உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரை முற்பதிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போட்டிக்கான கட்டுரைகளின் பட்டியலில் இல்லாத கட்டுரைகள்

[தொகு]

நீங்கள் முற்பதிவு செய்துள்ள கட்டுரைகளில், குறுங்கோள் , அறிவியலின் மெய்யியல் ஆகிய இரண்டும் போட்டிக் கட்டுரைகள் பட்டியலில் இல்லைப் போன்று தெரிகிறதே. இங்குள்ள பட்டியலில் இருந்தே தலைப்புக்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறேன். --கலை

இங்கே உள்ள பட்டியலில், அறிவியலின் மெய்யியல் கட்டுரை இருப்பதனால், அதனை இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளேன். எனவே அதனைப் போட்டிக்கு எடுத்துக்கொள்ளலாம். குறுங்கோள் கட்டுரையை உங்கள் முற்பதிவுப் பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை. --கலை
அறிவியலின் மெய்யியல் கட்டுரை போட்டி ஆரம்பிக்க முன்னரே 26000 பைட்டுக்களைத் தாண்டியிருப்பதால், அதனைப் போட்டியில் இணைக்க முடியாதென எண்ணுகிறேன். --கலை

குறுங்கோள் கட்டுரையை மேலும் விரிவாக்கலாம். 18000 பைட்டுகளே நிரம்பியுள்லன.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:21, 2 மே 2017 (UTC)[பதிலளி]

எனக்கும் இந்தக் குறுங்கோள் கட்டுரையை போட்டிக்கான கட்டுரைகளின் பட்டியலில் சேர்த்து விரிவாக்குதல் நன்று என்றே தோன்றுகிறது. --கலை

ஏற்கனவே 26000 பைட்டுக்களைத் தாண்டிய கட்டுரைகள்

[தொகு]

போட்டிக்கு நீங்கள் தெரிவு செய்த நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கட்டுரை 26000 பைட்டுக்களைத் தாண்டியுள்ளது. ஸ்ரீஹீரன் இதனை இறுதியில் இணைத்துள்ளார். இதனை எப்படிக் கையாள்வது? --கலை


நந்தினி அக்கா முற்பதிவு செய்தமையைக் கவனிக்கத் தவறிவிட்டேன், மன்னிக்க, ஆனால்,"கட்டுரைகள் பிற பயனர்களினால் விரிவாக்கப்படினும், 26,000 ஆவது பைட் சேர்ப்பவரின் கணக்கில் கட்டுரை சேர்த்துக்கொள்ளப்படும்." இது ஏற்கனவே இங்கும் குறிப்பிடப்பட்டிருந்தது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:52, 1 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்! நீங்களும் நீங்கள் விரிவாக்க விரும்பும் கட்டுரைகளை முற்பதிவு செய்தால், இத்தகைய சங்கடங்களைத் தவிர்க்கலாமே. நன்றி. --கலை
சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:36, 2 மே 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் போட்டிக்காகத் தெரிவு செய்திருக்கும் அறிவியலின் மெய்யியல் கட்டுரை, போட்டி ஆரம்பிக்க முன்னரே 26000 பைட்டுக்களைத் தாண்டிவிட்டது. எனவே இதனைப் பட்டியலில் சேர்க்க முடியாதென நினைக்கிறேன். @Shriheeran and Sivakosaran: --கலை

அறிவியலின் மெய்யியல் எனும் கட்டுரை போட்டிக் கட்டுரைத் தலைப்புகளில் இல்லை.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:52, 1 மே 2017 (UTC)[பதிலளி]

முற்பதிவை விலக்கிக்கொள்ளல்

[தொகு]

சீன எழுத்துமுறை பற்றிய அடிப்படை அறிவின்றி அக்கட்டுரையை விரிவாக்க முனைந்தேன். சீன எழுத்தில் எவ்வித அறிமுகமோ புரிதலோ இன்றி அதில் செய்யும் விரிவாக்கம், தொடர்பங்களிப்பாளர் போட்டியின் நோக்கத்தை பிழைப்பித்துவிடும் என்று அஞ்சுகின்றேன். அம்முற்பதிவை விலக்கிக்கொள்கிறேன். அக்கட்டுரையை வேறு யாரும் முற்பதிவு செய்ய முனைந்து பின்வாங்கியிருந்தால் அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக்கோருகிறேன். இத்தவறு இனி நிகழாது. --5anan27 (பேச்சு) 17:35, 11 மே 2017 (UTC)[பதிலளி]

