உள்ளடக்கத்துக்குச் செல்

சுபிரிங் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபிரிங் நடவடிக்கை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

ஜெர்மானிய ”கிங் டைகர்” ரக டாங்குகள்
நாள் ஜூலை 25–27, 1944
இடம் கான், பிரான்சு
ஜெர்மானிய வெற்றி
மேல்நிலை உத்தியளவில் நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 கனடா
 ஐக்கிய இராச்சியம்
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா கை சிமண்ட்ஸ் நாட்சி ஜெர்மனி யொசப் டைட்ரிக்
பலம்
2 காலாட்படை டிவிசன்
2 கவச டிவிசன்கள்
1 கவச பிரிகேட்
3 கவச டிவிசன்கள்
இழப்புகள்
450 மாண்டவர்
1,100 காயமடைந்தவர்
தெரியவில்லை

சுபிரிங் நடவடிக்கை (ஸ்பிரிங் நடவடிக்கை, Operation Spring) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கோப்ரா நடவடிக்கைக்குத் துணையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டிப் பகுதியில் சூன் 6, 1944 நிகழ்ந்தது. சுமார் இரு மாதங்கள் சண்டைக்குப் பின் பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற அமெரிக்கப் படைகள் கோப்ரா நடவடிக்கையை ஜூலை 25, 1944ல் தொடங்கின. இதிலிருந்து ஜெர்மானியர்களின் கவனத்தைத் திசை திருப்பும் வண்ணம் பிரிட்டானிய/கனடியப் படைகள் குட்வுட் நடவடிக்கை மற்றும் சுபிரிங் நடவடிக்கையை மேற்கொண்டன. சுபிரிங் நடவடிக்கையில், ஜூலை 25ம் தேதி கனடியப் படைகள் கான் நகரருகே இருந்த வெர்ரியர் முகடைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றன. ஆனால் ஜெர்மானியர்களின் கடுமையான எதிர்த்தாக்குதல் இம்முயற்சியை முறியடித்துவிட்டது. ஆனால் ஜெர்மானியர்களின் கவனம் கான் நகரைச் சுற்றிய பகுதிகளில் இருந்ததால், அமெரிக்கப் படைகள் தங்கள் கட்டுப்பாடிலிருந்த பகுதியிலிருந்து எளிதில் ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து முன்னேறி விட்டனர்.