நிம்ருத்
நிம்ருத் | |
---|---|
மனிதத் தலையும், கழுகின் சிறகுகள் மற்றும் சிங்கத்தின் உடலைக் கொண்ட லம்மசு சிற்பம், மன்னர் இரண்டாம் அசூர்நசிபால் அரண்மனை, இதனை 2016ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்து தகர்த்தனர்.[1] | |
மாற்றுப் பெயர் | சலா, கலாக், கல்ஹு |
இருப்பிடம் | நூமானியா, நினிவே ஆளுநகரகம், ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 36°5′53.49″N 43°19′43.57″E / 36.0981917°N 43.3287694°E |
வகை | உலகப் பாரம்பரியக் களம் |
பரப்பளவு | 3.6 km2 (1.4 sq mi) |
நிம்ருத் (Nimrud) (/nɪmˈruːd/; அரபு மொழி: النمرود) தற்கால ஈராக் நாட்டின் நினிவே ஆளுநகரகத்தில் மோசுல் நகரத்திற்கு தெற்கில் 20 கிமீ தொலைவில் உள்ள பண்டைய நகரம் ஆகும். நிம்ருத் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
வடக்கு மெசொப்பொத்தேமியாவில் டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த நிம்ருத் நகரம்[2], கிமு 879 முதல் 706 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.
இந்நகரம் கிமு 1350 முதல், கிமு 612ல் நினிவே போர் முடியும் வரை பண்டைய அசிரியாவின் முக்கிய நகரமாக விளங்கியது.
நிம்ருத் நகரம் 360 ஹெக்டெர் பரப்பளவு கொண்டது.[3] பண்டைய நிம்ருத் நகரத்தின் அழிபாடுகள், தற்போதைய ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தின், மோசுல் நகரத்திற்கு தென்கிழக்கில் 30 கிமீ தொலவில் உள்ள அசிரியக் கிராமமான நூமானியாவில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிம்ருத் தொடர்பான அகழாய்வுகள் 1845, 1879 மற்றும் 1949 முதல் நடைபெற்றது.
நிம்ருத் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியத் தொல்பொருட்கள் ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு உள்ளது.[4][5]
விவிலியம் காலத்திய புது அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் பெயரால் இந்நகரம் நிம்ருத் என அழைக்கப்படுகிறது.[6][7]
பண்டைய வரலாறு
[தொகு]நிம்ருத் நகரம் நிறுவல்
[தொகு]மத்திய அசிரியப் பேரரசு காலத்தில் (கிமு 1365–1050), பேரரசர் முதலாம் சல்மேனேசெர் (கிமு 1274–1245) ஆட்சியின் போது நிம்ருத் பெரு நகரம் நிறுவப்பட்டது. இருப்பினும் அசூர் நகரமே பழைய அசிரியப் பேரரசின் தலைநகரகமாக கிமு 3500 முதல் விளங்கியது.
புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக
[தொகு]நிம்ருத் நகரம், புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக கிமு 879 முதல் 706 முடிய விளங்கியது. பேரரசர் இரண்டாம் அசூர்னசிர்பால் (கிமு 883–859) நிம்ருத் நகரத்தில் 5 கிமீ சுற்றளவில் சுவர்களுடன் கூடிய, குடியிருப்புப் பகுதிகள், பெரிய கோயில்களையும், அரண்மனைகளையும் எழுப்பினார். அரண்மனை சுவர்களில் சிற்பஙகள் செதுக்கி வைத்தார்.
தொல்லியல்
[தொகு]நிம்ருத் தொல்லியல் களங்களை அழித்தல்
[தொகு]2014ம் ஆண்டின் நடுவில், பண்டைய நிம்ருத் நகரத்தின் நினைவுச் சின்னங்களை, இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்த்தெறிந்தனர்.[10][11] [12][13]
ஈராக்கின் நிம்ருத் நகரத்தின் அருகில் உள்ள மோசுல் நகர அருங்காட்சியகத்தில் இருந்த அக்காத் பேரரசின் நினைவுச் சின்னங்களை 5 மார்ச் 2015ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் முற்றிலும் அழிக்கப்பட்டது.[14][15][16]
படக்காட்சிகள்
[தொகு]-
கலவியில் ஈடுபடும் மனிதனும், சிங்கமும், தந்தத் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம்
-
அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்நசிர்பால் சிற்பம், இலூவா அருங்காட்சியகம்
-
இரண்டாம் அசூர்நசிர்பால் சிற்பம், லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டி கலைகள் அருங்காட்சியகம்
-
சிங்கத்தை வேட்டையாடும் மன்னர், பெர்கோமன் அருங்காட்சியகம், பெர்லின்
-
லம்மசு சிற்பம், (பிரித்தானிய அருங்காட்சியகம்)
-
மன்னர் மூன்றாம் டிக்லத்-பிலெசரின் லம்மசு, (பிரித்தானிய அருங்காட்சியகம்)
-
முற்றுகையிடப்பட்ட நகரம், பிரித்தானிய அருங்காட்சியகம்
-
குதிரை வீரர்களின் போர்க்காட்சி, பிரித்தானிய அருங்காட்சியகம்
-
கழுகுத் தலை தேவதை, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டி கலைகள் அருங்காட்சியகம்
-
லம்மசு, மெட்ரோபாலிட்டன் கலைகள் அருங்காட்சியகம்
-
சிறகுகள் கொண்ட சிற்பம், வால்டர்ஸ் கலைகள் அருங்காட்சியகம்
-
எகிப்தில் செய்த இரண்டு நிம்ருத் தந்தச் சிற்பங்கள், (பிரித்தானிய அருங்காட்சியகம்)
-
நான்காம் சாம்சி அதாத் மன்னரின் சிற்பம், உயரம் 195.2 cm, அகலம் 92.5 cm, (பிரித்தானிய அருங்காட்சியகம்)
-
இரண்டு வில்வீரர்கள், ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம்
-
மரத்தின் உயிர், இஸ்தான்புல் அருங்காட்சியகம்
-
மரத்தின் உயிர், புருக்லீன் அருங்காட்சியகம்
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ancient Assyrian capital of Nimrud, and its famous ziggurat, bulldozed by retreating Islamic State
- ↑ Brill's Encyclopedia of Islam 1913-36, p.923
- ↑ Mieroop, Marc van de (1997). The Ancient Mesopotamian City. Oxford: Oxford University Press. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191588457.