அதிநுண்ணுயிரி, குருட்டுத் தன்மை ஆகிய கட்டுரைகளின் முற்பதிவைத் தற்போதைக்கு விலக்கிக் கொள்கிறேன். அதுவரை விரிவாக்கப்படாமல் இருந்தால், பின்னர் இவற்றை விவிவாக்கக் கருதியுள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:21, 23 செப்டம்பர் 2017 (UTC)

கட்டுரை முற்பதிவு நோக்கம்

[தொகு]

பயனர்:Kalaiarasy, பயனர்:Shriheeran கட்டுரை முற்பதிவின் நோக்கம்தான் என்ன? நான் ஏற்கனவே அவதானித்தது, தற்போது எனக்கும் நிகழ்ந்துள்ளது. சிலர் முற்பதிவு செய்யாமலேயே இங்கு ஏற்கனவே வேறு பயனரால் முற்பதிவு செய்த கட்டுரைகளை விரிவாக்கி வருகின்றனர். இது போட்டியின் நடுநிலையை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் முற்பதிவு செய்தல் வேண்டும் பிறர் முற்பதிவு செய்த கட்டுரையை விரிவாக்க நினைத்தால் அவரது அனுமதியைப் பெற்று விரிவாக்கலாம். எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரையின் பிற்பாடு அடுத்த கட்டுரை எனத் தீர்மானித்தது ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பது முறையல்ல. ஒரு பயனர் தீர்மானித்த கட்டுரை பறிபோகும் சூழ்நிலையில் அவரது உத்வேகம் சிதைக்கப்படுகின்றது என்பதைக் கவனிக்க. மேலும் அவரது கட்டுரையின் எண்ணிக்கையும் குறைகின்றது. இக்காரணங்களால் நான் எனக்காக முற்பதிவு செய்த கட்டுரைகளை விலக்கிக்கொள்கின்றேன்.--சி.செந்தி (உரையாடுக) 18:33, 26 மே 2017 (UTC)[பதிலளி]

செந்தி! நானும் இது தொடர்பில் கொஞ்சம் குழப்பம் அடைந்திருக்கிறேன். அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இதுபற்றி ஒரு அறிவித்தல் இடும்படி ஸ்ரீஹீரனைக் கேட்க நினைத்தேன். தயவுசெய்து நீங்கள் கட்டுரையை விரிவாக்க முன்னர், அந்தக் கட்டுரை வேறு பயனரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும் என்று போடலாம். அதற்குள் நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஆனால், ஏற்கனவே தொடர்பங்களிப்பாளர் போட்டிப் பக்கத்தில், கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
  • நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை முன்கூட்டியே பதிவு செய்ய இங்கு செல்லுங்கள். பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.

