உள்ளடக்கத்துக்குச் செல்

அசாம் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் ஆளுநர்
ராஜ் பவன், அசாம்
தற்போது
லட்சுமன் ஆச்சார்யா

30 ஜூலை 2024 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், குவகாத்தி
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்நிக்கோலஸ் பீட்சன் பெல்
உருவாக்கம்3 சனவரி 1921; 103 ஆண்டுகள் முன்னர் (1921-01-03)
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அசாம் மாநிலம்

அசாம் ஆளுநர்களின் பட்டியல், அசாம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் குவகாத்தியில் உள்ள ராஜ்பவன் (அசாம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது லட்சுமன் ஆச்சார்யா என்பவர் ஆளுநராக உள்ளார்.[1]

ஆக்கிரமிக்கப்பட்ட அசாம் பிரித்தானிய இராணுவத் தளபதிகள் (1824-26)

[தொகு]

1824 ஆம் ஆண்டில், பிரித்தானிய படைகள் அசாமை ஆக்கிரமித்தன, இது அரசியல் ரீதியாக ஒருபோதும் இந்தியாவின் அல்லது பர்மாவின் பகுதியாக இல்லை.

  • ஜார்ஜ் மெக்மொரின், 1824
  • ஆர்தர் ரிச்சர்ட்ஸ், 1824-26

அசாம் பிரித்தானிய அரசியல் முகவர்கள் (1826–28)

[தொகு]

பிப்ரவரி 24, 1826இல், யண்டபூ ஒப்பந்தம் அசாமின் சில பகுதிகளை, பர்மாவிலிருந்து பிரிட்டனுக்கு வழங்கியது.

  • டேவிட் ஸ்காட், 1826-28

அசாம் ஆணையர்கள் (1828–74)

[தொகு]

1828 ஆம் ஆண்டில், மேற்கு அசாம் வங்காள மாகாணத்தில் இணைக்கப்பட்டது, அதன்பின்னர் 1833 ஆம் ஆண்டில் அசாமின் எஞ்சிய பகுதிகளும் இணைக்கப்பட்டன. அசாமின் ஒரு ஆணையாளர் நியமிக்கப்பட்டார், இவர் வங்காள ஆளுநருக்கு அடிபணிந்தார்.

  • டேவிட் ஸ்காட், 1828-20 ஆகத்து 1831
  • தாமஸ் காம்ப்பெல் இராபர்ட்சன், 1831-34
  • பிரான்சிஸ் ஜென்கின்ஸ், 1834-61
  • ஹென்றி ஹாப்கின்சன், 1861-74

அசாம் தலைமை ஆணையர்கள் (1874-1905)

[தொகு]

1874 ஆம் ஆண்டில், அசாம் வங்காள அதிபரிடமிருந்து பிரிக்கப்பட்டது.

  • ரிச்சர்ட் ஹார்டே கீட்டிங், 1874–78
  • ஸ்டீவர்ட் கொல்வின் பேய்லி, 1878–81
  • சர் சார்லஸ் ஆல்பிரட் எலியட், 1881-85
  • வில்லியம் எர்ஸ்கைன் வார்டு, 1885-87, முதல் முறையாக
  • சர் டென்னிஸ் ஃபிட்ஸ்பாட்ரிக், 1887-89
  • ஜேம்ஸ் வெஸ்ட்லேண்ட், 1889
  • ஜேம்ஸ் வாலஸ் குயின்டன், 1889-91
  • வில்லியம் எர்ஸ்கைன் வார்டு, 1891-96, இரண்டாவது முறை
  • சர் ஹென்றி ஜான் ஸ்டெட்மேன் காட்டன், 1896-1902
  • சர் ஜோசப் பாம்ப்ஃபில்ட் புல்லர், 1902-05

கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் துணைநிலை ஆளுநர்கள் (1905–12)

[தொகு]

1905 ஆம் ஆண்டில், வங்காளம் பிரிக்கப்பட்டது மற்றும் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகியவை துணைநிலை ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன.

  • சர் ஜோசப் பாம்ப்ஃபில்ட் புல்லர், 1905-06
  • இலான்சலோட் ஹரே, 1906–11
  • சார்லஸ் ஸ்டூவர்ட் பேலி, 1911-12

அசாம் தலைமை ஆணையர்கள் (1912–21)

[தொகு]

1912 ஆம் ஆண்டில், கிழக்கு வங்காளம் மீண்டும் வங்காளத்துடன் இணைக்கப்பட்டது, அசாம் மாகாணம் மீண்டும் ஒரு தலைமை ஆணையரால் ஆளப்பட்டது.

  • சர் ஆர்க்டேல் ஏர்ல், 1912-18
  • சர் நிக்கோலஸ் டாட் பீட்சன்-பெல், 1918–3 சனவரி 1921

அசாம் ஆளுநர்கள் (1921–47)

[தொகு]

1921 ஆம் ஆண்டில், தலைமை ஆணையர் ஆளுநராக மேம்படுத்தப்பட்டார்.

