விஷ்ணு புராணம்
Appearance
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
விஷ்ணு புராணம் (தேவநாகரி:, விஷ்ணு புராணா) என்பது பதினெண் புராணங்களில் மூன்றாவது புராணமாகும். இது இருபத்து மூன்றாயிரம் (23,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி கூறியவை விஷ்ணு புராணமாக தொகுக்கப்பட்டுள்ளது. இப்புராணத்தில், விஷ்ணு புராண வாரலாறு, பிரபஞ்சத்தின் படைப்பு, காலப் பிரமாணம், வர்ணாசிரமங்கள், பல விதமான உலகங்களின் படைப்புகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது. உலகம் திருமால் என்கிற விஷ்ணுவினால் உருவாக்கப்பட்டது, அவரின் சொரூபமாகவே காட்சியளிக்கிறது, அவரின் எண்ணப்படியே இயங்குகிறது என்பதை விஷ்ணு புராணம் விளக்குகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம், வராக அவதாரம், தேவ மனித படைப்புகள், வருணாசிரமம் போன்ற பலவற்றை விஷ்ணு புராணம் விளக்குகிறது.[1]
மேற்கோள்கள்
தொடர்புடையவை