ஆனால், எல்லாப் போட்டியாளர்களும், முற்பதிவு செய்ய வேண்டுமென்றோ, அல்லது அந்தக் கட்டுரைகளை வேறொருவர் தொகுக்க முடியாது என்றோ முன்னர் குறிப்பிடவில்லை. எல்லோரும் முற்பதிவு செய்யவுமில்லை. எல்லோரும் அதனைப் பார்ப்பார்களா என்றும் தெரியவில்லை. இருந்தாலும், ஒவ்வொருவரும் விரிவாக்கும் கட்டுரைகளுக்கு, {{AEC|உங்கள்பெயர்}} வார்ப்புருவை இட்டு வைத்தால், இன்னொருவர் தொகுக்க மாட்டார் என நம்புகிறேன்.
தயவுசெய்து முற்பதிவுகளை நீக்காமல், இதனை முயற்சி செய்யலாமே. அத்துடன், போட்டியாளர்களுக்கு ஒரு அறிவித்தலையும் இடலாம்.
மேலும் இங்கேயும் கீழ்வருமாறு உள்ளது.
  • இப்பக்கத்தில் உங்கள் பெயர்களின் கீழே நீங்கள் விரிவாக்கவுள்ள கட்டுரைகளை குறிப்பிட்டு முற்பதிவு செய்யலாம். குறைந்தது 12 கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம். முற்பதிவு செய்யப்படும் கட்டுரைகள் பிற பயனர்களினால் விரிவாக்கப்படினும், 26,000 ஆவது பைட் சேர்ப்பவரின் கணக்கில் கட்டுரை சேர்த்துக்கொள்ளப்படும். எனவே கட்டுரையில் வார்ப்புருவை இட்டு வைப்பது பலன் தரும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பயனர்:drsrisenthil, பயனர்:Shriheeran நன்றி.--கலை (பேச்சு) 18:48, 26 மே 2017 (UTC)[பதிலளி]
நான் நீங்கள் குறிப்பிட்டதை ஏற்கனவே கவனித்துள்ளேன். அந்தக் குழப்பமான விதிகள் காரணமாகவே இக்குழப்பம் நிகழ்ந்துள்ளது. ஒன்று அனைவரும் முற்பதிவு செய்யவேண்டும், அல்லது முற்பதிவு என்பது தேவையற்றது. உதாரணமாக, மயூரநாதன் அவர்கள் முற்பதிவைப் பாருங்கள். மூவர் அவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை விரிவாக்கி விட்டனர். இவை ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. முற்பதியும் கட்டுரைகள் ஒவ்வொன்றாக வேறொருவரால் தொகுக்கப்படின் முற்பதிவு எதற்கு என்பதே எனது கேள்வி. மீண்டும் நான் முற்பதிவு செய்த கட்டுரையை வேறொருவர் தொகுப்பதால் ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்கவே எனது முற்பதிவை நீக்கினேன். --சி.செந்தி (உரையாடுக) 20:30, 26 மே 2017 (UTC)[பதிலளி]
பலரும் வேறொருவர் முற்பதிவு செய்த கட்டுரையை விரிவாக்குவார்களேயானால், செந்தி சொல்வதுபோல், முற்பதிவு என்பது அவசியமற்றதுதான். அதேநேரம் விக்கியில் எவரும் தொகுக்கலாம் என்ற நிலை இருக்கும்போது, எவரையும் அதனைத் தொகுக்க வேண்டாம் என்று தடை செய்வதும் தவறாகவே தோன்றுகிறது. எனக்கு இரு வழிகள் தோன்றுகிறது.
  1. ஒவ்வொருவரும், தான் விரிவாக்க விரும்பும் கட்டுரைகளுக்கு, {{AEC|உங்கள்பெயர்}} வார்ப்புருவை இட்டுவிட்டுத் தொடர்ந்து விரிவாக்குதல். அந்த வார்ப்புருவில் இந்தக் கட்டுரை 'பயனர் பெயர்' எனும் பயனரால் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்படுகின்றது. எதுவித தொகுப்புக்களையும் தற்போது இக்கட்டுரையில் நீங்கள் சேர்க்காதிருப்பது, போட்டியாளருக்கு உதவியாக இருக்கும். இக்கட்டுரை சில நாட்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். என்று மாற்றலாமா?
  2. ஒருவர் ஒரு கட்டுரையை போட்டிக்காக விரிவாக்க முற்படுவதற்கு முன்னர், முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளைப் பார்த்து, அதில் வேறொருவரால் முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளைத் தவிர்க்குமாறு, அனைத்துப் போட்டியாளர்களுக்கும் அறிவுறுத்தி ஒரு செய்தியை அனுப்புதல். ஆனால் இது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது தெரியவில்லை. காரணம் ஓரளவு புதிய பயனர்கள் இதனைக் கவனித்துச் செய்வார்களா என்பது தெரியாது.
ஸ்ரீஹீரன்! கவனியுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 13:19, 27 மே 2017 (UTC)[பதிலளி]
கலை, செந்தில் அவர்களே, கடந்த ஒரு நாளும் சாரணியப் பாசறைக்குச் சென்றமையால் பதில் அளிக்க தாமதமானமைக்கு வருந்துகின்றேன். முற்பதிவு செய்தல் போட்டியின் முக்கிய அங்கமாக இருக்கின்றச்து. முற்பதிவுப்பக்கத்தில் செய்யும் மாற்றம் ஒன்று செய்து, அதனை அனைத்துப் போட்டியாளர்களுக்கும் அறிவிக்கலாம்.

அது இவ்வாறு அமையும்.

