உள்ளடக்கத்துக்குச் செல்

பதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பதி(பெ)

  1. ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி)
  2. தலைவன்
  3. அரசன்
  4. கணவன்
  5. இடம்
  6. இறைவன்

(வி)

  1. ஊன்று, அழுந்து, படியெடு, உள்வாங்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. head, husband
  2. place, settlement

(v)

  1. impress, record, register

தமிழ் இலக்கிய மேற்கோள்கள்

[தொகு]
  1. புறநானூறு: பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை
  2. பொருநராற்றுப்படை: செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
  3. பெரும்பாணாற்றுப்படை: மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
  4. பதினெண் கீழ்க்கணக்கு: பதி பாழ் அக வேறு புலம் படர்ந்து
  5. பரிபாடல்: உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு
  6. பதிற்றுப்பத்து: பல் ஆயமொடு பதி பழகி
  7. நற்றிணை: புள்ளு பதி சேரின் உம் புணர்ந்தோர் காணினும்
  8. மலைபடுகடாம்:செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
  9. குறுந்தொகை:உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி
  10. குறிஞ்சிப் பாட்டு:விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர
  11. கலிங்கத்துப்பரணி:பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிது உம் ஒரு
  12. அகநானூறு:தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
  13. மதுரைக் காஞ்சி: கொழும் பதிய குடி தேம்பி
  14. ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு? மயளமமோமமோ (கம்பராமாயணம்) - உன் ஊர் எது? பேர் எது? உறவினர் யாவர்?


( மொழிகள் )

சான்றுகள் ---பதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதி&oldid=1934320" இலிருந்து மீள்விக்கப்பட்டது