- ↑ The Nimrud Project at Oracc.org
- ↑ The Nimrud Project at Oracc.org: Museums worldwide holding material from Nimrud; "Material from Nimrud has been dispersed into museum collections across the world. This page currently lists 76 museums holding Nimrud objects, with links to online information where available. The Nimrud Project welcomes additions and amendments to the list".
- ↑ Genesis 10:11-10:12, Micah 5:5, and 1Chronicles 1:10
- ↑ Brill's Encyclopedia of Islam 1913-36, p.923, "Nimrud": "At the present day the site is known only as Nimrud, which so far as I know first appears in Niebuhr (1778, p. 355, 368). When this, now the usual, name arose is unknown; I consider it to be of modern origin. It should be noted that names like Nimrod, Tell Nimrod, etc. are not found in the geographical nomenclature of Mesopotamia and the Iraq in the middle ages, while they are several times met with at the present day."
- ↑ Budge, Ernest Alfred Thompson Wallis (1920). By Nile and Tigris: a narrative of journeys in Egypt and Mesopotamia on behalf of the British Museum between the years 1886 and 1913. John Murray: London. இணையக் கணினி நூலக மையம்:558957855. https://archive.org/stream/cu31924088412592#page/n437/
- ↑ https://www.youtube.com/watch?v=qQAuntNaRWQ
- ↑ ஈராக்கின் பழங்கால நகரை அழிக்கும் ஐஎஸ்; அகழ்வாராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி
- ↑ அழிந்த நகரம் நிம்ருத்!
- ↑ இராக்கின் புராதன நகரம் தீவிரவாதிகளால் தரைமட்டமானது
- ↑ "Isis destroys thousands of books and manuscripts in Mosul libraries". The Guardian. 26 Feb 2015.
- ↑ Karim Abou Merhi (March 5, 2015). "IS 'bulldozed' ancient Assyrian city of Nimrud, Iraq says". AFP. பார்க்கப்பட்ட நாள் March 5, 2015.
- ↑ "Iraq: Isis militants pledge to destroy remaining archaeological treasures in Nimrud". The Independent. 27 Feb 2015. Archived from the original on 2022-06-21.
- ↑ Al Jazeera: ISIL video shows destruction of 7th century artifacts (26 February 2015)
- Frankfort, Henri, The Art and Architecture of the Ancient Orient, Pelican History of Art, 4th ed 1970, Penguin (now Yale History of Art), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140561072
- A. H. Layard, Nineveh and Its Remains, John Murray, 1849
மேலும் படிக்க
[தொகு]- Crawford, Vaughn E.; et al. (1980). Assyrian reliefs and ivories in the Metropolitan Museum of Art: palace reliefs of Assurnasirpal II and ivory carvings from Nimrud. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0870992600.
- Barbara Parker, Seals and Seal Impressions from the Nimrud Excavations, Iraq, vol. 24, no. 1, pp. 26–40 1962
- Barbara Parker, Nimrud Tablets, 1956: Economic and Legal Texts from the Nabu Temple, Iraq, vol. 19, no. 2, pp. 125–138, 1957
- D. J. Wiseman, The Nabu Temple Texts from Nimrud, Journal of Near Eastern Studies, vol. 27, no. 3, pp. 248–250, 1968
- D. J. Wiseman, Fragments of Historical Texts from Nimrud, Iraq, vol. 26, no. 2, pp. 118–124, 1964
- A. H. Layard, Discoveries in the Ruins of Nineveh and Babylon, John Murray, 1853
- A. H. Layard, The monuments of Nineveh; from drawings made on the spot, John Murray, 1849
- Claudius James Rich, Narrative of a residence in Koordistan, and on the site of ancient Nineveh. Ed. by his widow, 1836
- James Phillips Fletcher, Narrative of a Two Years' Residence at Nineveh, Volume 2, 1850
- Muzahim Mahmoud Hussein, Nimrud: The Queens' Tombs. 2016
வெளி இணைப்புகள்
[தொகு]- Metropolitan Museum: Digital Reconstruction of the Northwest Palace, Nimrud, Assyria
- Nimrud/Calah
- [1]
- Centro Ricerche Archeologiche e Scavi di Torino excavation site
- Archaeological site photographs at Oriental Institute
- More images from National Geographic
- Treasure of Nimrud rediscovered, article from the Wall Street Journal posted to a message board
- The Secret of Nimrud - Photographs by Noreen Feeney பரணிடப்பட்டது 2012-04-23 at the வந்தவழி இயந்திரம்