உள்ளடக்கத்துக்குச் செல்

வில்மா ருடோல்ஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிம்பிக் விருதாளர்
Center
1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ ஓட்டத்தில் வில்மா ருடோல்ப் வெற்றி.
பதக்க விபரம்
பெண்கள் தடகளம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1960 ரோம் 100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1960 ரோம் 200 மீ]]
தங்கப் பதக்கம் – முதலிடம் 1960 ரோம் 4x100 மீ ரிலே
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1956 மெல்பர்ன் 4x100 மீ ரிலே

வில்மா க்லோடியன் ருடோல்ஃப் (Wilma Glodean Rudolph, 23 சூன் 1940 - 12 நவம்பர் 1994) ஒரு அமெரிக்க தடகள வீராங்கனை ஆவார். 1960ஆம் ஆண்டின் உலகத்தின் வேகமான பெண்ணாக கருதப்பட்டார். இவர் 1956, 1960 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார். 1960 ரோம் நகரில் நிகழ்ந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓட்டப் பந்தயத்தில் 3 தங்கப் பதக்கத்தை வென்றார். இவரை கருப்பு முத்து என்றழைத்தனர்.

மேடிசன் ஸ்குவையர் கார்டனில் வில்மா க்லோடியன் ருடோல்ஃப், 1961
ரோஜர் மேரிஸ்(இடது) ஃப்ராடெர்னல் ஆர்டர் அஃப் ஈகில்ஸ் என்ற விருதினை வில்மா க்லோடியன் ருடோல்ஃபிற்கு(வலது) வழங்குகிறார்

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

வில்மா ருடோல்ஃப் ஒரு குறைமாதக் குழந்தையாக 22 பிள்ளைகளில் 20ஆவதாகப் பிறந்தார். இவர் தந்தை எட் ஒரு ரயில்வே போர்ட்டர். தாய் பிலான்ஷ். தம் 4ஆம் வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார். தன் 9ஆம் வயது வரை தனது இடது காலில் பிரேஸ் அணிந்திருந்தார். பின்பு ஆர்த்தோபீடியாட்ரிக் காலணியை இரு ஆன்டுகள் அணிந்திருந்தார். 12ஆம் வயதில் ஸ்கார்லெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நிறவெறி அமெரிக்காவில் அப்போது அதிகமால இருந்ததால் இவருக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை. அதன் பின் இவரது கறுப்பின சமூகத்தினர் கடைபிடிக்கும் சிகிச்சை முறைகளை கையாண்டார். கால்களில் வெந்நீர் ஊற்றி உடற்பிடிப்பு செய்யும் முறையை தொடர்ந்து செய்துவந்து பிற்காலத்தில் ஒலிப்பிக் தங்கம் வெல்லுமளவு குணமடைந்தார். இவரது அக்கா கூடைப்பந்து அணியில் வீராங்கனை ஆவார். வில்மாவும் விளையாட விரும்பினார். இவர் டென்னசி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். எட் டெம்பிள் என்பவர் இவரது பயிற்சியாளராக இருந்தார்.

ஒலிம்பிக் சாதனைகள்

[தொகு]

1956ஆம் ஆண்டில் மெல்பேர்ன் ஒலிம்பிக் விளையாட்டில் 4*100 மீட்டர் ரிலே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 1960 கோடைக்கால ரோம் லிம்பிக்கில் இவர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ரிலே என மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். வில்மா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11 விநாடியில் ஓடினார். 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23.2 விநாடியில் வென்று ஒரு புதிய சாதனையை உருவாக்கினார். இந்த வெற்றிக்குப் பின் இவரை வரலாற்றில் வேகமான பெண் என்று உலகமே போற்றினர்.

கடைசியில் 11 செப்டம்பர் 1960 இல் மார்தா ஹட்சன், லூசின்டா வில்லியம்ஸ் மற்றும் பார்பரா ஜோன்ஸ் குழுவினருடன் இணைந்து 400 மீட்டர் ரெலேயில் 44.5 நொடியில் ஓடி உலக சாதனையை படைத்தார். அவர் சிறுவயதில் பயின்ற பள்ளியிலே ஆசிரியராக பணிபுரிந்தார்.

விருதுகளும் நன்மதிப்பும்

[தொகு]

1960ஆம் ஆண்டில் யுனைடெட் பிரெஸ் அத்லெட் ஆஃப் தி இயர் என்ற விருதும், ஜேம்ஸ் ஈ.சுல்லிவன் விருதும் பெற்றார். அவர் 1973 இல் ஆஃப் ஃபேம் நேஷனல் பிளாக் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஹால் வாக்களித்தனர். அவர், 1993 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருது, மற்றும் 1994 இல் ஆஃப் ஃபேம் தேசிய மகளிர் ஹால் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1994 இல், சிவப்பு நதி (Lynnwood-Tarpley) கிராஃப்ட் தெரு சந்திப்பில் அருகே பாலம் என்று CLARKSVILLE உள்ள மாநிலங்களுக்கு இடையிலான 24 வெளியேறவும் 4 இடையே CLARKSVILLE, டென்னசி அமெரிக்க பாதை 79 பகுதி வில்மா ருடால்ப் புகழ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தொழில் மற்றும் குடும்பம்

[தொகு]

1963ஆம் ஆண்டில் டென்னசி மாநிலப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று இளநிலை பட்டத்தை முடித்தார். காப் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1963ஆம் ஆண்டில் ராபர்ட் எல்ட்ரிஜ் என்பவரை மணந்தார். இவரது பிள்ளைகள்: யோலான்டா (1958), ஜுவான்னா (1964), ராபர்ட் (1965), சர்ரி (1971). பின்பு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.

இறப்பு

[தொகு]

சூலை 1994 இல் வில்மாவின் தாயார் இறந்த பிறகு இவர் மூளைக்கட்டியினால் பாதிக்கப்பட்டார். 12 நவம்பர் 1994யில் 54ஆம் வயதில் தொண்டைப் புற்றுநோயால் காலமானார்.1997 ஆம் ஆண்டு, டென்னஸி ஆளுநர் டான் சன்ட்குவிஸ்ட் சூன் 23 "வில்மா ருடால்ப் தினம்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.