ராஜஸ்ரீ (நடிகை)
ராஜஸ்ரீ (நடிகை) | |
---|---|
பிறப்பு | மாதவி[1] 29 ஏப்ரல் 1977 |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கேரசி மேல்நிலைப்பள்ளி[2] |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1994–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | அன்சர் ராஜா (தி. 2009) (மணமுறிவு)[3] புஜங்க ராவ் (m. 2010-present)[4] |
ராஜஸ்ரீ (பிறப்பு: ஏப்ரல் 29, 1977) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள், பாலிவுட், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். பாரதிராஜாவின் 1994 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான கருத்தம்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்தார்.[5]
தொழில்
[தொகு]ராஜஸ்ரீ தமிழ் திரையுலகுக்கு பாரதிராஜாவின் கருத்தம்மா மூலம் அறிமுகமானார். தனது அற்புதமான நடிப்பிற்காக விருதுகளை வென்ற அவர், சேது, நந்தா, ரன், மனசெல்லாம், வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் நடித்தார். ராஜஸ்ரீ தெலுங்கு மற்றும் தமிழில் 57 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். வெள்ளித் திரை தவிர, சின்னத் திரையில் ஆலயம், அகல் விளக்கு, மந்திர வாசல், சிவமயம் ஆகியவ தொடர்களில் நடித்துள்ளார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ராஜஸ்ரீயின் சகோதரியான பாபியும் சில படங்களில் நடித்துள்ளார்.[6]
"உடற்பயிற்சி கூட" உரிமையாளரான அன்சாரி ராஜா என்ற முசுலீமை ராஜஸ்ரீ திருமணம் செய்து கொண்டார். இந்து - முஸ்லிம் மதத்தின்படி நடந்த திருமணத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு வழக்கமான திருமணமாக இது இருந்தது. ஆனால், ஒரு மாதமே ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியர் பின்னர் பிரிந்தனர்.
2010 இல், விஜயவாடாவில் நடந்த ஒரு ரகசிய விழாவில் கணினி பொறியாளர் புஜங்கர் ராவ் என்பவரை மணந்தார். பிரபலமான கனக துர்கா கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றது, இதில் ஒரு சில குடும்பத்தினரும், தம்பதியரின் நண்பர்களும் கலந்து கொண்டனர். ஐதராபாத்தைச் சேர்ந்த புஜங்கர் ராவ் ராஜஸ்ரீயின் உறவினர் ஆவார். இதன்பிறகு நடிப்பிலிருந்து விடைபெறுவதாக நடிகை கூறினார்.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1994 | கந்தத குடி - 2 | கன்னட படம் | |
1994 | கருத்தம்மா | கருத்தம்மா | |
1995 | நீலக்குயில் | சாலினி | |
1995 | லிங்கப்பு ல்வ் ஸ்டோரி | ராகா | தெலுங்கு படம் |
1995 | முறை மாப்பிள்ளை | சொர்ணா | |
1996 | ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே | லட்சுமி | |
1996 | அம்மன் கோவில் வாசலிலே | பத்மினி | விருந்தினர் தோற்றம் |
1996 | வைகறை பூக்கள் | தெய்வாணை | |
1997 | போலிஸ் பெட்டி | ரேகா | கன்னட படம் |
1998 | கிங் | ராஜேஸ்வரி | கன்னட படம் |
1998 | மாங்கல்ய பல்லக்கு | அகிலா | மலையாள படம் |
1999 | சேது | ||
1999 | சௌடெலா | இந்தி படம் | |
2001 | அசோக வனம் | உமா | |
2001 | நந்தா | நந்தாவின் தாய் | |
2001 | சொன்னால் தான் காதலா | ரோஜாவின் சகோதரி | |
2002 | ஹோலி | Vவசந்தி | தெலுங்கு படம் |
2002 | ரன் | ||
2002 | கேம் | மலர் | |
2003 | மனசெல்லாம் | ||
2006 | இலக்கணம் | மல்லிகா | |
2006 | வேட்டையாடு விளையாடு | திருமதி ஆரோக்கியராஜ் | |
2007 | அம்முவாகிய நான் | ||
2007 | சபரி | மரகதம் | |
2009 | ஒரு காதலன் ஒரு காதலி | சுமதி | |
2010 | அய்யனார் | பிரபாவின் அத்தை | |
2012 | பொற்கொடி பத்தாம் வகுப்பு | பொற்கொடியின் தாய் | |
2013 | வத்திக்குச்சி | ||
2015 | அகத்திணை | ||
2015 | சீமந்துடு | விருந்தினர் பாத்திரம் | |
2015 | சண்டி வீரன் | பாரியின் தாய் | |
2016 | இறைவி | கலா | |
2017 | பகடி ஆட்டம் | அன்னை | |
2017 | அரசகுலம் | ||
2020 | வர்மா | மேகாவின் தாய் |
தொடர்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | மொழி | பாத்திரம் | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1998-2001 | கங்கா யமுனா சரஸ்வதி | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி | தொலைக்காட்சியில் அறிமுகம் | |
2001-2004 | டிராகுலா | மலையாளம் | ஏஷ்யாநெட் | ||
2002-2003 | அகல் விலக்குகள் | தமிழ் | சீதா | சன் தொலைக்காட்சி | |
2008-2010 | மகள் | ||||
2009-2010 | இதயம் | சகுந்தலா | |||
2013–2014 | வம்சம் | தேன்மொழி | |||
2014–2016 | ராமுலம்மா | தெலுங்கு | ஸ்டார் மா | ||
2017–2020 | லட்சுமி கல்யாணம் | ராஜேஸ்வரி | |||
2018 | மகாலட்சுமி | ஜெமினி தொலைக்காட்சி | |||
2020 | சித்தி 2 | தமிழ் | பத்மா சண்முகபிரியன் | சன் தொலைக்காட்சி |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Karuthamma Rajasree Entered wedlocks". www.ayngaran.com. பார்க்கப்பட்ட நாள் 25 February 2015.
- ↑ "Transcending Language Barriers". The New Indian Express.
- ↑ "Karuthamma Rajashree gets married". www.kollywoodtoday.net. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Second marriage for Bharathiraja's heroine". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 25 February 2015.
- ↑ 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
- ↑ https://web.archive.org/web/20020113014310/http://www.chennaionline.com/reeltalk/mar286.asp