உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளைத்தக்காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cape gooseberry
Cape gooseberry flower
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. peruviana
இருசொற் பெயரீடு
Physalis peruviana
L.
வேறு பெயர்கள் [1]
  • Alkekengi pubescens Moench
  • Boberella peruviana (L.) E.H.L. Krause
  • Physalis esculenta Salisb.
  • Physalis latifolia Lam.
  • Physalis tomentosa Medik.

பிள்ளைத்தக்காளி (Physalis peruviana) என்பது ஒரு தாவரமாகும். இதன் தாயகம் பெரு ஆகும். இதன் தாவரப் பெயர் பைசாலிஸ் பெருவியானா என்பதாகும். இது தமிழகத்திள்ள நீலகிரி மலைப்பகுதிகளில் நன்கு விளைகிறது. இச்செடி 45 முதல் 90 செ.மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இப்பழத்திலிருந்து பழக்கூட்டு செய்யலாம். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பழங்கள் சனவரி - மே மாதங்களில் கிடைக்கும். ஒரு எக்டரில் 20,000 கிலோ பழங்கள் கிடைக்கும்.

சத்துகள்

[தொகு]

நூறு கிராம் பழத்தில் உள்ள சத்துகள் (கிரமில்)

  • புரதம் 1.8
  • கொழுப்பு 0.2
  • நார்ப்பொருள் 3.2
  • மாவுப் பொருள் 11.1
  • கால்சியம் 0.01
  • பாஸ்பரஸ் 0.067
  • இரும்பு 0.002

மருத்துவப் பண்புகள்

[தொகு]
  • இப்பழம் சிறுநீரைப் பெருக்கி சிறுநீர் பாதையை சுற்றம் செய்கிறது. இதனால், சீறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகிறது. இச்செடியின் இலையை நெருப்பனலில் வாட்டி வீக்கத்தின்மீது போட வீக்கம் கரைந்து குணமாகும்.[2]
  • இப்பழத்தை நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நம் கல்லீரலில் உள்ள கழிவுகளை நன்கு சுத்தம் செய்து நல்ல ஆரோக்கியமான செல்களை உருவாக்கி ஆரோக்கியமான கல்லீரலாக மாற்றும் வல்லமை கொண்டது.
  • நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
  • எக்ஸிமா (eczema) என்று சொல்லக்கூடிய தோல் அரிப்பை குணப்படுத்தும்.

இதில் உள்ள ஃபிளாவினோய்ட் (flavinoid) என்ற பொருள் நல்ல Antioxidant (கிருமிகளை எளிதில் அழிக்க கூடியது ) ஆக உள்ளது.

  • இதில் உள்ள புரத, நார், கொழுப்பு மற்றும் இரும்பு முதலிய சத்துக்கள் நம் உடலுக்கு நல்ல நோயெதிரிப்பு சக்தியை (immunity power)வழங்குகிறது.

அத்துடன், பால்வினை நோய்களையும் குணப்படுத்துகிறது.

  • நல்ல நோயெதிர்ப்பு சக்தியை(immunity ) நம் உடலுக்கு வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.
  2. அர்ச்சுணன் (செப்டம்பர் 2008). மருத்துவத்தில் காய்கனிகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், அம்பத்தூர். pp. 57, 58. {{cite book}}: Check date values in: |year= (help)