உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:செல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


நானும் என் மனைவியும் பிப்ரவரி 2009 இல் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையின் உஃகுரு உச்சியை (5,895 மீ) எட்டியபோது எடுத்தபடம்
கிளிமஞ்சாரோ மலை மலையேறும் வழியில் கற்குழம்புப் பாறை (லாவா டவர்) என்னும் இடத்தில் உள்ள முகாமில் இருந்து எடுத்த படம். முகாமுக்குக் கீழே முகில் கூட்டங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கற்குழம்புப் பாறை முகாம் 4642 மீ. படத்தில் மனைவியும் மகளும்
பயனர் செல்வாவின் பாறை ஏற்றம் (25 செப்டெம்பர் 2004). ராட்டில் சினேக்கு பூங்கா, ஒன்ட்டாரியோ, கனடா.



பெயர்: செ.இரா.செல்வக்குமார் (C.R.Selvakumar)

பிறப்பு: தமிழ்நாடு, இந்தியா

வாழும் நாடு: கனடா

தொழில்: பேராசிரியன், மின்னியல், கணினி இயல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா


விக்கிப்பணி:

விக்கியில் தொடங்கிய கட்டுரைகள்
விக்கியில் பங்களிப்புகள்

வலையிடங்கள்:

என் வலைப்பதிவு தமிழ்வெளி
http://ece.uwaterloo.ca/~selvakum/biop.html
http://www.ece.uwaterloo.ca/People/faculty/selvakumar.html

செல்வாவின் ஆர்வங்களில் சில

[தொகு]
ஏமா மாலினி. பம்பாயில் ஐ.ஐ.டியில் படித்த காலத்தில் மராட்டிய புத்தாண்டு (4-4-1973) அன்று வரைந்த ஓவியம்
செல்வாவின் இன்னொரு ஓவியம் (டிசம்பர் 21, 1972)
மிருதங்கம் வாசிக்கும் கலைஞர் ஒருவரின் களிமண் சிலை. களிமண் சிலை சுட்டது. நான் இச்சிலையைச் செய்த காலம் ஏறத்தாழ 1966-67. செய்த இடம் கோவையில் ஆனைமலை அருகே சித்தூர் என்னும் ஊரில்.
பெரு நாட்டில் உள்ள இன்க்கா மலைப்பாதை வழியே நான்கு நாட்கள் ஏறிச்சென்று மலையுச்சியில் இருக்கும் அழிந்த நகரமாகிய மாச்சு பிச்சு என்னும் நகரத்தைக் காணச் செல்லும் பொழுது வழியில் மிக உயரமான, 4212 மீட்டர்]உயர இடமாகிய இறந்தவள் கணவாய் (வார்மிவன்யுசுக்கா கணவாய் [Warmiwañusca or "Dead Woman's Pass]) என்னும் இடத்தில் பயனர் செல்வாவும் அவர்தம் மனைவி மகள்களும் நிற்கும் காட்சி
.
மாச்சு பிச்சு அழிந்த நகரம் முன்னே பயனர் செல்வாவும் அவர் குடும்பமும். படம் எடுத்த ஆண்டு 2007. இந்நகரம் 2,430 மீட்டர் உயரத்தில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலே ஒரு மலைச்சரிவில் அமைந்துள்ளது.அமைந்துள்ளது. இந்நகரம் கி.பி 1430 இல் இன்க்கா மக்களால், எசுப்பானியர் வருகைக்கு முன்னர் கட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செல்வா&oldid=3848210" இலிருந்து மீள்விக்கப்பட்டது