உள்ளடக்கத்துக்குச் செல்

மர்கசி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மர்கசி மாகாணம் (Markazi Province, பாரசீக மொழி : استان مرکزی‎ , Ostān-e Markazi ) என்பது ஈரான் நாட்டின் முப்பத்தி ஓரு மாகாணங்களில் ஒன்றாகும். இத்ம மாகாணத்தின் பெயரிலுள்ள மார்கசி என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் மையம் என்று பொருள் ஆகும். 2014 இல் இந்த மாகாணம் நான்காவது மண்டலத்தில் வைக்கப்பட்டது.

மார்கசி மாகாணமானது ஈரான் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது. அதன் தலைநகரமாக அராக் நகரம் உள்ளது. இதன் மக்கள் தொகை 1.41 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1] மாகாணத்தின் தற்போதைய எல்லைகளானது 1977 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றது. அந்த ஆண்டுதான் தற்போதைய மர்கசி மாகாணம் மற்றும் தெஹ்ரான் மாகாணமாக பிரிக்கப்பட்டன. மேலும் இதனுடன் இஸ்ஃபஹான் மாகாணம், செம்னான் மாகாணம் மற்றும் சஞ்சன் மாகாணம் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டன.

இந்த மாகாணமானது சுற்றிலும் நிலப்பரப்பால் சூழ்ந்துள்ளது. இதன் எல்லைகளாக வட திசையில் கிங்ஸ்க்வின் மாகாணம் மற்றும் தெஹ்ரான் மாகாணம் ஆகிய மாகாணங்கள் போன்றவையும், கிழக்கு திசையில் கியோம் மாகாணமும், தெற்கு திசையில் இசுபகான் மாகாணம் மற்றும் உலுரித்தான் மாகாணம் போன்ற மாகாணங்களும், மேற்கு திசையில் அமதான் மாகாணம் போன்ற மாகாணங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

மாகாணத்தின் முக்கிய நகரங்களாக சவே நகரம், அராக் நகரம், மஹல்லத் நகரம், ஜராண்டியே நகரம், கோமெய்ன் நகரம், டெலிஜன் நகரம், தஃப்ரெஷ் நகரம், அஷ்டியன் நகரம், ஷாஜந்த் நகரம் (முன்பு சர்பந்த் நகரம் என்று அழைக்கப்பட்டது) மற்றும் ஃபராஹான் நகரம் போன்றவை முக்கிய நகரங்களாக உள்ளன.

வரலாறு

[தொகு]
நாராக் மசூதியானது மார்க்கசி மாகாணத்தின் வரலாற்று மற்றும் கட்டடக்கலை பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

கி.மு. முதல் ஆயிரமாண்டு காலத்தில் மார்க்கசி மாகாணமானது மீடியாப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த பேரரசில் நவீனகால ஈரான் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள் அனைத்தும் இதில் அடங்கும். இப்பகுதி ஈரானியப் பீடபூமியில் உள்ள பழங்கால குடியிருப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஏராளமான பழங்கால இடிபாட்டு எச்சங்கள் இந்த பகுதியின் பழமைக்கு சான்றாக உள்ளன.

இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில், இப்பகுதியின் பெயர் ஜிபால் அல்லது குஸ்தான் என்று மாற்றப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கோரிஹே நகரமானது ஜிபால் மாகாணத்தின் ஒரு பிரபலமான நகரமாக இருந்தது, அதைத் தொடர்ந்து தஃப்ரேஷ் நகரம் மற்றும் கோமெய்ன் நகரம் ஆகிய நகரங்கள் பிரபமாக இருந்தன.

சமீபத்திய காலங்களில், ஈரானின் வடக்கு-தெற்கு இரயில் பாதை விரிவாக்கம் (இது பொதுவாக பாரசீக நடைபாதை என அழைக்கப்படுகிறது) மற்றும் முக்கிய தொழிற்சாலைகளை நிறுவுவது போன்றவை நடந்தன. இவை இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தூண்டுகோலாக உதவியுள்ளன.

