உள்ளடக்கத்துக்குச் செல்

வாசுகி சரக்கு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூப்பர் வாசுகி (Super Vasuki) 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி இந்திய இரயில்வே இயக்கிய மிக நீளமான சரக்குத் தொடருந்து ஆகும். தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் கீழ் இயங்கும் வாசுகி சூப்பர் சரக்கு தொடருந்து, 3.5 கிலோ மீட்டர் நீளம், ஆறு என்ஜின்கள், 295 சரக்குப் பெட்டிகளுடன் சுமார் 27 ஆயிரம் டன் நிலக்கரியுடன், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி, 15 ஆகஸ்டு 2022 அன்று, கோர்பா - நாக்பூர் இடையே 267 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. [1][2][3][4]சூப்பர் வாசுகி சரக்கு ரயிலில் ஏற்றப்படும் நிலக்கரியைக் கொண்டு ஒரு நாளில், 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். [5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]