மெம்பிசு, எகிப்து
மெம்பிசும் அதன் தொன்மை இடுகாடுகளும்.(பிரமீடுகள்=கீசா முதல் தச்சூர் வரை) | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
படுகைத் தளக்குறியீடும்,பின்புலத்தில் இராம்செசு' II சிலையும். | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, iii, vi |
உசாத்துணை | 86 |
UNESCO region | அரபு நாடுகள் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1979 (3வது தொடர்) |
மெம்பிசு (மெம்ஃபிஸ், அரபு மொழி: ممفس; மிசிரி மொழி: ممفيس; கிரேக்க மொழி: Μέμφις) என்ற நகரம், முன்னைய எகிப்து நாட்டின் தலைநகரமாகும். தலைநகராக இருந்த காலம் கி.மு. 3100 முதல் கிமு2180 வரை ஆகும். இது கெய்ரோவின் தெற்கே, எல்வான் நகருக்கு அருகில் வரை இதன் சிதைவுகள் காணப்படுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக இந்த நகரமானது, பலபெயர்களால் அழைக்கப்பட்டது. குறிப்பாக பெரிய கோட்டைகளாலும், பெரிய தனித்துவ வடிவச் சுவர்களாலும், இந்த நகரம், வெள்ளைச்சுவர்கள் (Inebou-Hedjou, பிறகு Ineb-Hedj) என அழைக்கப்பட்டது. மேலும், இரட்டை நிலங்களின் வாழ்க்கை (Ankh-Tawy) என்ற பொருளுடைய பெயரிலும் அழைக்கப்பட்டது. பெப்பி என்ற பார்வோன் பெயரானது, கிரேக்க மொழியில் திரிபு அடைந்து, மெம்பிசு என இன்று அழைக்கப்படுகிறது.[1]
அமைவிடம்
[தொகு]நைல் நதியின் மேற்குக் கரையோரம், கெய்ரோவுக்கு 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் மக்கள் வாழவில்லை. இந்நகரம் கட்டும் போது, 30000 மக்கள் வசித்ததாக, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2]இந்நகருக்கு அருகே, மித் ரகினா(Mit Rahina) என்ற ஊரிலே மக்கள் வசிக்கின்றனர்.
பண்டைய எகிப்திய நகரங்கள்
[தொகு]எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
- தீபை
- கீசா
- அல்-உக்சுர்
- அபிதோஸ்
- அமர்னா
- அலெக்சாந்திரியா
- அஸ்வான்
- ஆவரிஸ்
- இட்ஜ்தாவி
- சக்காரா
- சைஸ்
- தனீஸ்
- தினீஸ்
- பை-ராமேசஸ்
- மென்டிஸ்
- ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
- ஹெல்லியோபோலிஸ்
இதனையும் காண்க
[தொகு]காட்சியகம்
[தொகு]-
சிலையும், சுத்தப்படுததியவரும்.
-
Ptah
-
கோவில்
-
ஓவிய எழுத்துக்கள்
-
நிர்மானச் சிதைவுகள்
-
நிர்மானச் சிதைவுகள்
-
நிர்மானச் சிதைவுகள்
-
தெய்வீக் காளை
-
எகிப்தை அலெக்சாண்டர் கைப்பற்றல்
-
அழிந்த அரண்மனை
-
Siamun
-
ஜோசர் பிரமிடு