ஈரானிய வரலாற்றில் பல பிரபல ஆளுமைகளை தந்த பெருமை மிக்கதாக இந்த மாகாணம் உள்ளது. இங்கு உருவான ஆளுமைகள் பின்வருமாறு: மிர்சா அபுல்-காசெம் காம்-மாகம், அப்பாஸ் எக்பால் அஷ்டியானி, மிர்சா தாகி கான் அமீர் கபீர், மிர்சா போசோர்க் கெய்ம்-மாகம், மஹ்மூத் ஹெசாபி, அயதுல்லா கோமெய்னி, அயதுல்லா அராக்கி மற்றும் பலர் ஆவர்.

மக்கள் தொகை

[தொகு]
மர்கசி மாகாண மக்கள்தொகை வரலாறு
ஆண்டும.தொ.±%
200613,26,826—    
201114,13,959+6.6%
201614,29,475+1.1%
amar.org.ir

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்

[தொகு]
  1. அராக் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  2. அராக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  3. அராக் பல்கலைக்கழகம்
  4. தஃப்ரேஷ் பல்கலைக்கழகம்
  5. கோமெய்ன் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம் [2]
  6. அராக் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம்
  7. இஸ்லாமிய ஆசாத் சவே பல்கலைக்கழகம் [3]
  8. இஸ்லாமிய ஆசாத் ஃபராஹான் பல்கலைக்கழகம் [4]
  9. அஷ்டியன் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம்
  10. இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம் தஃப்ரெஷ்
  11. அராக் ஃபர்ஹாங்கியன் பல்கலைக்கழகம்
  12. எரிசக்தி பல்கலைக்கழகம் (சவே) [5]

கவுண்டிகளும் மாவட்டங்களும்

[தொகு]

மார்க்கசி மாகாணமானது 12 கவுண்டிகள் மற்றும் 18 மாவட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது கொண்டுள்ளது, மேலும் 18 மாவட்டங்கள் கொண்ட கோண்டாப் கவுண்டி 2007 இல் சேர்க்கப்பட்டது). பின்னர் ஃபராஹன் கவுண்டியும் 2010 இல் இம்மாகாணத்தில் சேர்க்கப்பட்டது.

வரைபடம் கவுண்டி வரைபட விசை பக்ஷ் மையம்
அரக் A மத்திய அரக்
k கோண்டப்
அஷ்தான் Ash மத்திய அஷ்தியன்
திலிஜன் D மத்திய திலிஜன்
கோம்ஜன் K மத்திய கோம்ஜன்
m மிலாஜிர்ட்
கோம்யன் kh மத்திய கோம்யன்
k கமரேஷ்
மஹளட் M மத்திய மஹளட்
சவிஹ் S மத்திய சவிஹ்
N Nobaran
சஜான்ட் sh மத்திய சஜான்ட்
s சஜான்ட்
z ஜலின்
டஃப்ரிஷ் T மத்திய டஃப்ரிஷ்
f ஃபராஹான்
ஜரண்டிஷ் Z மத்திய மமுனியிஷ்
k கர்கியன்
அண்டை மாகாணங்களில்: E: இஸ்ஃபஹான், H: அமாதான், L: லொரஸ்தான், QM: கோம், Qz: Qazvin, T: தெஹ்ரான்

படக்காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Selected Findings of National Population and Housing Census 2011 பரணிடப்பட்டது 2013-05-31 at the வந்தவழி இயந்திரம்
  2. "Islamic Azad University of Khomein". Iaukhomein.ac.ir. Archived from the original on 2012-08-12. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
  3. Islamic Azad University of Saveh (in பெர்ஷியன்). Iau-saveh.ac.ir. Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
  4. "Islamic Azad University of Farahan". Iau-farahan.ac.ir. Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
  5. "موسسه آموزش عالي غير انتفاعي غير دولتي انرژي ساوه". Energy.ac.ir. 2012-07-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்கசி_மாகாணம்&oldid=3566535" இலிருந்து மீள்விக்கப்பட்டது