உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பெல்ஜியம் சண்டை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்ஜியம் சண்டை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

திருத்தம்

[தொகு]

சீராக இருப்பதற்காக எல்லா இடங்களிலும் இடாய்ச்சுலாந்து எனத் திருத்தியுள்ளேன். --செல்வா 15:15, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

செருமனி என்பது தமிழக பொது வழக்கு தானே. பின் ஏன் இடாய்ச்சுலாந்து என்று மாற வேண்டும். கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளுக்கெல்லாம் தமிழக பழைய வழக்கு என்று பயன்படுத்துகிறோமே. ஜெர்மனியை மட்டும் ஏன் இடாய்ச்சுலாந்தாக மாற்ற வேண்டும். இரண்டையும் பயன்படுத்தலாம் என்றிருப்பதே சரி. பன்னாட்டு ஊடகங்களிலும் புத்தகங்களிலும் ஜெர்மனி என்று பயன்படுத்துவதை அந்நாட்டு மக்களோ அரசோ வேண்டாம் என்று சொல்வதில்லை. பின் நாம் மட்டும் ஏன் பொது வழக்கு கூடாதென்று சொல்ல வேண்டும்?--சோடாபாட்டில் 15:33, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
செருமனி, இடாய்ச்சுலாந்து ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதில் எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் இடாய்ச்சு மொழியில் இல்லாத ஒலியைக்கொண்டு ஆங்கிலேயர்கள் அவர்களை அப்படி அழைக்கிறார்கள் என்பதற்காக நாம் தமிழிலும் அப்படி எழுதத்தேவை இல்லை (Germany, ஜெர்மனி). அந்நாட்டின் பெயர் இடாய்ச்சுலாந்து. அதனை அப்படியே எழுதுவதில் என்ன தவறு? இது பற்றி பலமுறை பல இடங்களில் உரையாடியுள்ளோம். ஆங்கிலேயர்கள் Germany என்பதை பிரான்சிய நாட்டார் Allemagne, எசுப்பானியர் Alemania என்கின்றனர். சொந்த நாட்டுக்காரர்கள் Deutschland என்கின்றனர். பின்லாந்தியர் Saksa என்கின்றனர், நெதர்லாந்தியர் Duitsland என்கின்றனர். இவர்கள் ஐரோப்பாவிலேயே இப்படிப் பல்வேறு விதமாகக் கூறுகிறார்கள். நாம் தமிழ் விக்கியில், கூடியமட்டிலும் ஒரு நாட்டின் மொழியில் அந்நாட்டின் பெயரை வழங்கும் பெயருக்கு நெருக்கமாகவும், தமிழ்முறைப்படியும் பெயர்களை வழங்குவது என்பது பரிந்துரையாக உள்ளது. இது நேர்மையான ஒன்று. கீழே பல்வேறு மொழிகளில் எப்படி வழங்குகின்றார்கள் என்று பாருங்கள். இடாய்ச்சுலாந்து என்பது இங்கிலாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து தாய்லாந்து என்று பல்வேறு நாட்டுப் பெயர்களுடன் இணக்கம் உடையதாகவும் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் இடாய்ச்சுலாந்து என்று நாட்டின்பெயரையும், இடாய்ச்சு மொழி என்று மொழியின் பெயரையும் மூலமொழிக்கு ஓரளவுக்கு நெருக்கமாக வருமாறு வழங்கி வருகின்றோம்.

