உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய எலி நண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய எலி நண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மெல்லிய ஓடுடையவை
வரிசை:
பத்துக்காலி
குடும்பம்:
எலி நண்டு
பேரினம்:
Emerita
இனம்:
E. asiastica
இருசொற் பெயரீடு
Emerita asiastica
Stimpson, 1857

இந்திய எலி நண்டு (Emerita asiastica) என்பது எலி நண்டு பேரினத்தைச் சேர்ந்த நண்டு இனம் ஆகும். இவை கடற்கரையோரம் உள்ள மணலில் வளை தோண்டி மறைந்து வாழ்கின்றன. இதற்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டுக் கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.

கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே எலி நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த எலி நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

இவற்றில் ஆண், பெண் என்று உண்டு. சில ஆண் எலி நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் ஆகும். வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும்.[1] அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக எலி நண்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_எலி_நண்டு&oldid=2947892" இலிருந்து மீள்விக்கப்பட்டது