முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 163: | வரிசை 163: | ||
* [[கந்தபுராணம்]] |
* [[கந்தபுராணம்]] |
||
* [[முருக வழிபாடு]] |
* [[முருக வழிபாடு]] |
||
* |
|||
[https://ta.m.wikisource.org/wiki/தெய்வப்புகழ் தெய்வப்புகழ்] |
[https://ta.m.wikisource.org/wiki/தெய்வப்புகழ் தெய்வப்புகழ்] |
||
04:06, 18 திசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
முருகன் | |
---|---|
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன் | |
அதிபதி | தமிழ், சைவ, அன்பு, போர் |
வேறு பெயர்கள் | சேயோன், அயிலவன், ஆறுமுகன், முருகன், குமரன் குகன், காங்கேயன், வேலூரவன், சரவணன், சேனாதிபதி, வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, கதிர்காமன், சுப்ரமணியன், மயில்வாகனன், வள்ளற்பெருமாள்,வேந்தன் |
தேவநாகரி | मुरुगन, कार्तिकेय,स्कंध |
தமிழ் எழுத்து முறை | முருகா, கார்த்திகேயா, கந்தா |
வகை | வினை தீர்ப்பவர் |
இடம் | பழனி, அறுபடைவீடுகள் |
மந்திரம் | ஓம் சரவணபவ |
ஆயுதம் | வேல் |
போர்கள் | சூரசம்ஹாரம் |
துணை | வள்ளி, தெய்வானை |
பெற்றோர்கள் | சிவன், பார்வதி |
சகோதரன்/சகோதரி | விநாயகர் |
வாகனம் | மயில் |
நூல்கள் | கந்த புராணம், திருப்புகழ் |
சமயம் | சைவம் |
விழாக்கள் | தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, அக்னி நட்சத்திரம், வைகாசி விசாகம், கந்த சஸ்தி, திருக் கார்த்திகை |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார்.[1] மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்து சமயத்துடன் இணைந்தது.
பெயர்க்காரணம்
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும்.
வேறு பெயர்கள்
- சேயோன் - சேய் என்றால் குழந்தை அல்லது மகன் என்று பொருளாகும் முருகன் குழந்தையாகக் காட்சி அளிப்பாதால் இந்தப் பெயர் காரணம்
- அயிலவன் - வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
- ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவர்.
- முருகன் - அழகுடையவன் அல்லது அனைத்து சக்திகளையும் பெற்ற முழுமுதற் கடவுள் என்பதன் சான்றாக இப்பெயர் அமைந்தது.
- குமரன் - குமர பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவர்.
- குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவர்.
- காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன் அல்லது கங்கையின் மகன் என்றும் பொருளாகும்
- வேலூரவன் - வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன்முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் எனப் பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம்தான் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர். வேலூரைச் சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் - வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
- சரவணன் - சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவர்.
- சேனாதிபதி - சேனைகளின் தலைவன் அல்லது (சேனை நாயகன்)
- வேலன் - வேலினை ஏந்தியவர்.
- சுவாமிநாதன் - குருவாக இருந்து தந்தைக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தவர்.
- கந்தன் - சிவபெருமானின் நெற்றிகண்ணில் இருந்து வெளிபட்ட தீப்பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தத்தில் பட்டு முருகன் குழந்தையாகத் தோன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தன் என்று பெயர்
- கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கப்பட்டவர்.
- சண்முகன் - ஆறுமுகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆக்கியதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
- தண்டாயுதபாணி - தண்டாயுதத்தை ஏந்தியவர் அல்லது (பண்டார நாயகர்)
- தஞ்சபாணி அல்லது தண்டபாணி - முருகபெருமான் ஞானப்பழத்திற்கு விரும்பி ஏமார்ந்து அந்த வருத்தத்தினால் சினங்கொண்டு ஆண்டிப் பண்டாரமாகத் தமிழ்நாட்டிலே தமிழ்க்கடவுளாகத் தஞ்சமடைந்ததால் தஞ்சபாணி என்ற பெயரே தண்டபாணியாக மாறியது.
- கதிர்காமன் - வள்ளியை வேடுவர் குலத்தில் இருந்து காதல் திருமணம் செய்து கொள்ளும்போது அழகிய காமதேவனாகவும் முருகன் பரமசிவன் நெற்றிகண்ணில் இருந்து தீக்கதிராகப் பிறந்தவர் அதனால் கதிரும் காமனும் சேர்ந்து கதிர்காமன் என்ற திருபெயரில் வள்ளியைக் கந்தர்வ திருமணம் செய்து கொள்வதால் இப்பெயர் ஆனது.இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் முருகபெருமான் இப்பெயரால் வணங்கப்படுகிறார்.
- முத்துவேலன் - எட்டுக்குடியில் தெய்வானை (அஞ்சுகவல்லி) வள்ளி (கோமளவள்ளி) உடனுறைய எட்டுக்குடி முத்துவேலர் சுவாமி எட்டுத் திசையும் காப்பார் என்பதைக் குறிக்கின்றது.
- வடிவேலன் - வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருபெயரால் அழைப்பார்கள்.
- சுப்ரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவர். அல்லது இனியவன் என்றும் பொருளாகும்.
- மயில்வாகனன் - மயிலைத் தனது வாகனமாகக் கொண்டவர்.
- ஆறுபடை வீடுடையோன் - முருகனின் சாதனை புரிந்த இடங்களைக் கோவிலாக மருவி அதை ஆறுபடையப்பன் என்ற பெயரும் உள்ளது.
- வள்ளற்பெருமாள் - வள்ளியை மணந்ததாலும் அல்லது தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளைக் கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர் காரணம்
- சோமாஸ்கந்தன் - சோமன் என்றால் நிலா என்றும் அல்லது (சிவபெருமாள்) மதுரையம்பதி சோமசுந்தர கடவுளின் மகன் என்பதாகும்
- முத்தையன் - முத்துக்குமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்.
