விருதுநகர் மக்களவைத் தொகுதி
விருதுநகர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
விருதுநகர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,484,256 |
சட்டமன்றத் தொகுதிகள் | 195. திருப்பரங்குன்றம் 196. திருமங்கலம் 204. சாத்தூர் 205. சிவகாசி 206. விருதுநகர் 207. அருப்புக்கோட்டை |
விருதுநகர் மக்களவைத் தொகுதி (Virudhunagar Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 34-ஆவது தொகுதி ஆகும். திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன. மற்ற நான்கும் விருதுநகர் மாவட்டத் தொகுதிகள் ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதி மறுசீரமைப்பு காரணமாக சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
[தொகு]மக்களவை | காலம் | உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
15 | 2009-14 | மாணிக்கம் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு |
16 | 2014-19 | த. இராதாகிருஷ்ணன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
17 | 2019-2024 | மாணிக்கம் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு |
17 | 2024-தற்போது | மாணிக்கம் தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | பி. மாணிக்கம் தாகூர் | 3,85,256 | 36.28 | ▼7.49 | |
தேமுதிக | வி. விஜய பிரபாகரன் | 380,877 | 35.87 | 6.47 | |
பா.ஜ.க | ஆர். ராதிகா | 166,271 | 15.66 | New | |
நாதக | எஸ். கவுசிக் | 77,031 | 7.25 | 2.32 | |
நோட்டா | நோட்டா | 9,408 | 0.89 | ▼0.72 | |
வாக்கு வித்தியாசம் | 4,379 | 0.41 | ▼13.96 | ||
பதிவான வாக்குகள் | 1,054,634 | 70.22 | ▼2.19 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ▼7.49 |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]இத்தேர்தலில் காங்கிரசு வேட்பாளரான மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளரான அழகர்சாமியை 1,54,554 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
மாணிக்கம் தாகூர் | காங்கிரசு | 6,216 | 4,70,883 | 43.81% | |
அழகர்சாமி | தேமுதிக | 1,274 | 3,16,329 | 29.43% | |
எஸ். பரமசிவ ஐயப்பன் | அமமுக | 582 | 1,07,615 | 10.01% | |
வி. முனியசாமி | மக்கள் நீதி மய்யம் | 314 | 57,129 | 5.32% | |
அருள்மொழிதேவன் | நாம் தமிழர் கட்சி | 449 | 53,040 | 4.94% | |
நோட்டா | - | - | 205 | 17,292 | 1.61% |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான த. இராதாகிருஷ்ணன், மதிமுக வேட்பாளரான வைகோவை 1,45,551 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | கூட்டணி | வாக்குகள் |
---|---|---|---|
த. இராதாகிருஷ்ணன் | அதிமுக | அதிமுக | 406,694 |
வைகோ | மதிமுக | பாஜக | 261,143 |
இரத்தினவேலு | திமுக | திமுக | 241,505 |
மாணிக்கம் தாகூர் | காங்கிரசு | காங்கிரசு | 38,482 |
வாக்குப்பதிவு
[தொகு]2009 வாக்குப்பதிவு சதவீதம் [2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
77.38% | 74.96% | ↓ 2.42% |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் மாணிக்கம் தாகூர், மதிமுகவின் வைகோவை 15,764 வாக்குகள் வேறுபாட்டில் வென்று, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
மாணிக்கம் தாகூர் | காங்கிரசு | 3,07,187 |
வைகோ | மதிமுக | 2,91,423 |
கே. பாண்டியராஜன் | தேமுதிக | 1,25,229 |
மு. கார்த்திக் | பாரதிய ஜனதா கட்சி | 17,336 |
வி. கனகராஜ் | பகுஜன் சமாஜ் கட்சி | 8,198 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2024 Parliamentary Constituency 34 - VIRUDHUNAGAR (Tamil Nadu) Results". இந்தியத் தேர்தல் ஆணையம்.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)