அறிவிப்பு

பிற பயனர் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரையை அருள்கூர்ந்து விரிவாக்கல் வேண்டாம். அவ்வாறு விரிவாக்கனீர்களாயின், அக்கட்டுரை முற்பதிவு செய்தவரின் கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளப்படும்.

முற்பதிவு செய்தோருக்கு

நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைகள் 20 நாட்களுக்கே ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர் அவை நீக்கப்பட்டுவிடும். மீண்டும் நீங்கள் முற்பதிவு செய்தல் வேண்டும். பிற பயனர்களும் உங்கள் கட்டுரைகளை விரிவாக்க விரும்பின் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே இந்த நடைமுறை 'நடுவர்களுக்கு விரிவாக்கப்பட்ட குறித்த கட்டுரைகள் யாரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதனை அவதானித்தல் வேண்டும் இதுதொடர்பான முடிவுகளையும் மாற்றங்களையும் இன்று UTC 11:00 க்குப் பின்னர் இற்றை செய்வேன். நன்றி --ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:39, 28 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன்! உடனடியாக இதனைச் செய்ய வேண்டாம். மற்றவர்கள் இது தொடர்பில் கருத்துச் சொல்வதற்கு ஒருநாளாவது கொடுங்கள். அதன்பின்னர் இற்றை செய்யலாம். நன்றி.--கலை (பேச்சு) 07:17, 28 மே 2017 (UTC)[பதிலளி]
சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:10, 28 மே 2017 (UTC)[பதிலளி]

கலையின் கருத்து

[தொகு]
  • //அவ்வாறு விரிவாக்கனீர்களாயின், அக்கட்டுரை முற்பதிவு செய்தவரின் கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளப்படும்// ஒருவர் விரிவாக்கம் செய்த கட்டுரையை, முற்பதிவு செய்தவராகவே இருப்பினும், இன்னொருவரின் கணக்கில் சேர்த்துக்கொள்வது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை. எனவே இந்த வசனம் நீக்கப்பட வேண்டும். இதனை வேறுமாதிரிச் சொல்லலாம்.

போட்டியாளர்கள் அனைவருக்கும் பின்வருமாறு அறிவிக்கலாம்.

பிற பயனர் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரையை அருள்கூர்ந்து விரிவாக்கல் வேண்டாம். பிற பயனர்கள் முற்பதிவு செய்திருக்கும் கட்டுரைகளைக் காண இங்கே செல்லுங்கள். நீங்கள் தெரிவுசெய்திருக்கும் கட்டுரை வேறு பயனரால் முற்பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, குறிப்பிட்ட கட்டுரையை நீங்கள் விரிவாக்கலாம்.

  • //'நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைகள் 20 நாட்களுக்கே ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர் அவை நீக்கப்பட்டுவிடும்.// இதனைச் செயற்படுத்துவதாயின், இங்குள்ள முற்பதிவுச் செயல்முறையில் அது கடினம். ஒவ்வொருவரும் எந்தெந்த நாட்களில் முற்பதிவு செய்துள்ளனர் என்பதனை நடுவர்கள் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை நீக்க வேண்டியதிருக்கும். முற்பதிவு செய்திருப்பவர்கள், முற்பதிவு செய்யும் நாட்களை அருகிலே குறிப்பிட்டாலும்கூட, அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் முற்பதிவு செய்யப்படும் ஒரு சூழல் வரும்போது, அவற்றைக் கண்டுபிடிப்பது இலகுவானதாக இருக்காது. எனவே நாட்களின் அடிப்படையில் முற்பதிவுகளை மாற்ற வேண்டும். அவ்வாறெனின், 20 நாட்கள் முடிவடைந்ததும், குறிப்பிட்ட நாளுக்குரிய அந்த முற்பதிவுகளை நீக்கிவிடலாம். அது தொடர்பான மாற்றங்கள் இங்கு செய்யப்பட வேண்டும்.
  • இந்த முற்பதிவு தொடர்பில் நாம் விரிவாக உரையாட ஆரம்பித்த பின்னர், முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரை வேறொருவரால் விரிவாக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன். எனவே ஒரு சுலபமான வழி, ஒருவர் ஒரு கட்டுரையை முற்பதிவு செய்யும்போது, குறிப்பிட்ட கட்டுரைகளில், ஒரு வார்ப்புருவை இணைத்துவிடலாம். அந்த வார்ப்புருவில், எந்த நாளில் முற்பதிவு செய்கிறார் என்ற விபரத்தையும் இணைத்துவிடலாம். எனவே கட்டுரை ஒன்றை விரிவாக்கம் செய்ய முயலும் ஒருவர், கட்டாயமாக அந்த வார்ப்புருவைப் பார்த்துவிட்டு, விரிவாக்கத்தைத் தவிர்ப்பார் என்பது எனது எண்ணம்.

