உள்ளடக்கத்துக்குச் செல்

வந்தவாசிப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தவாசிப் போர்
Battle of Wandiwash
ஏழாண்டுப் போர் பகுதி

வந்தவாசிக் கோட்டை.
நாள் ஜனவரி 22, 1760
இடம் வந்தவாசி, தமிழ்நாடு, இந்தியா
ஆங்கிலேயரின் வெற்றி
பிரிவினர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி
தளபதிகள், தலைவர்கள்
தளபதி அயர் கூட் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி
பலம்
80 ஐரோப்பியக் குதிரைகள், 250 உள்நாட்டுக் குதிரைகள், 1,900 ஐரோப்பியக் காலாட்படை, 2,100 சிப்பாய்கள், 26 பீரங்கிகள் 300 ஐரோப்பிய குதிரைப்படை, 2,250 ஐரோப்பிய காலாட்படை, 1,300 சிப்பாய்கள், 3,000 மராட்டியர், 16 பீரங்கிகள்

வந்தவாசிப் போர் 1760 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி ஊரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும். ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சுச் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையைத் தோற்கடித்தது. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர். இந்த வெற்றி இங்கிலாந்து நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது[1]. 22.1.1760 அன்று இங்கு நடைபெற்ற போரில், ஆங்கிலேய படைகள் வென்றதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவை 187 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் நிலை உருவானது[2].

இப்போரைக் குறித்த "வந்தவாசி போர்-250' என்னும் நூல் வெளியீட்டு விழா 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதுச்சேரி". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2015.
  2. "இந்திய வரலாற்றை தீர்மானித்த வந்தவாசி போர்". தினகரன் (தமிழ்நாடு). 2015-02-04 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304224228/http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=422135. பார்த்த நாள்: 17 சூலை 2015. 
  3. ""வந்தவாசி போர்-250' நூல் வெளியீடு". தினமணி. 5 சனவரி 2011. http://www.dinamani.com/edition_vellore/article748111.ece. பார்த்த நாள்: 17 சூலை 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தவாசிப்_போர்&oldid=3719525" இலிருந்து மீள்விக்கப்பட்டது