[[ace:Jeureuman]] [[af:Duitsland]] [[als:Deutschland]] [[am:ጀርመን]] [[ang:Þēodscland]] [[ar:ألمانيا]] [[an:Alemanya]] [[arc:ܓܪܡܢ]] [[roa-rup:Ghermãnia]] [[frp:Alemagne]] [[ast:Alemaña]] [[gn:Alemaña]] [[ay:Alimaña]] [[az:Almaniya]] [[bm:Jermani]] [[bn:জার্মানি]] [[zh-min-nan:Tek-kok]] [[ba:Германия]] [[be:Германія]] [[be-x-old:Нямеччына]] [[bcl:Alemanya]] [[bi:Germany]] [[bar:Deitschland]] [[bo:འཇར་མན།]] [[bs:Njemačka]] [[br:Alamagn]] [[bg:Германия]] [[ca:Alemanya]] [[cv:Германи]] [[ceb:Alemanya]] [[cs:Německo]] [[cbk-zam:Alemania]] [[co:Germania]] [[cy:Yr Almaen]] [[da:Tyskland]] [[pdc:Deitschland]] [[de:Deutschland]] [[dv:ޖަރުމަނުވިލާތް]] [[nv:Béésh Bichʼahii Bikéyah]] [[dsb:Nimska]] [[dz:ཇཱར་མ་ནི་]] [[et:Saksamaa]] [[el:Γερμανία]] [[eml:Germâgna]] [[myv:Германия Мастор]] [[es:Alemania]] [[eo:Germanio]] [[ext:Alemaña]] [[eu:Alemania]] [[ee:Germany]] [[fa:آلمان]] [[hif:Germany]] [[fo:Týskland]] [[fr:Allemagne]] [[fy:Dútslân]] [[fur:Gjermanie]] [[ga:An Ghearmáin]] [[gv:Yn Ghermaan]] [[gd:A' Ghearmailt]] [[gl:Alemaña - Deutschland]] [[gan:德國]] [[got:𐌸𐌹𐌿𐌳𐌹𐍃𐌺𐌰𐌻𐌰𐌽𐌳]] [[hak:Tet-koet]] [[xal:Ниицәтә Немшин Орн]] [[ko:독일]] [[haw:Kelemānia]] [[hy:Գերմանիա]] [[hi:जर्मनी]] [[hsb:Němska]] [[hr:Njemačka]] [[io:Germania]] [[ig:Jémanị]] [[ilo:Alemania]] [[bpy:জার্মানি]] [[id:Jerman]] [[ia:Germania]] [[ie:Germania]] [[iu:ᔮᒪᓂ/jaamani]] [[os:Герман]] [[xh:IJamani]] [[zu:IJalimani]] [[is:Þýskaland]] [[it:Germania]] [[he:גרמניה]] [[jv:Jerman]] [[kl:Tysklandi]] [[kn:ಜರ್ಮನಿ]] [[pam:Alemania]] [[krc:Германия]] [[ka:გერმანია]] [[ks:जर्मनी]] [[csb:Miemieckô]] [[kk:Алмания]] [[kw:Almayn]] [[rw:Ubudage]] [[ky:Германия]] [[rn:Ubudagi]] [[sw:Ujerumani]] [[kv:Германия]] [[kg:Alemanyi]] [[ht:Almay]] [[ku:Almanya]] [[lad:Almania]] [[lo:ປະເທດເຢັຽລະມັນ]] [[la:Germania]] [[lv:Vācija]] [[lb:Däitschland]] [[lt:Vokietija]] [[lij:Germania]] [[li:Duutsjlandj]] [[ln:Alémani]] [[jbo:dotygu'e]] [[lg:Girimane]] [[lmo:Germania]] [[hu:Németország]] [[mk:Германија]] [[mg:Alemaina]] [[ml:ജർമ്മനി]] [[mt:Ġermanja]] [[mi:Tiamana]] [[mr:जर्मनी]] [[arz:المانيا]] [[mzn:آلمان]] [[ms:Jerman]] [[cdo:Dáik-guók]] [[mdf:Германие мастор]] [[mn:Герман]] [[nah:Teutontlālpan]] [[na:Germany]] [[nl:Duitsland]] [[nds-nl:Duutslaand]] [[ne:जर्मनी]] [[new:जर्मनी]] [[ja:ドイツ]] [[nap:Germania]] [[ce:Германе]] [[frr:Tjüschlönj]] [[pih:Doichland]] [[no:Tyskland]] [[nn:Tyskland]] [[nrm:Allemangne]] [[nov:Germania]] [[oc:Alemanha]] [[mhr:Немыч Эл]] [[uz:Olmoniya]] [[pa:ਜਰਮਨੀ]] [[pag:Germany]] [[pnb:جرمنی]] [[pap:Alemania]] [[ps:آلمان]] [[km:អាល្លឺម៉ង់]] [[pcd:Alemanne]] [[pms:Gërmania]] [[tpi:Siamani]] [[nds:Düütschland]] [[pl:Niemcy]] [[pnt:Γερμανία]] [[pt:Alemanha]] [[kaa:Germaniya]] [[crh:Almaniya]] [[ty:Heremani]] [[ksh:Dütschland]] [[ro:Germania]] [[rmy:Jermaniya]] [[rm:Germania]] [[qu:Alimanya]] [[ru:Германия]] [[sah:Германия]] [[se:Duiska]] [[sm:Siamani]] [[sa:जर्मनी]] [[sc:Germània]] [[sco:Germany]] [[stq:Düütsklound]] [[sq:Gjermania]] [[scn:Girmania]] [[simple:Germany]] [[ss:IJalimane]] [[sk:Nemecko]] [[cu:Нѣ́мьци]] [[sl:Nemčija]] [[szl:Mjymcy]] [[so:Jarmal]] [[ckb:ئاڵمانیا]] [[srn:Doysrikondre]] [[sr:Немачка]] [[sh:Nemačka]] [[su:Jérman]] [[fi:Saksa]] [[sv:Tyskland]] [[tl:Alemanya]] [[ta:செருமனி]] [[kab:Lalman]] [[tt:Алмания]] [[te:జర్మనీ]] [[tet:Alemaña]] [[th:ประเทศเยอรมนี]] [[ti:ጀርመን]] [[tg:Олмон]] [[tr:Almanya]] [[tk:Germaniýa]] [[udm:Германия]] [[uk:Німеччина]] [[ur:جرمنی]] [[ug:گېرمانىيە]] [[za:Dwzgoz]] [[vec:Germania]] [[vi:Đức]] [[vo:Deutän]] [[fiu-vro:S'aksamaa]] [[wa:Almagne]] [[zh-classical:德國]] [[vls:Duutsland]] [[war:Alemanya]] [[wo:Almaañ]] [[wuu:德国]] [[ts:Jarimani]] [[yi:דייטשלאנד]] [[yo:Jẹ́mánì]] [[zh-yue:德國]] [[diq:Almanya]] [[zea:Duutsland]] [[bat-smg:Vuokītėjė]] [[zh:德国]] --செல்வா 16:55, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சொந்த நாட்டுக்காரர்கள் டாய்ச்சுலாந்து என்று வழங்கினாலும். நூறாண்டுகளுக்கு மேலாக நாம் அவர்களை ஜெர்மனி/செருமனி என்று தானே வழங்கி வந்துள்ளோம். தமிழின் பொது வழக்கை நாம் ஏன் மாற்ற வேண்டும். அதுவும் அந்நாட்டுக் காரர்களுக்கு ஏற்புடைய பொது வழக்கல்லவா இது. நான் இடாய்ச்சுலாந்து என்று வழங்காதீர்கள் என்று சொல்லவில்லை. செருமனி யென்றும் வழங்க விட வேண்டு்மென்று தான் சொல்கிறேன். மற்ற நாட்டுக்காரர்கள் எப்படிக் குறிக்கிறார்கள் என்று தந்துள்ளீர்கள், அதுவே என் கூற்றை துணை செய்கிறதே. நாம் இது வரை வழங்கி வந்த செருமனியை எதற்காக மாற்ற வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கதிலிருந்து தமிழக பொது வழக்கில் செருமனி நுழைந்து விட்டது. இதை பயன்படுத்துவோர் பயன்படுத்தலாம் என்று தான் இருக்க வேண்டும். இடாய்ச்சுலாந்து ப்யன்படுத்துவோர் பயன்படுத்தட்டும். --சோடாபாட்டில் 17:03, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில், நீங்கள் செருமனி என்று எழுதினால் அதனைத் தவறு என்று நான் சொல்லவில்லை. என் மறுமொழியில் முதல்வரியே செருமனி, இடாய்ச்சுலாந்து ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதில் எனக்கு மறுப்பு இல்லை. என்பதே. ஜெர்மனி என்று கிரந்தம் கலந்து எழுதுவதைக் குறைக்கலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் முக்கியமான காரணம், சொந்தநாட்டுக்காரர்கள் எப்படி ஒலிக்கின்றார்களோ அதற்குக் கூடிய அளவு நெருக்கத்துடனும், தமிழ் மொழியின் இயல்புக்கு ஒட்டியும் எழுதுவது என்பதை முறையாகக் கொண்டிருக்கின்றோம். சீர்மை கருதியும் (பிற கட்டுரைகளிலும் இடாய்ச்சுலாந்து என்று இருப்பதால்) இடாய்ச்சுலாந்து என்றே எழுதலாம் என்றும் கருதுகிறேன். தேவையான இடங்களில் செருமனி என்று பிறைக்குறிகளுக்குள் இட்டுக்காட்டலாம், எனக்கு மறுப்பில்லை. ஒருகாலத்தில் காரியதரிசி, அபேட்சகர் என்று எழுதி வந்தார்கள். அப்படியே இன்றும் அப்படியே எழுத வேண்டும் என்று கூறமுடியாதுதானே. அதுபோலத்தான் இதுவும். செருமனி (cherumani) என்பது பெரிய மாற்றம் இல்லை. ஏன் ஆங்கிலேயன் கூறுவதுபோலவே கூறவேண்டும்?!! --செல்வா 20:31, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா. ஆங்கிலேயர் பயன்படுத்துவது என்பதை மீறி தமிழின் பொது வழக்கில் புகுந்து விட்டதாக நான் நினைப்பதால் தான் இதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன். அடைப்புகுறிகளின் இனி குறித்து விடுகிறேன்.--சோடாபாட்டில் 20:44, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

