உள்ளடக்கத்துக்குச் செல்

துவைதாத்வைதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிம்பர்க்கரின் சன்னதி, மேற்கு வங்காளம்

துவைதாத்வைதம் (Dvaitadvaita), நிம்பர்க்கரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம் ஆகும். இவரின் துவைத அத்வைத தத்துவம் பரம்பொருளுக்கும், தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள பேதத்தில் அபேதம் (வேற்றுமையில் ஒற்றுமை) என்பது கதிரவனுக்கும் அதன் கதிர்களுக்கும் உள்ள உறவு போன்றது. அல்லது நெருப்புக்கும் அதன் நெருப்புத்துளிகளுக்கும் உள்ள உறவு போன்று, பரமாத்மாவிற்கும், சீவர்களுக்கும் உள்ள உறவு, வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதே துவைதாத்வைதத்தின் கொள்கையாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. DvaitAdvaita
  2. Dvaitadvaita Philosophy of Nimbarka
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவைதாத்வைதம்&oldid=3913601" இலிருந்து மீள்விக்கப்பட்டது