உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ksmuthukrishnan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:20, 24 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை
Attorney General's Chambers
Jabatan Peguam Negara Malaysia
جابتن ڤڬوام نڬارا
மலேசிய மரபுச் சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு1946; 78 ஆண்டுகளுக்கு முன்னர் (1946)
வகை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்45, பெர்சியாரான் பெர்டானா, வளாகம் 4, பெர்டானா புத்ரா,
மத்திய அரசு நிர்வாக மையம்
புத்ராஜெயா  மலேசியா
பணியாட்கள்1,974 (2024)[1]
ஆண்டு நிதிRM 241,567,100 (2024 - 2025)[1]
அமைப்பு தலைமை
மூல அமைப்புமலேசியப் பிரதமர் துறை
வலைத்தளம்www.agc.gov.my

மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை அல்லது அட்டர்னி ஜெனரல் துறை (ஆங்கிலம்: Attorney General's Chambers; மலாய்: Jabatan Peguam Negara Malaysia; சீனம்: 总检察长办公室) என்பது மலேசிய தலைமை வழக்குரைஞர் தலைமையிலான அரசு நிறுவனம் ஆகும்.

மலேசிய அரசாங்கத்தின் சட்டம் தொடர்பான பொறுப்புகள்; குற்றவியல் வழக்குகளைக் கையாளுதல்; முன்வரைவு சட்டங்களைத் தயாரித்தல்; மற்றும் அரசாங்கம் தொடர்பான குடியியல் (சிவில்) வழக்குகளை நிர்வகித்தல்; போன்றவற்றுக்கு இந்தத் துறை பொறுப்பு வகிக்கிறது.

குறிக்கோள்

[தொகு]

இந்தத் துறையின் முதன்மைக் குறிக்கோள் என்பது அனைத்துக் கட்டங்களிலும் தரமான சேவைகளை வழங்குதல்; தரமான சட்டங்களை வழங்குதல்; மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி திறமையாகவும், நியாயமாகவும், சமமாகவும் செயல்படுவதே ஆகும்.

செயல்பாடுகள்

[தொகு]
  1. மத்திய அரசு; மற்றும் மாநில அரசுகளுக்கு பன்னாட்டுச் சட்டத்துறை, சரியா (Syariah) சட்டத் துறைகளில் அறிவுரைச் சேவைகளை வழங்குதல்
  2. சட்டச் சிக்கல்கள் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு சட்ட நிலையிலான சான்றுகளை வழங்குதல்
  3. மத்திய அரசிற்கான அனைத்துச் சட்டங்களையும் உருவாக்குதல்.
  4. குற்றத் தண்டனைக்குரிய (Criminal) வழக்குகளில் வழிமுறைகளை வழங்குதல்
  5. அரசாங்கத்தின் அனைத்து குடியியல் (Civil) வழக்குகளில் பங்கேற்பது
  6. சட்டத் திருத்தங்கள் மற்றும் சட்ட மறுபதிப்புகளை நிர்வகித்தல்; மற்றும் சட்ட சீர்திருத்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Attorney General's Chambers 2024" (PDF). Attorney General's Chambers. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]