அசோக வனம்
Appearance
இராமயண காவியத்தின்படி, இராமரின் மனைவியான சீதையை இராவணன் கவர்ந்து சென்று, தற்கால இலங்கையில் அசோக மரங்கள் நிறைந்த தோட்டத்தில் சிறை வைத்த இடமே அசோக வனம் எனக் கருதப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் இலங்கையின் மலையகத்தில், நுவரெலியா மாவட்டத்தின் "சீதா எலிய" எனுமிடத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1][2] தற்போது இவ்விடத்தில் சீதை அம்மன் கோவில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WWW Virtual Library: Sita Eliya / Seetha Eliya / Sitha Eliya".
- ↑ "Amazing Sri Lanka : Nature : Seetha Amman Temple - Seetha Eliya". Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.