சலநாட
Appearance
சலநாட கருநாடக இசையின் 36 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியிலும் 36 ஆவது இராகத்தின் பெயர் சலநாட.[1][2][3]
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி3 க3 ம1 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம1 க3 ரி3 ஸ |
- ருது என்றழைக்கப்படும் 6 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 ஆவது இராகம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் நேர் பிரதி மத்திம மேளம் ரசிகப்பிரியா (72).
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் காந்தார முறையே கிரக பேதத்தின் வழியாக சுபபந்துவராளி (45) மேளகர்த்தா இராகம் கொடுக்கும்.
உருப்படிகள்
[தொகு]வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | நாகாத்மஜ | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | ஆதி |
வர்ணம் | ராஜாதிராஜா | பாலுஸ்வாமி தீட்ஷிதர் | ஆதி |
ஜன்ய இராகங்கள்
[தொகு]சலநாட இராகத்தின் ஜன்ய இராகங்கள் இவை.
ஒரு சிறப்பு என்னவென்றால் நாட இராகமும், கம்பீரநாட இராகமும் சலநாடயைவிட பிரபலம்.