நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டம் | |
நுவரெலியா மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | மத்திய மாகாணம் |
தலைநகரம் | நுவரெலியா |
மக்கள்தொகை(2001) | 700083 |
பரப்பளவு (நீர் %) | 1741 (2%) |
மக்களடர்த்தி | 410 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 1 |
நகரசபைகள் | 2 |
பிரதேச சபைகள் | 5 |
பாராளுமன்ற தொகுதிகள் | 4 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
5 |
வார்டுகள் | 24 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
நுவரெலியா மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. வடக்கே மாத்தளை மாவட்டமும், கிழக்கே பதுளை மாவட்டமும் தெற்கே இரத்தினபுரி மாவட்டமும் மேற்கே கேகாலை மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. நுவரெலியா நகரம் மாவட்டத்தின் தலைநகரமும் அதில் அமைந்துள்ள பெரிய நகரமுமாகும். இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துக்கு பிரசித்தமான பகுதிகளில் ஒன்றாகும்.
புவியியல்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து 1500 அடி தொடக்கம் 8000 வரை உயரத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்திலேயே இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகாலையும் அமைந்துள்ளது. சிவனொளிபாத மலை அமைந்துள்ள சமனல மலைத்தொடரின் பெரும்பகுதியும் நுவரெலியா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. நுவரெலியா இலங்கையில் மொத்தப் பரப்பளவில் 2.7% இடத்தை அடைக்கிறது. மாவட்டத்தில் காணப்படும் முக்கிய மலைகளின் உயரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.[1]
மலை | உயரம் (அடி) | உயரம் (மீட்டர்) |
---|---|---|
பீதுருதாலகாலை | 8281 | 2524 |
கிரிகல்பொத்தை | 7857 | 2395 |
தொடுலபலை | 7741 | 2359 |
சமனல | 7360 | 2243 |
கிகிலியாமன | 7349 | 2240 |
கிரேட் செசுட்டன் | 7258 | 2212 |
அக்கலை | 7127 | 2172 |
கொனிகல் | 7114 | 2168 |
வன் டிரீ இள் | 6890 | 2100 |
அவுமுள்ளே | 6757 | 2060 |
ரன்கந்தை | 6088 | 1856 |
கொட்டகித்துல | 6044 | 1842 |
கொட்டபொல | 5757 | 1755 |
தொடங்கொடை | 4509 | 1374 |
வரலாறு
[தொகு]19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நுவரெலியாவை சிறிய இங்கிலாந்து என அழைத்தனர். இவர்களின் ஆட்சியின் போது நுவரெலியா உல்லாசப் பிரயாண, வர்த்தக மையமாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, இராமாயணத்துடனும் இப்பகுதி தொடர்புடையது என்பதும், குவேனி துரத்தப்பட்டப் பின்னர் தனது இரு குழந்தைகளுடன் இங்கே வசித்தார் என்பது தொன்நம்பிக்கையாகும். துட்டகைமுனு தனது இளமைக்காலத்தில் கொத்மலையில் வசித்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது.
உள்ளூராட்சி
[தொகு]இம்மாவட்டம் நுவரெலியா-மஸ்கெலியா, கொத்மலை, அங்குரன்கெத்தை, வலப்பனை ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. நிர்வாக பிரிவுகளைக் கருதும் போது, நுவரெலியா, கொத்மலை, அங்குரன்கெதை, வலப்பனை, அம்பகமுவ ஆகிய ஐந்து வட்டாரச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவ்வட்டாரச் செயலளார் பிரிவுகள் மேலும் 491 ஊருழியர் பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.மாவட்டத்தின் நிர்வாக, உள்ளூராட்சி அமைப்பு கீழ் வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.[2]
வட்டச் செயலாளர் பிரிவு | பரப்பளவு (ச.கி.மீ.) | ஊரூழியர் பிரிவுகள் | உள்ளூராட்சி பிரிவுகள் | ||
---|---|---|---|---|---|
மாநகரசபை(கள்) | நகரசபை(கள்) | பிரதேச சபை(கள்) | |||
கொத்மலை | 219.7 | 96 | 1 | ||
அங்குரன்கெதை | 231.0 | 131 | 1 | ||
வலப்பனை | 303.6 | 125 | 1 | ||
அம்பகமுவா | 477.8 | 67 | 1 | 1 | |
நுவரெலியா | 488.4 | 72 | 1 | 1 | 1 |
மொத்தம் | 1720.5 | 491 | 1 | 2 | 5 |
உள்ளூராட்சியை கருத்திற் கொள்ளும் போது நுவரெலியா மாநகரசபையும் ஹட்டண்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துலை நகரசபை ஆகிய இரண்டு நகரசபைகளும் நுவரெலியா, கொத்மலை, அங்குரன்கெதை, வலப்பனை, அம்பகமுவ ஆகிய ஐந்து பிரதேச சபைகளும் காணப்படுகின்றன.
மக்களியல்
[தொகு]மாவட்ட மக்கள் தொகையில் 57.1% தமிழர்களாவர் (இலங்கைத் தமிழர் 6.5%, இந்தியத் தமிழர் 50.6%) இவர்களில் 93.1 சதவீதமான மக்கள் தேயிலைத் தோட்டங்களில் வசிக்கின்றனர். மாவட்ட தமிழர்களில் 77 சதவீதத்தினர் தேயிலை தோட்டங்கள் பெரும்பான்மையாக காணப்படும் நுவரெலியா, அம்பகமுவா பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்றனர். மாவட்டத்தில் 40.2 சதவீததினர் சிங்களவராவர். இவர்களில் 85 சதவீதத்தினர் கிராமத்தில் வசிக்கின்றனர்.[3]
நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்
[தொகு]நுவரெலியா மாவட்டத்தில் பல முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. அவை இங்கே பட்டியலிடப்படுகின்றன.
- அம்பகமுவா வட்டச் செயலாளர் பிரிவு
- நுவரெலியா வட்டச் செயலாளர் பிரிவு
- வலப்பனை வட்டச் செயலாளர் பிரிவு
- அங்குரன்கெத்தை வட்டச் செயலாளர் பிரிவு
- கொத்மலை வட்டச் செயலாளர் பிரிவு
படத்தொகுப்பு
[தொகு]-
நுவரெலியா நடுவத் தபாலகம்
-
நுவரெலியா மலைகளின் காட்சி
-
தேயிலைப் பெருந்தோட்டமொன்று
ஆதரங்கள்
[தொகு]
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |