இயேசுவின் பணிவாழ்வு
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
கிறித்தவம் |
---|
கிறித்தவம் வலைவாசல் |
நற்செய்திகளின்படி |
இயேசுவின் வாழ்வு |
---|
விவிலியம் வலைவாசல் |
இயேசுவின் பணிவாழ்வு அல்லது இயேசுவின் மறைபணி என்பது யோர்தான் ஆற்றில் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெறுவதில் தொடங்கி அவரின் இறுதி இராவுணவு முடிய உள்ள அவரின் வாழ்க்கைப் பகுதியினைக் குறிக்கும்.[1] லூக்கா நற்செய்தி (3:23) இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது எனக்குறிக்கின்றது.[2][3] வரலாற்றாசிரியர்களின் படி இயேசுவின் பணிவாழ்வு கி.பி 27-29 இல் துவங்கி கி.பி 30-36 இல் முடிவடைந்திருக்கலாம்.[2][3][4]
கலிலேயாவில் தொடக்கப் பணிவாழ்வு இயேசுவின் திருமுழுக்கிற்குப் பிறகு சோதனைக்காக கலிலேயாவுக்குத் திரும்பி வருவதிலும்.[5] கலிலேயாவில் பணியாற்றி தனது முதல் சீடர்களை தேர்வுசெய்வதிலும் அடங்குகின்றது.[1][6] கலிலேயாவில் பணிவாழ்வில் திருத்தூதர்களைத் தேர்வு செய்வதிலும், இயேசுவின் பணிவாழ்வின் பெரும் பகுதியுமாக அமைகின்றது.[7][8] கலிலேயாவில் இறுதி பணிவாழ்வு திருமுழுக்கு யோவானின் இறப்பில் தொடங்கி எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாவதற்கு முன் முடிவடைகின்றது.[9][10] யூதேயாவில் இயேசுவின் பணிவாழ்வில் யூதேயாவழியாக எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாகின்றார்.[11][12][13][13][14][14] இக்காலத்தில் அவர் தான் முன்னர் திருமுழுக்கு பெற்ற யோர்தார் ஆற்றங்கரைப்பகுதிகளில் பணியாற்றினார்.[15][16][17]
இயேசுவின் பணிவாழ்வின் இறுதி வாரம் எருசலேமில் நிகழ்ந்தது. இது திருப்பாடுகளின் வாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதலில் தொடங்குகின்றது.[18] எல்லா நற்செய்தி நூல்களும் இயேசுவின் பணிவாழ்வின் பிற கட்டங்களைவிட இதனையே அதிகம் (மூன்றில் ஒரு பங்கு) விவரிக்கின்றன.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Christianity: an introduction by Alister E. McGrath 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-0901-7 pages 16-22
- ↑ 2.0 2.1 The Cradle, the Cross, and the Crown: An Introduction to the New Testament by Andreas J. Köstenberger, L. Scott Kellum 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8054-4365-3 page 140
- ↑ 3.0 3.1 Paul L. Maier "The Date of the Nativity and Chronology of Jesus" in Chronos, kairos, Christos: nativity and chronological studies by Jerry Vardaman, Edwin M. Yamauchi 1989 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-931464-50-1 pages 113-129
- ↑ Jesus & the Rise of Early Christianity: A History of New Testament Times by Paul Barnett 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8308-2699-8 pages 19-21
- ↑ The Gospel according to Matthew by Leon Morris பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85111-338-9 page 71
- ↑ The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 117-130
- ↑ A theology of the New Testament by George Eldon Ladd 1993ISBN page 324
- ↑ The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 143-160
- ↑ Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 97-110
- ↑ The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 165-180
- ↑ The Christology of Mark's Gospel by Jack Dean Kingsbury 1983 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8006-2337-1 pages 91-95
- ↑ The Cambridge companion to the Gospels by Stephen C. Barton பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-00261-3 pages 132-133
- ↑ 13.0 13.1 Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 121-135
- ↑ 14.0 14.1 The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 189-207
- ↑ Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 page 137
- ↑ The Life and Ministry of Jesus: The Gospels by Douglas Redford 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7847-1900-4 pages 211-229
- ↑ Mercer dictionary of the Bible by Watson E. Mills, Roger Aubrey Bullard 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86554-373-9 page 929
- ↑ Steven L. Cox, Kendell H Easley, 2007 Harmony of the Gospels பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8054-9444-8 pages 155-170
- ↑ Matthew by David L. Turner 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8010-2684-9 page 613