உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மராஜிக தூபி

ஆள்கூறுகள்: 33°44′N 72°47′E / 33.73°N 72.78°E / 33.73; 72.78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருமராசிக தூபி
دھرم راجک اسٹوپا
தருமராசிக தூபி, தட்சசீலம், பாக்கித்தான்
தர்மராஜிக தூபி is located in பாக்கித்தான்
தர்மராஜிக தூபி
Shown within Pakistan
இருப்பிடம்தட்சசீலம், பஞ்சாப், பாக்கித்தான்
ஆயத்தொலைகள்33°44′N 72°47′E / 33.73°N 72.78°E / 33.73; 72.78
வகைவிகாரை
வரலாறு
கட்டப்பட்டதுகிபி 2ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனது5ஆம் நூற்றாண்டு
கலாச்சாரம்குசானர், கிடாரைட்டுகள்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வாளர்சர் சான் மார்சல்
அதிகாரபூர்வ பெயர்: தட்சசீலம்
அளவுகோல்iii, iv
வரையறுப்பு1980
சுட்டெண்139
தருமராசிக தூபிகளும், விகாரைகளும்
சிதைந்த பௌத்த சிற்பகளுடன் கூடிய விகாரை
தருமராசிக தூபியை சுற்றியுள்ள சிதைந்த பல விகாரைகள்

தருமராசிக தூபி (Dharmarajika Stupa) இதனை தட்சசீலம் பெரிய தூபி என்றும் அழைப்பர். மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு முதலில் தருமராசிக தூபி நிறுவப்பட்டது.[1] கிபி 2-ஆம் நூற்றாண்டில் குசான் பேரரசு காலத்தில் தருமராசிக தூபியை மறுசீரமைத்து பல பெரிய விகாரைகளுடன் நிறுவப்பட்டது. கிபி 5-ஆம் நுற்றாண்டில் எத்தலைட்டுகளின் மன்னர் மிகிரகுலன் ஆட்சிக் காலத்தில் தருமராசிக தூபி முற்றிலும் சிதைக்கப்பட்டது.

இப்பௌத்த தூபி பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகணத்தின், தட்சசீலத்தில் உள்ளது.[2] 1980ல் இயுனெசுகோ நிறுவனம், தருமராசிக தூபியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.[3] இப்பகுதி இசுலாமியமயமான போது, தருமராசிக தூபி மேலும் சிதைக்கப்பட்டது.

சான் மார்சல் எனும் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர், 1913ல் சிதைந்திருந்த தருமராசிக தூபியை அகழ்வாய்வு செய்து பல தொல்பொருட்களை கண்டெடுத்தார்.

தருமராசிக தூபியின் விகாரையில் சிதைந்த பௌத்த நினைவுச் சின்னகள்
முக்கியத் தூபியைச் சுற்றியுள்ள சிதைந்த விகாரைகள்

தூபியின் நினைவுச் சின்னங்கள்

[தொகு]

புத்தரின் எலும்புகள்

[தொகு]

தர்மராஜிக தூபியின் தொல்லியல் களத்தில் கிடைத்த புகழ் பெற்ற புத்தரின் இரண்டு எலும்புத் துண்டுகள்[4] மற்றும் அபூர்வமான பௌத்த நினைவுச் சின்னங்களை பௌத்தர்களின் வழிபாட்டிற்காக ஒரு மாத காலத்திற்கு, 2016ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.[5]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Higham, Charles (2014). Encyclopedia of Ancient Asian Civilizations. Infobase Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0996-1.
  2. "Dharmarajika: The Great Stupa of Taxila". GoUNESCO. UNESCO. 1 September 2016. Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Taxila". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  4. M. S. Moray (1985). History of Buddhism in Gujarāt. Saraswati Pustak Bhandar. p. 46.
  5. "Sacred Buddha relics returns to Pakistan after month long exposition in Sri Lanka". Colombo Page. 27 June 2016 இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200126165715/http://www.colombopage.com/archive_16B/Jun27_1467037360CH.php. பார்த்த நாள்: 23 June 2017. 

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மராஜிக_தூபி&oldid=3930713" இலிருந்து மீள்விக்கப்பட்டது