(II) சயனேட்டு சேர்மம் 1952 ஆம் ஆண்டில் பிரிடின் கோபால்ட்(II) சயனேட்டை வெற்றிடத்தின் கீழ் கவனமாக சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை[1]

இதற்கு மாறாக டெட்ரா ஐசோசயனனேட்டோகோபால்ட்(II) அயனி காணப்படுவதாக எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் கூறுகின்றன, இவ்வயனி பரவலாகவும் காணப்படுகிறது.[2] 1871 ஆம் ஆண்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட பிறகு, இது கோபால்ட்(II) அயனிக்கான ஒரு தரமான சோதனையாகப் பயன்படுத்தப்பட்டது.[3]

டெட்ராகிசு(பிரிடின்)கோபால்ட்(II) சயனேட்டு போன்ற கோபால்ட்டின் மற்ற சயனேட்டு அணைவுச் சேர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[4]

அணைவுச் சேர்மங்கள்

[தொகு]
டெட்ராசயனேட்டோகோபால்டேட்டு(II) கரைசல்

டெட்ராசயனேட்டோகோபால்டேட்(II)

[தொகு]

Co(C5H5)2]2[Co(NCO)4] போன்ற தொடர்புடைய டெட்ராசயனேட்டோகோபால்டேட்(II) அயனியின் பல சேர்மங்கள் கட்டமைப்பு ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த அணைவுகள் அனைத்தும் அடர் நீல நிறத்தைக் கொண்டுள்ளன.[2][5]

பொட்டாசியம் சயனேட்டு மற்றும் கோபால்ட்(II) நைட்ரேட்டு சேற்மங்களின் வினையால் பொட்டாசியம் டெட்ரா ஐசோசயனேட்டோகோபால்டேட்(II) உற்பத்தி செய்யப்படுகிறது::[6]

4 KOCN + Co(NO3)2 → K2[Co(NCO)4] + 2 KNO3

கோபால்ட்சீனியம் [Co(C5H5)]+ மற்றும் 1-எத்தில்-3-மெத்திலிமிடசோலியம் குளோரைடு போன்ற மற்ற டெட்ராசயனேட்டோகோபால்டேட்(II) உப்புகளும் அறியப்படுகின்றன[2]

இதர கூட்டு விளைபொருட்கள்

[தொகு]

பொட்டாசியம் சயனேட்டை கோபால்ட்(II) குளோரைடு போன்ற கரையக்கூடிய ஒரு கோபால்ட்டு உப்புடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து ஒருங்கிணைப்பு முகவர்களான பிரிடீன், பைபிரிடீன்,[7] குயினோலின் மற்றும் 2,6-இருமெத்தில்பைராசின் போன்றவற்றை சேர்த்து கோபால்ட்(II) சயனேட்டு அணைவுச் சேர்மங்களை தயாரிக்கலாம்.[8]

கட்டமைப்பு

[தொகு]

எளிமையான கோபால்ட்டு சயனேட்டு தெரியவில்லை என்றாலும், டெட்ராசயனேட்டோகோபால்டேட்(II) அயனியின் அமைப்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. [Co(NCO)4]2- அயனியானது நைட்ரசன் பிணைக்கப்பட்ட நான்முகி மைய கோபால்ட்டு அணுவைக் கொண்டுள்ளது. கோபால்ட்டு நைட்ரசன் பிணைப்பு நீளம் 1.96 Å என்ற அளவில் காணப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Albert V. Logan; David C. Bush; Charles J. Rogers (1952). "The Heats of Formation of Cobalt(II) and Nickel(II) Pyridinated Cyanates and Thiocyanates" (in en). Journal of the American Chemical Society 74 (16): 4194–4195. doi:10.1021/ja01136a069. 
  2. 2.0 2.1 2.2 2.3 Tim Peppel; Alexander Hinz; Philipp Thiele; Monika Geppert-Rybczyńska; Jochen K. Lehmann; Martin Köckerling (2017). "Synthesis, Properties, and Structures of Low-Melting Tetraisocyanatocobaltate(II)-Based Ionic Liquids" (in en). European Journal of Inorganic Chemistry (5): 885–893. doi:10.1002/ejic.201601250. 
  3. C. W. Blomstrand (1871). "Zur Kenntniss der gepaarten Verbindungen des fünfatomigen Stickstoffs" (in de). Journal für Praktische Chemie 3 (1): 186–224. doi:10.1002/prac.18710030119. 
  4. A.H. Norbury (1975). "Coordination Chemistry of the Cyanate, Thiocyanate, and Selenocyanate Ions" (in en). Advances in Inorganic Chemistry and Radiochemistry 17: 231–386. doi:10.1016/S0065-2792(08)60064-3. 
  5. Karin Ruhlandt-Senge; Irina Sens; Ulrich Müller (1991). "Die Bildung von [Co(C5H5)2]NO3 und [Co(C5H5)2]2[Co(NCO)4] aus Cobaltocen, Ozon und Acetonitril sowie deren Kristallstrukturen" (in de). Zeitschrift für Naturforschung B 46 (12): 1689–1693. doi:10.1515/znb-1991-1218. 
  6. F. Albert Cotton; Margaret Goodgame (1961). "Magnetic Investigations of Spin-free Cobaltous Complexes. V. Tetra-azido and Tetracyanato Cobaltate(II) Ions" (in en). Journal of the American Chemical Society 83 (8): 1777–1780. doi:10.1021/ja01469a001. 
  7. LI Jia; Ling-Qian Kong; Da-Cheng Li (2008). "cis-Bis-(2,2'-bipyrid-yl)dicyanato-cobalt(II)" (in en). Acta Crystallographica Section E 64 (4): 582. doi:10.1107/S1600536808007617. 
  8. A. B. P. Lever; S. M. Nelson (1966). "An analysis of the electronic spectra of bis-amine cobalt halides: a novel effect of steric hindrance" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 859–863. doi:10.1039/J19660000859.