படையலகுகள்

[தொகு]

செல்வா,

டிவிசன், ஆர்மி கூருப் போன்றவை படை அலகுகள். அவற்றை அனைத்தையும் “படைப்பிரிவு” என்று ஒட்டுமொத்தமாக ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது. அர்த்தம் கொண்டு வைக்கப்ப்ட்டவையும் அல்ல (செய்முறையால் உருவானவை). ராணுவ தரங்களை எப்படி அப்படியே பயன் படுத்துகிறோமோ அப்படியே இவற்றையும் பயன் படுத்த வேண்டும்.--சோடாபாட்டில் 15:17, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

அனைத்தையும் படைப்பிரிவு என்று சொல்ல வேண்டாம். ஆனால் மொழிபெயர்க்கலாம், அல்லது பொருத்தமான பெயரிடலாம். பேரணி, அணி, பெரும்பிரிவு, பிரிவு, படைக்குழு போன்று. தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகளுக்குத் தமிழ்ப்பெயர் இருந்திருக்கக்கூடும். -- சுந்தர் \பேச்சு 15:23, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சுந்தர், இவை அலகுகள். எப்படி SI அலகுகளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோமோ அவை போல இவற்றை அப்படியே ஏற்பது தான் நல்லது. பல இடங்களில் அர்த்தமின்றி பெயர் உருவானது. ஆர்மி, கோர் போன்றவையெல்லாம் அர்த்ததுடன் உருவாகவே இல்லை.--சோடாபாட்டில் 15:26, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
விடுதலைப்புலிகள் ஒரு militia அமைப்பையே கொண்டிருந்தனர். அவற்றின் படைப்பிரிவுகள் ஒரே சீரான அளவோ அமைப்போ கொண்டவை அல்ல. அவர்களது அமைப்பு முறையை தேசிய ராணுவங்களுக்கு ஏற்றுக்கொள்வது ஒத்து வராது.--சோடாபாட்டில் 15:28, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஒட்டுமொத்தமாகப் பொருந்தாது என ஒதுக்கி விட முடியாது என்றே நினைக்கிறேன். காட்டாக அவர்களது ஒற்றர்படைக்குச் சிறப்பானதொரு பெயரிட்டிருந்ததாக நினைவு. போரியல் இலக்கிங்களைப் பல மொழிகளில் இருந்து அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்ததாகப் படித்திருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:31, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சுந்தர், அலகுகளை மொழிபெயர்ப்பது - அதுவும் ஆங்கில அமெரிக்க/நேட்டோ அலகுகள் பெரும்பாலும் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் - தேவையில்லாதது. புலிகள் என்றும் பத்தாயிரம் வீரர்களுக்கு மிகுந்த படைப்பிரிவுகளை பயன்படுத்தியதே இல்லை. அவர்களது பெரும் பிரிவுகளில் ஆயிரக்கணக்கில் மட்டுமே வீரர்கள் இருந்துள்ளார்கள். இதனால் அவர்களது பிரிவுகள் என்றுமே மேற்கோள் குறிகளால் மட்டுமே ராணுவ வரலாற்றாளர்களால் குறிக்கப்படுகின்றன. இதே நிலைதான் உலகின் பல சிறு புரட்சிப் படைகளுக்கும் எ. கா. irish republican army “பிரிகேட்” என்ற சொல்லை பயன்படுத்தினாலும் ஒரு ira பிர்கேட்டில் 200 பேர் தான் இருப்பார்கள். அது போலவே புலிகளின் அலகுகளும். அவற்றை தேசிய ராணுவங்களுக்கு பயன்படுத்தவே கூடாது. இது ஒரு standardisation பிரச்சனை. புலிகள் ரெஜிமண்டுக்கு படையணி என்று பெயர் வைத்திருக்கலாம். ஆனால் புலிகளின் ரெஜிமண்ட்டும் தேசியப் படைகளின் ரெஜிமண்டும் ஒன்றே அல்ல.--சோடாபாட்டில் 15:39, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
படையலகுகளை மொழி பெயர்ப்பது ராணுவ தரங்களின் பெயர்களை மொழிபெயர்ப்பதற்கு ஒத்தது. கேப்டன், லெப்டினன்ட், மேஜர் போன்றவற்றை தமிழில் மொழிபெயர்ப்பதுக்கு ஒததது. ஆர்மி, ஆர்மி குரூப், கோர், டிவிசன் போன்றவை அர்த்தமுள்ள ஆங்கில வார்த்தைகள் வருவதால் மொழிபெயர்ப்புக்கு ஒத்தவை போன்று தோன்றும். ஆனால் இவை முதலில் வேறு ஏதோ அர்த்ததில் வைக்கப்பட்டு ஒரு நூறாண்டுகளாக நடைமுறையில் மெல்ல பெயர்களாக மாறி விட்டன. ஜெர்மானிய படைகளும், சோவியத் படைகளும் ஆரம்பத்தில் தங்கள் மொழியில் இதற்கு வேறு பெயர்களை வைத்திருந்தாலும், இருபதாம் நூற்றாண்டில் இப்பெயர்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டர்கள். பொதுநலவாய நாடுகள் அனைத்தும் இப்பெயர்களையே பயன்படுத்துகின்றன. இந்தியை முடிந்த வரை திணிக்கப் பார்க்கு இந்திய ராணுவம் கூட இவற்றை இப்படியே தான் பயன்படுத்துகிறது. சீன படைகளும் கூட இச்சொற்களையே பயன்படுத்துகின்றன.
ஆனால் அனைத்து படையலகுகளிலும் இந்த நிலை கிடையாது. எ. கா theatre, front போன்றவை அர்த்தம் கொண்டே வைக்கப்படுகின்றன. பிற மொழிகளில் இவற்றை மட்டும் மொழிபெயர்த்து விடுகிறார்கள். எனவே தான் படை அமைப்பு கட்டுரையில் நான் இவற்றை களம், முனை என்று மொழி பெயர்த்துள்ளேன். மற்ற அலகுகளை அப்படியே விட்டு விட்டேன். --சோடாபாட்டில் 15:49, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில், மாற்றுக்கருத்துகள் உள்ளன. டிவிசன் என்பது பிரிவுதான். கணக்கில் வேண்டுமானால் வகுத்தல் ஆக இருக்கலாம். படையலுகளைக் கட்டாயம் தக்கத் தமிழ்ச்சொற்களில் எழுதலாம். தேவையான இடங்களில் தக்கவாறு பிறைக்குறிகளுக்குள் ஆங்கில, இடாய்ச்சு, பிரான்சிய மொழிகளிலும் குறிக்கலாம். அங்கேரியப் படைப்பிரிவுக்கு Hadosztály என்று பெயர் (division அல்ல).சீன மொழியில் 師 (சீ^ அல்லது சீ5, shī) என்பதாகும் வியட்நாமிய மொழியில் Sư đoàn, துருக்கி மொழியில் Tümen. ஆகவே "எல்லோரும்" என்பது சரியல்ல என்பது என் கருத்து. இந்தப்படைப்பிரிவுகளிலும் சீரான் வரைமுறைகள் ஏதும் இல்லை. ஆங்கிலத்தில் "usually" என்று எழுதிவிட்டு 10,000 முதல் 30,000 வரை என்பர். இந்திய ஐரோப்பிய மொழிகளில் ஒருவாறும் பிற மொழிக்குடும்பங்களில் வேறு மாதிரியும் இருப்பது தவறல்லவே. இந்திய ஐரோப்பிய மொழிகளிலும் கூட மொழிக்கு மொழி இச்சொல் வேறுவிதமாகப் பயன்படுகின்றது. இது பற்றி இன்னும் நிறைய சொல்ல உள்ளது. அடிப்படை என்னவென்றால் தமிழில் புரியும்படியாக இருக்க வேண்டும். தரைப்படைப் பிரிவு, அணி என்று பொருத்தமான ஒன்று இருந்தால் போதும். மேலும் பின்னர் எழுதுகிறேன்..--செல்வா 17:15, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

