செயிண்ட்-பார்த்தலெமி
செயிண்ட் பார்த்தலெமி தொகுப்பு Collectivité de Saint-Barthélemy | |
---|---|
நாட்டுப்பண்: லா மார்செல்லெய் | |
நிலை | கடல்கடந்த தொகுப்பு |
தலைநகரம் | குசுதாவியா |
பெரிய நகர் | குசுதாவியா |
ஆட்சி மொழி(கள்) | பிரான்சியம் |
உள்ளக மொழிகள் |
|
இனக் குழுகள் ([1]) |
|
மக்கள் | பார்த்தலெமியர்கள் |
இறைமையுள்ள நாடு | பிரான்சு |
அரசாங்கம் | சார்பு மண்டலம் |
• பிரான்சியக் குடியரசுத் தலைவர் | பிரான்சுவா ஆலந்து |
• பிரிபெக்ட் | பிலிப் சோப்பின் |
• ஆட்புல மன்றத் தலைவர் | புருனோ மாகராசு |
• துணை | தானியல் கிப்சு |
• செனட்டர் | மிசெல் மாகராசு |
கடல்கடந்த தொகுப்பு | |
• பிரான்சிய குடியேற்றம் | 1648 |
• சுவீடனுக்கு மாற்றளிக்கப்பட்டது | 1 சூலை 1784 |
• பிரான்சிற்கு மீளவும் விற்கப்பட்டது | 16 மார்ச் 1878 |
• கடல்கடந்த தொகுப்பு | 22 பெப்ரவரி 2007 |
பரப்பு | |
• மொத்தம் | 25[2] km2 (9.7 sq mi) (not ranked) |
• நீர் (%) | negligible |
மக்கள் தொகை | |
• சன. 2014 மதிப்பிடு | 35,906[3] |
• அடர்த்தி | 361/km2 (935.0/sq mi) (26வது) |
நாணயம் | ஐரோ (€) (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (AST) |
அழைப்புக்குறி | +590c |
இணையக் குறி | |
|
செயிண்ட் பார்த்தலெமி (Saint-Barthélemy), அலுவல்முறையாக செயிண்ட் பார்த்தலெமி ஆட்புலத் தொகுப்பு (பிரெஞ்சு மொழி: Collectivité territoriale de Saint-Barthélemy), பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும்.[4] பெரும்பாலும் செயிண்ட்-பார்த் எனச் சுருக்கப்படும் இத்தீவானது உள்ளூர் மக்களால் ஊனலோ என்றழைக்கப்பெறுகின்றது.[5] செயிண்ட். மார்ட்டினிலிருந்து தென்கிழக்கே 35 கிலோமீட்டர்கள் (22 mi) தொலைவிலும் செயிண்ட். கிட்சிற்கு வடக்கிலும் உள்ளது. இத்தீவிற்கு மேற்கே 240 கிலோமீட்டர்கள் (150 mi) தொலைவில் புவேர்ட்டோ ரிக்கோ அமைந்துள்ளது.[6]
செயிண்ட் பார்த்தலெமி பல்லாண்டுகளாக குவாதலூப்பேயின் அங்கமாக இருந்து வந்தது. 2003இல் குவாதலூப்பேயிலிருந்து பிரிந்து தனிநாடாக விடுதலை பெற வாக்களித்தது. தற்போது பிரான்சின் கடல் கடந்த தொகுப்பாக விளங்குகின்றது. வளிமறைவுத் தீவுகளில் உள்ள பிரான்சின் நான்கு கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாக உள்ளது; மற்றவை செயிண்ட் மார்ட்டின், குவாதலூப்பே (200 கிலோமீட்டர்கள் (120 mi) தென்கிழக்கில்), மற்றும் மர்தினிக்கு.
எரிமலைகளாலான தீவைச் சுற்றிலும் ஆழமில்லாத பவழப்பாறைகள் உள்ளன. செயிண்ட் பார்த்தலெமியின் நிலப்பரப்பு 25 சதுர கிலோமீட்டர்கள் (9.7 sq mi) ஆகவும்[2] மக்கள்தொகை 9,035 (சன. 2011 மதிப்பீடு) ஆகவும் உள்ளது.[3] இதன் தலைநகரம் குஸ்தாவியாவில் தீவின் முதன்மை துறைமுகமும் உள்ளது. கரிபியக் கடல் தீவுகளிலேயே இது மட்டுமே சில காலம் சுவீடனின் குடியேற்றமாக நீண்டநாள் இருந்துள்ளது. நெப்போலியப் போர்களின் முடிவில் குவாதலூப்பே சுவீடிய ஆட்சியின் கீழ் குறைந்த காலம் இருந்துள்ளது. இத்தீவின் அரச சின்னத்தில் சுவீடனின் தேசியச் சின்னத்திலுள்ள மூன்று மகுடங்கள் இன்றும் உள்ளன. ஆனால் மொழி, உணவு, பண்பாட்டில், பிரான்சின் தாக்கம் மிகுந்துள்ளது.
இத்தீவு குளிர்காலத்தில் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக விளங்குகின்றது; குறிப்பாக பெருந்தனக்காரர்களும் புகழ்பெற்றவர்களும் கிறித்துமசு மற்றும் புத்தாண்டு காலங்களில் மனமகிழ்விற்காக இங்கு வருவது வழக்கமாகி வருகின்றது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Saint Barthelemy: People and Society". The World Factbook. Central Intelligence Agency. 13 September 2012. Archived from the original on 29 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
- ↑ 2.0 2.1 INSEE. "Actualités : 2008, An 1 de la collectivité de Saint-Barthélemy" (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2014-01-31.
- ↑ 3.0 3.1 INSEE, Government of France. "Populations légales 2011 pour les départements et les collectivités d'outre-mer" (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
{{cite web}}
: Check|first=
value (help) - ↑ "The World Fact Book". Government. CIA Fact Book. Archived from the original on 29 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 January 2011.
- ↑ R. P. Raymond BRETON. Dictionnaire caraïbe-françois, Auxerre, Chez Gilles Bouquet, 1665.
- ↑ "The World Fact Book". Geography. CIA Fact Book. Archived from the original on 29 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 January 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- அரசு
- (பிரெஞ்சு) Collectivity of Saint Barthélemy (official government website)
- Comité Territorial du Tourisme (tourism board website) (பிரெஞ்சு)
- வரலாற்று மற்றும் தாவரவியல் தகவல்
- Mémoire St Barth : Saint-Barthelemy's history (slave trade, slavery, abolitions)
- (பிரெஞ்சு) Histoire et aménagement linguistique à Saint-Barthélemy பரணிடப்பட்டது 2008-12-19 at the வந்தவழி இயந்திரம்
- Saint Barth Fauna & Flora
- பொது தகவல்
- Saint Barthelemy உலகத் தரவுநூலில் இருந்து
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Saint Barthélemy
- Discover the island of St Barthelemy in a full 3D Tour பரணிடப்பட்டது 2014-11-29 at the வந்தவழி இயந்திரம்