உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை
United Nations Security Council مجلس أمن الأمم المتحدة (அரபு மொழி)
联合国安全理事会 (சீனம்)
Conseil de sécurité des Nations unies (பிரெஞ்சு)
Совет Безопасности Организации Объединённых Наций (உருசிய மொழியில்)
Consejo de Seguridad de
las Naciones Unidas (எசுப்பானியம்)
நிறுவப்பட்டது1946
வகைமுதன்மை அமைப்பு
சட்டப்படி நிலைசெயலில்
இணையதளம்http://un.org/sc/

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை (United Nations Security Council, UNSC) ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும். ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது.

நிரந்தர உறுப்பினர்கள்

[தொகு]
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்.

ஐ.நா பாதுகாப்பு அவையில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்; வெட்டுரிமை உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் (சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா). நிரந்தர ஐந்து, பெரிய ஐந்து (P5) எனவும் இவை அழைக்கப்படுகின்றன. இந்த உறுப்பினர்கள் இரண்டாம் உலகப் போரில் வென்ற நாடுகளாக கருதப்படுகின்றனர்.[1] இதில் பிரான்சு ஐரோப்பாவில் தோல்வியடைந்து ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருந்து கனடா, கட்டற்ற பிரான்சியப் படைகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டது. இந்த நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு வரைவிற்கும் பன்னாட்டளவில் எத்தகைய ஆதரவிருந்தாலும் "தன்னிலையான" அவைத் தீர்மான வரைவை நிறைவேற்ற இயலும்.

நிரந்தரமில்லாத உறுப்பினர்கள்

[தொகு]

ஐ.நா பாதுகாப்பு அவை நிரந்தரமில்லாது இரண்டாண்டுகள் செயலாற்றக்கூடிய தேர்ந்தெடுக்கப்படும் பத்து உறுப்பினர்களையும் கொண்டது.

அமைப்பு

[தொகு]

இந்த அமைப்பு ஐ.நா பட்டயத்தின் ஐந்தாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள், எந்நேரமும் கூடுவதற்கு வசதியாக, நியூ யார்க் நகரிலேயே தங்கியிருக்க வேண்டும். இதற்கு முந்தைய உலக நாடுகள் சங்கத்தின் முதன்மைக் குறைபாடே அதனால் ஓர் நெருக்கடியின்போது உடனடியாக செயல்படவில்லை என்பதால் இந்தத் தேவையை ஐ.யா. பட்டயம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு அவையின் முதல் அமர்வு சனவரி 17, 1946ஆம் ஆண்டில் இலண்டனின் திருச்சபை மாளிகையில் கூடியது. அது முதல் தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் இந்த அவை பல இடங்களுக்கு பயணித்து பாரிசு, அடிஸ் அபாபா போன்ற பல நகரங்களிலும் தனது நிரந்தர இடமான நியூயார்க் நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திலும் தனது சந்திப்புகளை நடத்துகிறது.

விமர்சனம்

[தொகு]

ஐ.நா. மனித உரிமை ஆனையர் நவநீதம் பிள்ளை 2014ஆம் ஆண்டு பாதுகாப்பு கூட்டத்தில் பேசும்போது ஆப்கானித்தான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ, ஈராக் [2], லிபியா, மாலி, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், உக்ரைன், காஸா[3]பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் நிலவரங்களால் பல பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்கள் தற்செயலாக நடந்தது கிடையாது. இவற்றை ஐ.நா பாதுகாப்பு அவைதடுக்க தவறியதால் திறனற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. [4]

மேற்கோள்

[தொகு]
  1. The UN Security Council, archived from the original on 2012-06-20, பார்க்கப்பட்ட நாள் 2012-05-15
  2. மசூதியில் 70பேர் சுட்டுக்கொலை
  3. காஸா போரில் 469 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெஃப் தகவல்
  4. பாதுகாப்பு கவுன்சில் : நவி பிள்ளை கடும் குற்றச்சாட்டு

வெளியிணைப்புகள்

[தொகு]