வார்ப்புருவானது கீழ்வருமாறு அமையலாம்.

இந்தக் கட்டுரை, (பயனர் பெயர்) என்னும் பயனரால், தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக, (நாள்) அன்று, இங்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, தற்போது நீங்கள் இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 20 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புரு நீக்கப்பட்டுவிடும். அதன்பின்னர் நீங்கள் விரும்பினால் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம்.

நாட்களின் அடிப்படையில் முற்பதிவுகள் மேற்கொள்ளப்படும்போது, அவற்றைப் பார்த்து, நடுவர்களேகூட வார்ப்புருவைக் குறிப்பிட்ட கட்டுரைகளில் இணைக்கலாம்.

  • //விரிவாக்கப்பட்ட குறித்த கட்டுரைகள் யாரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதனை அவதானித்தல் வேண்டும்// இந்த நடுவர்களுக்கான அறிவிப்பு அவசியமில்லை என நினைக்கிறேன்.

--கலை (பேச்சு) 12:40, 28 மே 2017 (UTC)[பதிலளி]

வேறும் எவராவது இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கக்கூடும். எனவே நாளைவரை பொறுத்திருங்கள் ஸ்ரீஹீரன். வார்ப்புருவில் குறிப்பிட்ட நாளையும் இணைக்க வேண்டும்.--கலை (பேச்சு) 14:07, 28 மே 2017 (UTC)[பதிலளி]
நல்ல யோசனை, வரவேற்கின்றேன். முற்பதிவு செய்யும் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக (அதாவது 12 ஆக இல்லாமல்) இருப்பின் இன்னும் சிக்கல்கள் நீங்கும் என்பது எனது கருத்து. --சி.செந்தி (உரையாடுக) 18:34, 28 மே 2017 (UTC)[பதிலளி]
20 நாட்களுக்குப் பல கட்டுரைகளை வேறு யாரும் தொகுக்கக் கூடாது என்பது விக்கியின் கூட்டுழைப்பு முறைக்கு எதிரானது. முற்பதிவு செய்யும் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு கட்டுரை முற்பதிவு என்று இருந்தால் கூட போதும். பயனர்கள் ஒவ்வொரு கட்டுரையாக முற்பதிவு செய்து விரிவாக்கி முடித்து அடுத்த கட்டுரைக்குச் செல்லலாம். போட்டியல் பங்கேற்பவர்களும் மணல் தொட்டியில் எழுதிச் சேமித்து ஒரே மூச்சில் 26,000 பைட்டு எண்ணிக்கையைத் தாண்ட முனையலாம். --இரவி (பேச்சு) 21:07, 28 மே 2017 (UTC)[பதிலளி]

ஒரு நேரத்தில் இரு கட்டுரைகள் மட்டும் முற்பதிவு செய்யலாம். 2 கட்டுரைகள் = 1% இலக்கு. எனவே, இதனை தற்போது முற்பதிவு செய்துள்ள பயனர்களுக்கு அறிவிக்கலாம்.

அறிவிப்பு

தொடர்பங்களிப்பாளர் போட்டியில் பங்குபற்றுவதற்காக கட்டுரைகளை முற்பதிவு செய்தமைக்கு வாழ்த்துகள்! எனினும் ஒரு சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடுகள் நடைபெற்றுவருவதனால், அதனைத் தடுக்கும் வகையில் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு

  • ஒரு நேரத்தில் ஒருவர் 2 கட்டுரைகளை மட்டுமே முற்பதிவு செய்ய முடியும்.
  • அக்கட்டுரைகளில் நிச்சயம் {{AEC}} வார்ப்புரு இடப்பட்டிருத்தல் வேண்டும்.
  • முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரைகள் பிறரால் விரிவாக்கப்படினும், முற்பதிவு செய்தவரின் பெயரிலேயே கட்டுரை சேர்க்கப்படும். அவர் விரும்பின் மட்டுமே விரிவாக்கியவர் பெயரில் சேர்க்கலாம்.