- சேந்தன் - தன்னை வணங்கும் பக்தர்களை இன வேறுபாடின்றி ஒன்றிணைந்து சேர்த்து வைப்பதால் சேந்தன் எனப் பெயர்.
- விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் எனப்பெயர் ஏற்பட்டது.
- சுரேஷன் - வட மாநிலங்களில் அழகுக்குச் டி சுரேசன் என்று பொருள் முருகன் அழகுக்கு அதிபதி என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது.
- செவ்வேல் - சேவல்வேல் என்பதை மருவிக் காலப்போக்கில் செவ்வேல் என மாறியது.
- கடம்பன் - சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாகச் சேர்த்துக் கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
- சிவகுமரன் - சிவபெருமாளின் திருமகன் அல்லது சிவனின் குமரன் என்பதேயாகும்.
- வேலாயுதன் - முருகன் தனது கையில் இருக்கும் வேலையே ஆயுதமாகக் கொண்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.
- ஆண்டியப்பன் - ஞானப்பழம் வேண்டியும் கிடைக்காமல் ஏமார்ந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.
- கந்தசாமி - தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தோன்றிய கடவுள் என்பதால் கந்தக்கடவுள் அல்லது கந்தசாமி எனப் பெயர் ஏற்பட்டது.
- செந்தில்நாதன் - சிந்தனைச்சிற்பி, சிந்தனைநாதன் என்னும் பெயர்களே மருவி, செந்தில்நாதனாக மாறியது அதாவது முருகன் தனது உயர் சிந்தனையால் சூரபத்மனை அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது
- வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்
- விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
- அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
- கங்கை தன் கரங்களால் சிவபெருமாளின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிபட்ட தீப்பிழம்பின் கருவில் தோன்றிய குழந்தை முருகனை ஏந்தியதால் காங்கேயன்.
- சரவண பொய்கையில் பிறந்ததால் சரவணபவன்/சரவணமூர்த்தி.
- கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
- தாமரை மலரின் கந்தகத்தில் தொன்றியதால் கந்தன்
- ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன்
- ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தி இணைத்து ஒருவராக மாற்றியதால் சண்முகம் / திருமுகம்
இவ்வாறு தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கும் பின்பு ஓர் அர்த்தம் ஒளிந்துள்ளது.
முருக புராணம்
பிறப்பு
பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனைத் தகனம் செய்தது. பிறகு அந்தத் தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இஃது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
ஞானப்பழம்
ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.[2]
பன்னிருகரங்களின் பணிகள்
முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச்சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.[3]
தெய்வானையுடன் திருமணம்
முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
வழிபாட்டு முறை
அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.[4]
விழாக்கள்
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா ஆகும்
நூல்கள்
கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.
மேலும் சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.
முருகன் குறித்த பழமொழிகள்
- வேலை வணங்குவதே வேலை.
- சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
- வயலூர் இருக்க அயலூர் தேவையா?
- காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
- அப்பனைப்பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
- முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
- சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
- கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
- கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
- பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
- சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
- செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
- திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
- வேலனுக்கு ஆனை சாட்சி.
- வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
- செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
- கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
- கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”
முருகன் ஆலய வழிபாடுகள்
தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
- காவடி எடுத்தல்
- அலகு குத்துதல்
- பால்குடம் எடுத்தல்
- முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்)
- பாத யாத்திரை
முருகனின் அடியவர்கள்
கோவில்கள்
முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் எனத் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவில்கள் பல அமைந்துள்ளன.
அறுபடை வீடுகள்
- திருப்பரங்குன்றம் - சூரபத்மனைப் போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
- திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று, வெற்றி வாகையைச் சூடிய திருத்தலமிது.
- பழநி - மாங்கனிக்காகத் தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
- சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி, தகப்பன்சுவாமியாகக் காட்சிதரும் திருத்தலமிது.
- திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
- பழமுதிர்சோலை - ஔவைக்குப் பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.
மலேசியா
மலேசியா நாட்டில் பத்துக் குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.
தமிழ்
தமிழ்மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் குறிப்பிடப்படுகின்றார். "முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்" என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.[5]
ஒப்பிட்டு உணர்க
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
- ↑ https://www.quora.com/Who-is-really-the-eldest-son-of-Lord-Shiva-Subramanya-or-Ganesha
- ↑ http://www.tnguru.com/2016/01/blog-post_47.html
- ↑ பன்னிருகரங்களின் பணி - சக்தி விகடன் ஏப்ரல் 14 2012
- ↑ http://murugan.org/tamil/shanmugampillai.htm சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு
- ↑ கலைமகள்; டிசம்பர் 2014; திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும்; பக்கம் 30-32
வெளி இணைப்புகள்
- முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?-தகவல்கள்
- நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை பரணிடப்பட்டது 2008-05-02 at the வந்தவழி இயந்திரம்
- முருகனின் அறுபடை வீடுகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?-தகவல்கள்
- கீற்று இதழில் மாமல்லை அருகில் சங்க கால முருகன் கோவில் கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை பரணிடப்பட்டது 2007-01-05 at the வந்தவழி இயந்திரம்
- கந்தபுராணம் : முருகன் உதித்தனன் உலகம் உய்ய
- கந்த சஷ்டி விரதம்
- http://www.tamilvu.org/library/l5B10/html/l5B10m02.htm
- இந்து தெய்வம் முருகப்பெருமான் (Hindu God Lord Muruga)
- முருகன் பெயர்கள் சிலவற்றுக்கான காரணம்