பேச்சு:உள்நோக்கியியல்
இக்கட்டுரையை மொழிபெயர்த்த சாந்த குமார் அவர்களுக்கு நன்றி. அருள்கூர்ந்து செய்திருக்கும் திருத்தங்களைப் பார்க்கவும் (செய்த திருத்தங்கள்தாம் சிறந்ததென்று கருத வேண்டாம்). கட்டுரையில் கீழ்க்கண்ட தொடரைக்கண்டேன்: இரணடாம் உலகப்போரின் இறுதியில் இந்த தொழில்நுட்பம் மேலும் மிகவும் அடக்கமானதாக மாறியது (எனக்குப் புரியாததால் ஆங்கில விக்கியில் என்ன எழுதியுள்ளது என்று பார்த்தேன்: The technology available at the end of the Second World War was still very modest). இது போன்ற தொடர்கள், தமிழ்வழி படிப்பவர்க்குப் புரியாமல் இருக்கும் என்பதனை நன்கு உணர்ந்து தக்கவாறு மொழி பெயர்க்க வேண்டுகிறேன். அப்படியே நேரடியாக மொழி பெயர்க்க வேண்டும் என்பது தேவையே இல்லை (விக்கியின் தேவைப்படி). ஒரு கருத்து தமிழில் புரியும்படியாகவும் இயல்பாகவும் இருத்தல் வேண்டும். அடுத்ததாக ஆங்கிலச்சொல்லாகிய scopy என்பதை ஸ்கோபி என்று எழுதினால் தமிழில் sgobi என்பது போலத்தான் படிக்க வேண்டும், -scopy என்று படிக்க வேண்டும் என்று விரும்பினால் ஸ்க்கோப்பி என்று எழுதுதல் வேண்டும். செய்தி ஊடங்கங்களும் பல எழுத்தாளர்களும் செய்யும் பெரும்பிழை இது. தமிழில் ஒலிப்பு மிக நுட்பமானது (எழுத்துச்சூழலின் படி, இடம்சார்ந்து வருவது. வல்லின எழுத்து வலிந்து ஒலிக்க வேண்டும் எனில் அதற்கு முன்னே வல்லின ஒற்று வருதல் வேண்டும் - முதல் எழுத்தாக இல்லாவிடின். இது மிக எளிய விதி). அதே போல சகரமானது மெல்லின, இடையின எழுத்துகளுக்கு பின் இயல்பாய்க் காற்றொலி சகரமாய்த் (s ஒலி ஆகத்) தோன்றும். பென்சில் என்றாலே போதும் பென்ஸில் என்று எழுதுதல் தேவை இல்லை. பசி, புசி, கசி போன்ற சொற்களில் வருவன போன்று மிசிசிப்பி (Mississippi) என்றாலே போதும். மிஸ்ஸிஸிப்பி என்று பல கிரந்த எழுத்துகள் இட்டு எழுதத் தேவை இல்லை. கூடிய மட்டிலும் எளிமையாக தமிழ் எழுத்துகளில் எழுதுதல் பரிந்துரை. --செல்வா 21:14, 21 ஏப்ரல் 2010 (UTC)
- எண்டாஸ்கோபியை 'உள்நோக்கி' என மாற்றுவது தவறு. இன்னொரு த.வி.கட்டுரையிலேயே இது கையாலப்பட்டுள்ளது (கலைஞர் காப்பீட்டுத் திட்டம்). பொதுவக மக்களிடையே அது எண்டாஸ்கோபியை எனதான் அறியப்படுகிரது (http://www.dinamalar.com/Supplementary/hdmalar_detail.asp?news_id=301&dt=10-19-09) --217.169.51.254 10:25, 22 ஏப்ரல் 2010 (UTC)
Start a discussion about உள்நோக்கியியல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve உள்நோக்கியியல்.