இவற்றை கருத்திற்க் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!
இவ்வாறான அறிவிப்பை இடலாம். இதனை இன்னும் எளிய நடையில் மாற்றி அமைப்பதற்கு உதவுங்கள். கவனிக்க, இரவி, கலை, செந்தில்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:47, 29 மே 2017 (UTC)[பதிலளி]

///முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரைகள் பிறரால் விரிவாக்கப்படினும், முற்பதிவு செய்தவரின் பெயரிலேயே கட்டுரை சேர்க்கப்படும்./// இது சரியல்ல. ஏற்கனவே கலை கூறியதைப் பாருங்கள். இதற்கு மாறாக, அரைப்புள்ளிகள் வழங்கும் வசதி இருக்குமாயின் விரிவாக்கியவருக்கு அரைப்புள்ளிகள் வழங்கலாம், மீண்டும் இதே வழுவைச் செய்யுமிடத்து புள்ளிகள் ஒன்றும் வழங்காது விடலாம். இங்கு இரண்டு கட்டுரைகள் முற்பதிவு எனக் கருதும் போது, ஒரு கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் கட்டுரை, மற்றையது அடுத்ததாக எழுதப்பட இருக்கும் கட்டுரை எனும் பார்வையில் இருத்தல் நன்று. ஒருவர் தற்போது ஒரு கட்டுரையும் எழுதாத பட்சத்தில் அடுத்து எழுத இருக்கும் ஒரு கட்டுரையை மட்டுமே முற்பதிவு செய்ய முடியும் என்று செயற்படுத்தலாம்.--சி.செந்தி (உரையாடுக) 19:25, 29 மே 2017 (UTC)[பதிலளி]




ஸ்ரீஹீரன்! மேற்கூறப்பட்ட கருத்துக்களை முன்வைத்து, பின்வருமாறு அறிவிப்பு அமையலாம் என நினைக்கிறேன். அத்துடன், ஏற்கனவே முற்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே அறிவித்தலைக் கொடுக்கலாம்.

தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காகக் கட்டுரைகள் முற்பதிவு செய்வதுபற்றிய அறிவிப்பு!
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடுகள் நடைபெற்றுவருவதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு: * ஒரு நேரத்தில் ஒருவர் ஒரு கட்டுரையை விரிவாக்குகிறாராயின், இன்னும் ஒரு கட்டுரையை முற்பதிவு செய்து வைக்கலாம். * நீங்கள் விரிவாக்கிக்கொண்டிருக்கும் கட்டுரைக்கு {{AEC|உங்கள்பெயர்}} (விரிவாக்கல் வார்ப்புரு) என்ற வார்ப்புருவை இடுங்கள். * முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு {{AEC}} (முற்பதிவு வார்ப்புரு) வார்ப்புரு இடப்பட்டிருத்தல் வேண்டும். * ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம். * வார்ப்புரு எதுவும் இல்லாத கட்டுரையை எந்தப் பயனரும் விரிவாக்கலாம் என்பதனால், வார்ப்புருவை இட மறக்க வேண்டாம். * போட்டிக்கான விரிவாக்கல் வார்ப்புரு அல்லது முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!

ஸ்ரீஹீரன்! //முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரைகள் பிறரால் விரிவாக்கப்படினும், முற்பதிவு செய்தவரின் பெயரிலேயே கட்டுரை சேர்க்கப்படும். அவர் விரும்பின் மட்டுமே விரிவாக்கியவர் பெயரில் சேர்க்கலாம்.// என்பது வேண்டாம். அதனை அகற்றியிருக்கிறேன். ஏற்கனவே கூறியதுபோல், இன்னொருவர் முற்பதிவு செய்த ஒரு கட்டுரையை, வேறொருவர் விரிவாக்கினால், அந்தக் கட்டுரையை ஏற்றுக்கொள்ளாமல் விடலாமேயொழிய, முற்பதிவு செய்தவரின் கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது.

இதற்கென உருவாக்கப்படும் முற்பதிவு வார்ப்புரு, பின்வருமாறு இருக்கலாம்.

