சனவரி 4
Appearance
(4 ஜனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 4 (January 4) கிரிகோரியன் ஆண்டின் நான்காம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361 (நெட்டாண்டுகளில் 362) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார்.
- 1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.
- 1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
- 1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.
- 1649 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: ரம்ப் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சு மன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது.
- 1717 – நெதர்லாந்து, பெரிய பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் உத்ரெக்ட் உடன்பாட்டைத் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
- 1762 – எசுப்பானியா, நாபொலி ஆகிய நாடுகள் மீது இங்கிலாந்து ஏழாண்டுப் போரை ஆரம்பித்தது.
- 1798 – உதுமானியர்களினால் வலாச்சியாவின் புதிய இளவரசராக நியமிக்கப்பட்ட கான்சுடன்டைன் அங்கெர்லி புக்கரெஸ்ட் வந்து சேர்ந்தார்.
- 1847 – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் கைத்துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விற்றார்.
- 1854 – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- 1878 – சோஃபியா நகரம் உதுமானியரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 1879 இல் விடுதலை பெற்ற பல்காரியாவின் தலைநகரானது.
- 1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.[1]
- 1896 – யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
- 1912 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் சாரணர் இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
- 1918 – பின்லாந்தின் விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன.
- 1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசானது. யு நூ அதன் முதலாவது பிரதமர் ஆனார்.
- 1951 – கொரியப் போர்: சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.
- 1958 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.
- 1958 – முதலாவது செயற்கைக் கோள் இசுப்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
- 1959 – சோவியத்தின் லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
- 1966 – பிரெஞ்சு மேல் வோல்ட்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
- 1976 – வட அயர்லாந்தில் ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1987 – அமெரிக்காவில் பாஸ்டன் நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
- 1989 – லிபியாவின் இரன்டு மிக்-23 ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் எப்-14 வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 1990 – பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர்.
- 1998 – அல்சீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2004 – இசுப்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
- 2010 – உலகின் அதியுயர் கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
- 2018 – தென்னாப்பிரிக்காவில் பயணிகள் தொடருந்து ஒன்று பாரவுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1643 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/27)
- 1785 – ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர், மொழியியலாளர் (இ. 1863)
- 1809 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1852)
- 1813 – ஐசக் பிட்மன், ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1897)
- 1889 – பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி (இ. 1963)
- 1892 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியலாளர் (இ. 1960)
- 1904 – எஸ். எஸ். வாசன், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 1969)
- 1940 – பிறையன் ஜோசப்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்
- 1941 – க. துரைரத்தினசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 2021)
- 1944 – மல்லிகை சி. குமார், இலங்கை மலையக எழுத்தாளர், ஓவியர் (இ. 2020)
- 1954 – ஞாநி சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (இ. 2018)
- 1963 – மே-பிரிட் மோசர், நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்
- 1964 – பிரபா கணேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1984 – ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1904 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
- 1908 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்க வானியலாளர் (பி. 1834)
- 1929 – சேசாத்திரி சுவாமிகள், தமிழக சித்தர் (பி. 1870)
- 1941 – என்றி பெர்குசன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1859)
- 1960 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)
- 1961 – எர்வின் சுரோடிங்கர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய இயற்பியலாளர் (பி. 1887)
- 1965 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (பி. 1888)
- 1974 – அண்ணல் தங்கோ, தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1904)
- 1974 – ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)
- 1976 – உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1895)
- 1994 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழகத் தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1913)
- 1994 – ஆர். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1939)
- 2004 – வசுமதி இராமசாமி, தமிழக எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1917)
- 2005 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கை சட்டத்தரணி, தமிழ் ஆர்வலர், தொழிற்சங்கவாதி (பி. 1920)
- 2010 – சுடோமு யாமகுச்சி, சப்பானியப் பொறியியலாளர் (பி. 1916)
- 2017 – அப்துல் ஹலீம் ஜாபர் கான், இந்திய சித்தார் கலைஞர் (பி. 1927)
சிறப்பு நாட்கள்
- தியாகிகள் நாள் (காங்கோ சனநாயகக் குடியரசு)
- விடுதலை நாள் (மியான்மர், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)
- குடியேற்ற அடக்குமுறைக்கு எதிரான வீழ்ச்சி நாள் (அங்கோலா)
- உலக பிரெயில் நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 50