செல்வா, எல்லாரும் என்பது தவறுதான். ஆனால் மிகப்பெரும்பாலும் நேட்டோ/பொதுநலவாயக் குறியீடுகளையே ராணுவ வரலாற்றாளர்கள் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள நாடுகளில் வேறு பெயர்கள் இருக்கக் காரணம் அப்பெயர்களில் சில காலத்துக்கு முன்னர் படைப்பிரிவுகள் இருந்ததால் தான். சீனாவிலும், வியட்நாமிலும் ஐரோப்பிய படையமைப்பு ஒத்துவராமல் தனியே ராணுவ முறைகள் உருவாகி பயன்பாட்டில் வந்துள்ளன. அதனால் அவர்கள் நாட்டு படைப்பிரிவுகளுக்கு அப்பெயர்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஆனால் தமிழ் சூழலில் ஐரோப்பிய ராணுவ முறை அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து இப்பெயர்கள் பயன்பாட்டில் உள்ளனவே. Since millitary history is predominantly a Anglo-Nato field பெரும்பாலான நாடுகள் மாறி வருகின்றன. இன்று existing millitary history literature ஐ பார்த்தால் இது புலனாகும். தற்போது வெளியாகும் பெரும்பாலான மொழிப் புத்தகங்கள், ராணுவக் கல்லூரிகளின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் நேட்டோ குறியீடுகளையும் இந்த அலகுகளையும் பயன்படுத்துகின்றன
ஆனால் இன்று அனைத்து நாடுகளின் படைப்பிரிவுகளும் நேட்டொ வரையறைகளை நோக்கி நகருகின்றன. தமிழ் உலகு ஆங்கில படையலகுக்குப் போய் இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. மதராஸ் ரெஜிமண்டும் மத்ராஸ் டிவிசனும் வந்து விட்டனவே. தமிழில் புரியும் படி இருக்க வேண்டுமென நீங்கள் கூறுவது புரிகிறது. ஆனால் ஏனைய அலகுகளை நாம் மொழிபெயர்க்கவில்லையே. அலகு என்பதை உணர்த்தி விட்டால், தானாக புரிந்து விட்டுப் போகிறது (உள்ளிணைப்புகள் போதுமே). சீரான வரைமுறைகள் இல்லை என்று எண்ணிகையை வைத்து சொல்லக்கூடாது. எண்ணிக்கை மாறுபடும் அது by design. ஆனால் tactical structure மாறுபடாது.
மற்ற துறைகளில் அலகுகளுக்கு அப்படியே வேறு மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளும் நாம் இங்கு ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? மேலும் படைப்பிரிவுகளை வைத்து தான் ராணுவத் தரங்கள் உருவாகுகின்றன. பிரிகேடியரையும் கேப்டனையும் அப்படியே ஏற்கும் போது பிரிகேடையும் பட்டாலியனையும் மட்டும் ஏன் மொழி பெயர்க்க வேண்டும். பிரிகேடியரும் கேப்டனும் புரியும்படி தானே உள்ளன?