  1. சர் நிக்கோலஸ் டாட் பீட்சன்-பெல், 3 சனவரி 1921 – 2 ஏப்ரல் 1921
  2. சர் வில்லியம் சின்க்ளேர் மாரிஸ், 3 ஏப்ரல் 1921 - 10 அக்டோபர் 1922
  3. சர் ஜான் ஹென்றி கெர், 10 அக்டோபர் 1922 - 28 சூன் 1927
  4. சர் எக்பர்ட் லாரி லூகாஸ் ஹம்மண்ட், 28 சூன் 1927 - 11 மே 1932
  5. சர் மைக்கேல் கீன், 11 மே 1932 - 4 மார்ச் 1937
  6. ராபர்ட் நீல் ரீட், 4 மார்ச் 1937 - 4 மே 1942
  7. சர் ஆண்ட்ரூ கோர்லே கிளோ, 4 மே 1942 - 4 மே 1947
  8. சர் முகம்மது சலே அக்பர் ஐடாரி, 4 மே 1947 - 15 ஆகத்து 1947

அசாம் ஆளுநர்கள் (1947 முதல்)

[தொகு]

இந்திய விடுதலைக்குப்பின் அசாம் ஆளுநர்கள், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டனர்.

அசாம் ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சர் முஹம்மது சாலிஹ் அக்பர் ஹைதரி 15 ஆகத்து 1947 28 டிசம்பர் 1948
2 ரொனால்டு பிரான்சிஸ் லாட்ஜ் (தற்காலிகம்) 30 டிசம்பர் 1948 16 பெப்ரவரி 1949
3 சிறீ பிரகாசா 16 பெப்ரவரி 1949 27 மே 1950
4 ஜெயராம் தாஸ் தவ்லத்ராம் 27 மே 1950 15 மே 1956
5 சையத் பாசல் அலி 15 மே 1956 22 ஆகத்து 1959
6 சந்நிரேஷ்வர் பிரசாத் சின்கா 23 ஆகத்து 1959 14 அக்டோபர் 1959
7 சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (முதல் முறை) 14 அக்டோபர் 1959 12 நவம்பர் 1960
8 விஷ்ணு சகாய் (முதல் முறை) 12 நவம்பர் 1960 13 சனவரி 1961
9 சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (இரண்டாவது முறை) 13 சனவரி 1961 7 செப்டம்பர் 1962
10 விஷ்ணு சகாய் (இரண்டாவது முறை) 7 செப்டம்பர் 1962 17 ஏப்ரல் 1968
11 பிராஜ் குமார் நேரு 17 ஏப்ரல் 1968 19 செப்டம்பர் 1973
12 பர்பதி குமார் கோசுவாமி (தற்காலிகம்) 8 டிசம்பர் 1970 4 சனவரி 1971
13 இலாலன் பிரசாத் சிங் 19 செப்டம்பர் 1973 10 ஆகத்து 1981
14 பிரகாசு மெகரோத்ரா 10 ஆகத்து 1981 28 மார்ச் 1984
15 திரிபெனி சகாய் மிசுரா 28 மார்ச் 1984 15 ஏப்ரல் 1984
16 பீஷ்ம நாராயண் சிங் 15 ஏப்ரல் 1984 10 மே 1989
17 அரி தேவ் ஜோசி 10 மே 1989 21 சூலை 1989
18 அனிசேதி இரகுவீர் 21 சூலை 1989 2 மே 1990
19 டி. டி. தாக்கூர் 2 மே 1990 17 மார்ச் 1991
20 லோக் நாத் மிஸ்ரா 17 மார்ச் 1991 1 செப்டம்பர் 1997
21 சீநிவாஸ் குமார் சின்கா 1 செப்டம்பர் 1997 21 ஏப்ரல் 2003
22 அரவிந்த் தேவ் 21 ஏப்ரல் 2003 5 சூன் 2003
23 அஜய் சிங் 5 சூன் 2003 4 சூலை 2008
25 சிவ் சரண் மாத்தூர் 4 சூலை 2008 25 சூன் 2009
26 கே. சங்கரநாராயணனன் 26 சூன் 2009 27 சூலை 2009
27 சையத் சிப்தே ராசி 27 சூலை 2009 10 நவம்பர் 2009
28 ஜானகி பல்லப் பட்நாயக் 11 நவம்பர் 2009 11 டிசம்பர் 2014
29 பத்மனாப பாலகிருஷ்ண ஆச்சாரியா 12 டிசம்பர் 2014 [2] 17 ஆகத்து 2016
30 பன்வாரிலால் புரோகித்[3] 22 ஆகஸ்ட் 2016 10 அக்டோபர் 2017
31 ஜகதீஷ் முகீ 10 அக்டோபர் 2017 11 பிப்ரவரி 2023
32 குலாப் சந்த் கட்டாரியா 15 பிப்ரவரி 2023 29 ஜூலை 2024
33 லட்சுமன் ஆச்சார்யா 30 ஜூலை 2024 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

[தொகு]