இந்தக் கட்டுரை, (பயனர் பெயர்) என்னும் பயனரால், தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக, (நாள்) அன்று, முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, தற்போது நீங்கள் இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 10 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புரு நீக்கப்பட்டு, வேறொருவர் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம்.

முற்பதிவுக்கான வார்ப்புருவை உருவாக்கிவிட்டு, அதனையும் இணைத்து, அறிவிப்பைக் கொடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 19:59, 29 மே 2017 (UTC)[பதிலளி]

அப்படியானால் முற்பதிவு எனும் அம்சத்தையே இல்லாது செய்துவிடலாம் அல்லவா? நான் இங்கு விரிவாக்கவுள்ள கட்டுரையை இடுகின்றேன். அதனை இன்னொருவர் பார்த்துவிட்டு உடனே விரிவாக்குகின்றார். எனக்கும் இல்லை அவருக்கும் கட்டுரை இல்லை என்று ஆகிவிட்டால் என்ன செய்வது? ஆகையால் இதுவரையில் இருந்த கட்டுரையை முற்பதிவு செய்யும் வசதிக்கு தேவை வராமற் போனதாலும், அது தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருவதாலும் அவ்வசதியை இல்லாமல் செய்யலாம். பயனர்கள் தாம் விரிவாக்கவுள்ள கட்டுரைகளை தமக்குள்ளேயே ரகசியமாக வைத்திருக்கலாம். எ.கா@-கி.மூர்த்தி. ஆகையால் முற்பதிவு வசதி இனிவரும் காலங்களில் இல்லை எனும் அறிவிப்பினை அனைவருக்கும் இடுவதுடன், அதன் இடத்தை AEC நிரப்பும் எனக் கூறலாம்

போட்டியின் அறிவிப்பு இவ்வாறு எளிய நடையில் இவ்வாறு அமையட்டும்.

  • கட்டுரைகள் முற்பதிவு செய்வதன் மூலம் போட்டியாளர்களுக்கு எதுவிதமான பயன்களும் இல்லை என்பதை புரிந்துகொண்டுள்ளோம்.
  • ஆகையால், கட்டுரை முற்பதிவு செய்யும் வசதி இனிமேல் இல்லாது செய்யப்பட்டுள்ளது.
  • எனவே, AEC வார்ப்புருவை சிறந்த முறையில் பயன்படுத்தி கட்டுரைகளை விரிவாக்க வேண்டுகின்றோம்.
  • AEC வார்ப்புரு பற்றிய மேலதிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.
  • தொடர்ந்து சிறப்பாகப் பல கட்டுரைகலையும் விரிவாக்கி, போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!

-ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:29, 30 மே 2017 (UTC)[பதிலளி]


ஸ்ரீஹீரன்!
கட்டுரை முற்பதிவு செய்வதன் நோக்கம் ஒருவர் (சில நாட்களில்) விரிவாக்க விரும்பும் ஒரு கட்டுரையை, இன்னொருவர் விரிவாக்குவதைத் தவிர்ப்பதே. அதற்கான வார்ப்புருவை, கட்டுரையின் முன்பகுதியில் இடும்போது, அந்தக் கட்டுரையை விரிவாக்க வரும் ஒருவர் தானாகவே தவிர்த்துவிடுவார். இத்தனைநாள் வார்ப்புரு அங்கே இல்லாமல் இருந்தமையால், குறிப்பிட்ட பக்கத்தில் போய் யாராவது முற்பதிவு செய்துள்ளனரா என்பதை பார்க்காமலோ, அல்லது பார்த்தும் சரியாகக் கவனிக்காமல் விட்டதனாலோ ஒருவர் அக்கட்டுரையை விரிவாக்க முற்பட்டிருப்பார். முதன் முதலில், நந்தினி கந்தசாமியால் முற்பதிவு செய்யப்பட்ட ஒரு கட்டுரையை கவனிக்காது விரிவாக்கியவரே நீங்கள்தான். அதனால் அதிலுள்ள பிரச்சனை புரியுமென நினைக்கிறேன். ஆனால் வார்ப்புரு இடப்படும்போது, அந்தத் தவறு நிகழாது. கட்டுரையிலேயே குறிப்பிடுவதனால் அனைவரும் பார்ப்பார்கள். அதனால் அது பலனளிக்கும். இரண்டு மூன்று கட்டுரைகளிலாவது இந்த வார்ப்புருவை இடுவது, நிச்சயம் முற்பதிவு செய்ய விரும்புபவருக்கு நன்மையளிக்கும். வேண்டுமானால் இரு வெவ்வேறு வார்ப்புருக்களை இடாமல், முற்பதிவுக்கான வார்ப்புருவையே ஒருவர், ஒரு நேரத்தில் 2 கட்டுரைகளில் இட்டுவிட்டு, விரிவாக்கத் தொடங்கலாம் இடலாம். ஏனெனில், இடைவெளி விட்டு விரிவாக்கிக்கொண்டிருப்பதும், ஒரு வகையில் முற்பதிவுபோலத்தான். ஒரு கட்டுரை முடிந்த பின்னர், வேறொரு கட்டுரைக்கு வார்ப்புருவை இட்டு வைக்கலாம்.
எனது இறுதியான பரிந்துரை என்னவெனில், பின்வருமாறு அறிவிப்பைச் செய்யலாம்.

தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காகக் கட்டுரைகள் முற்பதிவு செய்வதுபற்றிய அறிவிப்பு!

சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
* ஒரு நேரத்தில் ஒருவர் இரண்டு மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள். 
* * நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு {{AEC}} (முற்பதிவு வார்ப்புரு) வார்ப்புரு இடப்பட்டிருத்தல் வேண்டும்.
* நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
* ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம். 
* வார்ப்புரு எதுவும் இல்லாத கட்டுரையை எந்தப் பயனரும் விரிவாக்கலாம் என்பதனால், வார்ப்புருவை இட மறக்க வேண்டாம். 
* போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம். இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!

இதற்கென உருவாக்கப்படும் முற்பதிவு வார்ப்புரு, பின்வருமாறு இருக்கலாம்.

இந்தக் கட்டுரை, (பயனர் பெயர்) என்னும் பயனரால், தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக, (நாள்) அன்று, முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, தற்போது நீங்கள் இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 10 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புரு நீக்கப்பட்டு, வேறொருவர் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம்.
இந்தக் கட்டுரை, (பயனர் பெயர்) என்னும் பயனரால், தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக, (நாள்) அன்று, முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து, வேறு எவரும் 10 நாட்களுக்கு இக்கட்டுரையில் எதுவித தொகுப்புக்களையும் செய்யவேண்டாம். இக்கட்டுரை 10 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட பயனரால் தொகுக்கப்படாதிருப்பின், இங்கிருக்கும் வார்ப்புரு நீக்கப்பட்டு, வேறொருவர் இந்தக் கட்டுரையைத் தொகுக்கலாம். 
முற்பதிவுக்கான வார்ப்புருவை உருவாக்கிவிட்டு, அதனையும் இணைத்து, அறிவிப்பைக் கொடுக்கலாம். நன்றி --கலை (பேச்சு) 13:33, 30 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்!
மேலே கொடுத்த பரிந்துரையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். அறிவிப்பில் அவர்களை முற்பதிவு மட்டும் செய்யச் சொல்லிவிட்டு, நடுவர்களே வார்ப்புருவை இடுவதையும், 10 நாட்களின் பின்னர் நீக்குவதையும் செய்யலாம். அதேவேளை முற்பதிவுப் பக்கத்தை இங்கு இருப்பதுபோல், பயனர்களின் அடிப்படையில் அல்லாமல், நாட்களின் அடிப்படையில் மாற்றியமைக்கலாம். அது பராமரிப்புப் பணியை இலகுவாக்கும். நன்றி.--கலை (பேச்சு) 14:31, 30 மே 2017 (UTC)[பதிலளி]
கலை, வார்ப்புரு இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதனை {{AEC BOOK|பயனர் பெயர்|திகதி}} எனப் பயன்படுத்துக. அத்துடன் பயனர்களுக்கான அறிவிப்பை இன்று இட்டு விடுவதுடன் நாளை முதல் முற்பதிவுப் பக்கமே மாற்றத்துடன் ஜொலிக்கும். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 31 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன்! 10 நாட்கள் முடிந்த நிலையில் கட்டுரையின் முற்பதிவுகளை அகற்றும்போது, மறக்காமல் கட்டுரைகளில் உள்ள வார்ப்புருக்களையும் நீக்கிவிடுங்கள்.--கலை (பேச்சு) 07:45, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:13, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]