உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பட்ரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டரண்டப் பறவை
புதைப்படிவ காலம்:Oligocene–recent
Oligocene–recent
அல்பட்ரோஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
Neoaves
வரிசை:
Procellariiformes
குடும்பம்:
Diomedeidae

Genera

Diomedea
Thalassarche
Phoebastria
Phoebetria

Global range (In blue)

அல்பட்ரோஸ் அல்லது அண்டரண்டப் பறவை (ஆல்பட்ரோஸ், Albatross), தென்முனைப் பெருங்கடலிலும் (அண்ட்டார்டிக் பெருங்கடலிலும்) வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை. சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் டியோமெடைடிடே (Diomedeidae) என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.

ஆல்பட்ரோஸ் பறவைகள் வாழும் பகுதிகள் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன

உடலமைப்பு

[தொகு]

அல்பட்ரொஸ் என்பது, அல்பட்ரொஸ் குடும்பத்தைச் சார்ந்தப் பெரிய கடற்பறவைகளுக்கு வழங்கப்படும் பொதுப் பெயர் ஆகும். இவற்றின் பாதங்கள் வாத்தின் பாதங்கள் போல் தோற்றமளித்தாலும் அவை வலிமையானவை. இவற்றின் சிறகுகள் ஒல்லியாகவும், நீளமாகவும் இருக்கும். இதுவரை பதிமூன்று வகையான பறவைகள் அல்பட்ரொஸ் குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இது பசிபிக் பெருங்கடல் மட்டுமே இருக்கும்

உணவு

[தொகு]

இவை நீரில் வாழும் கணவாய் (squid), மீன், கிரில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. கடலில் வாழும் சிறிய மிருகங்களையும், ஹட்டில் மீன் போன்ற மீன்களையும் கப்பல்களிலிருந்து கொட்டப்படும் உணவுப் பொருட்களையும் உண்ணும். இவை தனது இனபெருக்கக் காலத்தில் தனது கூடுகளை கடற்கரையில் அமைத்துக் கொள்ளும்.

வாழ்க்கை

[தொகு]
அல்பட்ரோஸ்

ஆல்பட்ரோஸ் பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக (தொழுதியாக) வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் இணையாக வாணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.

அல்பட்ரொஸ்கள் கடலின் மீது அங்கும் இங்குமாக பறந்து கொண்டியிருக்கும், தண்ணீரில் மிதந்து கொண்டே உறங்கவும் செய்யும். இவை மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. இராணுவ முகாம்களுக்கு அருகில் கூடுகட்டினால், வானூர்திகளுக்கு இடையே பறந்து செல்லும். இவை கப்பல்களை பின்தொடர்ந்து, கப்பல் மாலுமிகளிடையே அல்பட்ரொஸ்களை கொன்றால் கெட்டவை நேரிடும் என்றோர் மூடநம்பிக்கை உள்ளது.

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brands, Sheila (Aug 14 2008). "Systema Naturae 2000 / Classification – Family Diomedeidae -". Project: The Taxonomicon. Archived from the original on 2 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 Feb 2009. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பட்ரோசு&oldid=3927287" இலிருந்து மீள்விக்கப்பட்டது