உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ணச் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்ணச் சிரிப்பான்
து. வெ. வெரைகேட்டம், கேதார்நாத் காட்டுயிர் காப்பகம், உத்தரகாண்டம், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. வெரைகேட்டம்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் வெரைகேட்டம்
(விகோர்சு, 1831)
வேறு பெயர்கள்

கருலாக்சு வேரிகேடசு

வண்ணச் சிரிப்பான் (Variegated laughingthrush)(துரோகலோப்டெரான் வெரைகேட்டம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது முதன்மையாக இமயமலையின் தாழ் நிலப் பகுதியிலிருந்து நடுத்தர உயரப் பகுதி வரை காணப்படுகிறது. வண்ணச் சிரிப்பான் பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் திபெத் முழுவதும் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

வண்ணச் சிரிப்பான் நடுத்தர அளவிலான சிரிப்பான் ஆகும். இது பொதுவாக 24-16 சென்டிமீட்டர் நீளமும் 57-79 கிராம் எடையும் கொண்டது. இதன் இரண்டு துணையினங்களின் தொண்டையின் மையத்தில் ஒரு கருப்பு பட்டையைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த ஆலிவ் நிறத்தில் தடிமனா தோற்றத்தில் காணப்படும். பெரிய வாலானது வெள்ளை முனையுடன் சாம்பல் முன் பட்டையுடன் காணப்படும். வெளிப்புற வாலிறகின் நிறம் துணையினங்களில் மாறுபடும். து. வெ. வெரைகோட்டத்தில் இலவங்கப்பட்டை நிற நுனியில் பெரிய உறைகள் மற்றும் கருப்பு முதன்மை மறைப்புகளுடன் தனித்துவமான மஞ்சள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இறகுகளைக் கொண்டுள்ளது. து. வெ. வெரைகோட்டம் மஞ்சள் வெளிப்புற வாலிறகினைக் கொண்டுள்ளது. அலகினைச் சுற்றியுள்ள பகுதி கண் வரை கருப்பு நிறமாக இருக்கும். இது வெள்ளை நிற கண் வளையத்துடன் பிரிக்கப்படுகிறது. கீழ்த்தாடையின் அடிப்பகுதியில் உள்ள சிறகு வெண்மையாக மங்கிக் காணப்படும். பழுப்பு நிற தலையில் சாம்பல் நிற கிரீடத்துடன் கூடிய நெற்றியைக் கொண்டுள்ளது.

து. வெ. சிமைல் என்பது து. வெ. வெரைகோட்டத்தைப் போன்றது. இது சாம்பல் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இறகுகள் மற்றும் சாம்பல் வெளிப்புற வாலிறகினைக் கொண்டுள்ளது. கீழ் தாடையைச் சுற்றியுள்ள பகுதி இந்த துணையினத்தில் வெண்மையாகவும், நெற்றியில் உள்ள மெருகு தோல் மிகவும் மந்தமாகவும் இருக்கும்.[2]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Trochalopteron variegatum". IUCN Red List of Threatened Species 2016: e.T22715741A94466825. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715741A94466825.en. https://www.iucnredlist.org/species/22715741/94466825. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Collar, Nigel; Robson, Craig (2020). Del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi et al.. eds (in en). Variegated Laughingthrush (Trochalopteron variegatum). doi:10.2173/bow.varlau1.01. http://www.hbw.com/species/variegated-laughingthrush-trochalopteron-variegatum. பார்த்த நாள்: 2019-11-18.