லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்)
நூலாசிரியர் | தஸ்லிமா நஸ்ரின் |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | |
நாடு | வங்காளதேசம் |
மொழி | வங்காள மொழி |
வகை | புதினம் |
வெளியிடப்பட்ட நாள் | 1993 |
ஆங்கில வெளியீடு | அக்டோபர் 1997 |
பக்கங்கள் | 302 |
ISBN | 1-57392-165-3 |
OCLC | 37322498 |
891.4/437 21 | |
LC வகை | PK1730.3.A65 L3513 1997 |
லஜ்ஜா (வங்காள மொழி:লজ্জা) என்பது வங்க மொழிப் புதினம் ஆகும். எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்கள் எழுதியது. லஜ்ஜா எனும் சொல்லுக்கு அவமானம் என்று பொருள். இப்புத்தகம் 1993 ஆம் ஆண்டு வங்க மொழியில் முதலில் வெளியானது. வெளியானதும் வங்காளதேசம் அரசால் தடை செய்யப்பட்டது.,[1][2] இந்நாவலை எழுதிய தஸ்லிமா நஸ்ரினுக்கு வங்காள தேச இஸ்லாமிய அமைப்புகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.[3]
கதைக்கரு
[தொகு]இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதின் எதிரொலியாக வங்காள தேசம் நாட்டின் சிறுபான்மையினரான இந்துகள் மீதான திட்டமிட்ட கொலைச் சம்பவங்களை மையப்படுத்துகிறது இப்புதினம். இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மசூதி உடைப்புக்குப் பதிலடியாக ஓராயிரம் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
தமிழில்
[தொகு]இப்புத்தகத்தை தமிழில் ஜவார்லால் மொழிபெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு புத்தகக் கடையில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் இதுவும் ஒன்று.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bangladesh Seeks Writer, Charging She Insults Islam த நியூயார்க் டைம்ஸ், June 8, 1994.
- ↑ Book Review த நியூயார்க் டைம்ஸ், August 28, 1994.
- ↑ Censorship by Death த நியூயார்க் டைம்ஸ், July 6, 1994.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12.