சுருக்கமாகச் சொல்லின் - போரியல் அலகுகளை si அலகுகளைப் போன்றே நடத்த வேண்டும். டெசிமீட்டர், மெகாலிட்டர் போன்ற சொற்களுக்கு தனியர்த்தம் கண்டு நாம் பழகவில்லையென்பதனால் நாம் மொழிபெயர்க்க நினைப்பதில்லை. ஆனால் “டிவிசன்”, “ஆர்மி”, “ஆர்மி குரூப்” என்றவுடன் இந்த ஆங்கில சொற்களின் பொதுமை அர்த்தங்கள் நினைவுக்கு வருகின்றன. எனவே தான் மொழிபெயர்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது. முன் சொன்னது போல கேப்டன், லெப்டினன்ட் போன்றவற்றுக்கு அர்த்தம் தோன்றினால் அவற்றையும் மொழிபெயர்க்கத் தான் தோன்றும். --சோடாபாட்டில் 17:41, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில் உங்கள் கருத்துகள் புரிகின்றன ஆனால் ஏற்பதில் பல இடர்கள் இருக்கின்றன. முதலாவது SI அலகுகள் போல் என்னும் உங்கள் வாதம் எனக்கு ஒருசிறிதும் ஏற்பில்லை. எசு.ஐ அலகில் கூட நொடி என்று நாம் மாற்றித்தான் பயன்படுத்துகிறோம். ஆம்ப்பியர், கெல்வின் முதலானவை அறிவியலாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்த தனிமாந்தப் பெயர்ச்சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. அனைத்துலக முறையலகுகளின் பயன்பாடு வேறு படைப் பிரிவுகளின் பயன்பாடு வேறு. ஆங்கிலோ-அமெரிக்க,நேட்டோ முறைகளை அதன் உறுப்பினர் நாடுகள் ஏற்றிருப்பதில் வியப்பில்லை. ஆனால் அதுவே உலகப் பொதுமுறை என்பது ஏற்க இயலாதது. சீன, நிப்பானிய, துருக்கி, வியட்நாம், கொரிய மொழியாளர்கள் வேறு பெயர்கள் கொண்டுள்ளனர். ஒருசிலர் தொலைக்காட்சியை நாமா கண்டுபிடித்தோம் ஆகவே அதனை டெலிவிசன் என்றுதான் எழுத வேண்டும் என்கிறார்கள் (இவர்களுக்கு யார் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார்கள் என்றோ யார் யாரெல்லாம் ஊட்டம் தந்தார்கள் என்றோ அறியாதது ஒருபுறமிருக்க, எதற்காக தொலைக்காட்சி என்று கூறுகிறோம் என்பதனையும் அறியார்). தமிழர்களிடம் இன்று படையில்லை என்பதால் ஆங்கில-அமெரிக்க-நேட்டோ முறையை ஏற்க வேண்டும் என்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. பட்டாலியன் என்றோ, டிவிசன் என்றொ பிறைக்குறிகளுக்குள் கொடுத்துவிட்டு, ஈடான சொற்களுடன் விளக்கம் முதலியனவற்றைத் தமிழில் தருவது பயனுடையதாக இருக்கும். தமிழில் படைவகைகளைப் பற்றி அபிதான சிந்தாமணி, உரிமைப்படை, துணைப்படை, மூலப்படை, அமயப்படை, வன்படை, மென்படை, பயிற்சிப்படை, குழுப்படை, தனிப்படை, கருவிபெறுபடை, தன்கருவிப்படை, ஊர்திபெறுபடை, தன்னூர்திப்படை என வகைகளைக் கூறுகின்றது. அவற்றையும் விளக்குகின்றது. படைவகுப்பு என்னும் தலைப்பில் சில கருத்துகளைப் பற்ரிக் கூறுகின்றது. ஒழுங்குபட நிரைநிரையாக நிற்றல், பிரிந்து நிற்றல் போன்ற சில செய்திகளைக் கூறுகின்றது. தற்கால ஆங்கில-அமெரிக்க-நேட்டோ படைப்பிரிவுகள் பொதுவாக ஒரு 10-12 இருக்கும் அவற்றுக்குத் தமிழில் பெயர்கள் இட்டு வழங்குவது பொருள்விளங்குமாறு இருக்கும். அவர்களேகூட Squad/Section, REgiment/Brigade என மாற்றுப்பெர்யர்களுடன் புரியுமாறு (ஆங்கிலேயர்களுக்கு) வைத்துள்ளனர்.

