உள்ளடக்கத்துக்குச் செல்

குரோமியம் ஐம்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம் ஐம்புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(V) புளோரைடு
வேறு பெயர்கள்
குரோமியம் புளோரைடு, குரோமியம்(V) புளோரைடு, ஐம்புளோரோகுரோமியம், பென்டாபுளோரிடோகுரோமியம்
இனங்காட்டிகள்
14884-42-5
ChemSpider 4574207
InChI
  • InChI=1S/Cr.5FH/h;5*1H/q+5;;;;;/p-5
    Key: OMKYWARVLGERCK-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460742
  • F[Cr](F)(F)(F)F
பண்புகள்
CrF5
வாய்ப்பாட்டு எடை 291.71 கி/மோல்
தோற்றம் சிவப்பு படிகங்கள்[1]
அடர்த்தி 2.89 கி/செ.மீ3[1]
உருகுநிலை 34 °C (93 °F; 307 K)
கொதிநிலை 117 °C (243 °F; 390 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம் ஐம்புளோரைடு (Chromium pentafluoride) என்பது CrF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும்[2]. சிவப்பு நிறத் திண்மமான இச்சேர்மம் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் 30 ° செ வெப்பநிலையில் உருகும் தன்மையும் கொண்டிருக்கிறது. எளிதாக நீராற்பகுப்பு அடைந்து குரோமியம்(III) மற்றும் குரோமியம்(VI) அயனிகளைத் தருகிறது[3] . வனேடியம் ஐம்புளோரைடின் படிக அமைப்பையே குரோமியம் ஐம்புளோரைடும் கொண்டிருக்கிறது[4]. பரவலாகக் கிடைக்கக்கூடிய குரோமியம் புளோரைடு, குரோமியம் ஐம்புளோரைடு ஆகும். கருத்தியாலான குரோமியம் அறுபுளோரைடு இதுவரை தயாரிக்கப்படவில்லை. [5]

பொட்டாசியம் மற்றும் குரோமிக் குளோரைடுகள் மீது புளோரின் வாயுவைச் செலுத்தும் போது விளைபொருளாக குரோமியம் ஐம்புளோரைடு உண்டாகிறது.[6]

அமைப்பைப் பொறுத்தவரை இச்சேர்மம் ஒருபரிமான ஒருங்கிணைப்பு பலபடியாக இருக்கிறது. ஒவ்வொரு Cr(V) மையங்களும் எண்முக மூலக்கூற்று வடிவியலைப் பெற்றுள்ளன.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-43981462-8. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
  2. Jacques Guertin, James A. Jacobs, Cynthia P. Avakian, ed. (2004). Chromium(VI) Handbook. CRC Press. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780203487969.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  3. Amit Aora (2005). Text Book Of Inorganic Chemistry. Discovery Publishing House. p. 649.
  4. A. G. Sharpe (1983). Advances in Inorganic Chemistry. Vol. 27. Academic Press. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080578767.
  5. Riedel, Sebastian; Kaupp, Martin (2009). "The highest oxidation states of the transition metal elements". Coordination Chemistry Reviews 253 (5–6): 606–624. doi:10.1016/j.ccr.2008.07.014. http://144.206.159.178/ft/243/588116/14862785.pdf. 
  6. A. G. Sharpe (December 2012). J.H. Simons (ed.). Fluorine Chemistry. Vol. 2. Elsevier. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323145435.
  7. "The structures of CrF5 and CrF5*SbF5" Shorafa, H.; Seppelt, K. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 2009, vol. 635, p112-p114.

இவற்றையும் காண்க

[தொகு]