1,2-புரோப்பேன்யிருதயோல்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-1,2-இருதயோல்[1] | |
வேறு பெயர்கள்
1,2-இருமெர்காப்டோபுரோப்பேன்
| |
இனங்காட்டிகள் | |
814-67-5 | |
ChemSpider | 55160 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61217 |
| |
UNII | GS64223D79 |
பண்புகள் | |
C3H8S2 | |
வாய்ப்பாட்டு எடை | 108.22 g·mol−1 |
கொதிநிலை | 152 °C (306 °F; 425 K) |
கரையாது | |
கரிமக் கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கரையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,2-புரோப்பேன்யிருதயோல் (1,2-Propanedithiol) என்பது C3H8S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். HSCH2CH(SH)CH3 என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் இச்சேர்மம் 1,2-டைமெர்காப்டோபுரோப்பேன் என்றும் 1,2-புரோப்பேன் டைதயோல் என்றும் அழைக்கப்படுகிறது. தயோல் சேர்மமான இது நிறமற்றதாகவும் தீவிர மணம் கொண்டும் ஒரு நீர்மமாகக் காணப்படுகிறது. நாற்தொகுதி மையம் கொண்ட ஓர் எளிய இருதயோல் சேர்மத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டுமாகும். 1,2-ஈத்தேன் டைதயோல், 2,3-இருமெர்காப்டோ-1-புரோப்பேன்சல்போனிக் அமிலம், புரோப்பேன்-1,3-டைதயோல் ஆகியவை 1,2-புரோப்பேன்யிருதயோலுடன் தொடர்பு கொண்ட சேர்மங்களாகும். எப்பிசல்பைடுடன் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 1,2-புரோப்பேன்யிருதயோல் உருவாகிறது.
இதன் ஒளிவிலகல் குறியீட்டு எண் = 1.531-1.541 ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 697. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
வெளி இணைப்புகள்
[தொகு]- "1,2-Propanedithiol". NIST. 2011. பார்க்கப்பட்ட நாள் 15 November 2011.