படை வகுப்புகளைக் கீழ்க்காணுமாறு குறிக்கலாம்.

பிணை Fireteam 4 NCO பிணைத்தலை
குழுப்பிணை Squad/Section 8–13 குழுத்தலை Squad Leader
(தரை) அணி Platoon 26–55 அணித்தலை Platoon Leader
கும்பணி Company 80–225 கும்பணித்தலை Captain/Major
பொருதணி Battalion 300–1,300 பொருதணித்தலை(Lieutenant) Colonel
படைக் கிளைப்பிரிவு Regiment/Brigade 3,000–5,000 கிளைப்பிரிவுத் தலை(Lieutenant) Colonel/Brigadier (General)
படைப் பிரிவு Division 10,000–15,000 பிரிவுத்தலை Major General
படைப்பேரணி Corps 20,000–45,000 பேரணித்தலை Lieutenant General
களப்படை Field army 80,000–200,000 களப்படைத் தலைGeneral
துறைப்படை Army group 400,000–1,000,000 நிலப்படைத் தலை Field Marshal
நிலப்படை Army Region 1,000,000–3,000,000 Field Marshal
விரிநிலப்படை Army theater 3,000,000–10,000,000 Field Marshal

பிறைக்குறிகளுக்குள் கும்பணித்தலை (காப்டன்/மேச்சர்), பிரிவுத்தலை (மேச்சர் செனரல்) என்றெல்லாம் குறிக்கலாம். இவை முன்மொழிவுதான். நீங்கள் யாவரும் கருதிப்பார்க்க. நிலப்படைத் தலை என்பதை தலைமூக்கன் என்றும் கூறலாம். தமிழில் மூக்கன், முன்பன், முதல்வன், முதலி (படைமுதலி), தளபதி (இது சமசுக்கிருதம்), முதலான சொற்களும் உள்ளன. தக்க முறையில் சீர்செய்து வழங்குவது நல்லது. கட்டாயம் பிறைக்குரிகளுக்குள் பிரிகேடியர், கர்ணல் (கிளைப்பிரிவுத் தலை அல்லது கிளைத் தலை) என்றும் குறித்து வரலாம்.

நிலப்படை என்பதை நிலப்பட்டாளம் என்றும் Army theater என்பதை முழுப்பட்டாளம் என்றும் கூறலாம்.

--செல்வா 22:00, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நல்ல பரிந்துரைகள், செல்வா. சோடாபாட்டில், தமிழில் இன்னமும் வழக்கூன்றாத கலைச்சொற்களில் கட்டாயம் தமிழ்ச்சொற்களை ஆளலாம் என்பது என் கருத்து. (மற்றவற்றையும் தமிழாக்கினால் நல்லதுதான்.) அடி, நொடி போன்ற அலகுகளையும் நாம் பயன்படுத்துகிறோம். எசு.ஐ. தரம் என்றால் ஒரே போலச்சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று ஒப்புகிறேன். ஆனால் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என்பதில்லை எனக் கருதுகிறேன். படைப்பிரிவுகளுக்கானத் தனிக்கட்டுரைகளை உருவாக்கி, அவற்றில் ஆங்கில-தமிழ் இணைச் சொற்களைத் தந்துவிட்டால் போதும். அதன்பின் அவற்றைப் பயன்படுத்தும்போது புரிதலில் சிக்கல் எதுவும் இருக்காது. சீனர்கள் போலவோ இல்லையோ, ஆனால் சோழர்கள் பெரும்படைகளை வைத்திருந்தவர்கள் தானே? அதனால் போரியலில் வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்களுக்கு மேலும் வலுவூட்டலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:33, 5 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஐரோப்பிய காலனிக்காலத்தில் தமிழகத்திலும் ஈழத்திலும் என்ன பெயர்களைப் பயன்படுத்தினார்கள் என்றும் பார்க்கலாம். ஒல்லாந்தரும் ஆங்கிலப்பெயர்களைத்தான் பயன்படுத்தினார்களா? தமிழர்கள் நிறைந்த பட்டாளத்தில் தமிழ்ப்பெயர்கள் எதுவும் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. இந்திய இராணுவத்திலும் (பெங்களூரில் உள்ள) மதராசு சாப்பர்சு போன்ற படைக்கிளைப்பிரிவுகளில் கட்டளைகளை இந்திக்குப் பதிலாகத் தமிழில் தரத் தொடங்கியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். -- சுந்தர் \பேச்சு 09:38, 5 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]