மேற்கு சத்ரபதிகள்
மேற்கு சத்ரபதிகள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிபி 35–கிபி 405 | |||||||||
தலைநகரம் | உஜ்ஜைன் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாலி சமசுகிருதம் பிராகிருதம் | ||||||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
இந்தோ-சிதியன்#இந்தோ-சிதியன் ஆட்சியாளர்கள்#மேற்கு சத்ரபதிகள் | |||||||||
• கிபி 35 | அபிரகா | ||||||||
• 388–395 | மூன்றாம் ருத்திரசிம்மன் | ||||||||
வரலாற்று சகாப்தம் | பண்டைய இந்தியா | ||||||||
• தொடக்கம் | கிபி 35 | ||||||||
• முடிவு | கிபி 405 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா பாக்கித்தான் |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
மேற்கு சத்ரபதிகள் (Western Satraps) (ஆட்சிக் காலம் கிபி 35 – 405), தற்கால மேற்கு மற்றும் மைய இந்தியாவின் பகுதிகளான சௌராஷ்டிர தீபகற்பம், மாளவம், மகாராட்டிரம், குசராத்து, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து பகுதிகளை கி மு 35 முதல் கி. பி 405 வரை ஆண்ட, நடு ஆசியாவின் சிதியர்கள் இனத்தைச் சேர்ந்த இந்தோ-சிதியன் குல வழி வந்த மேற்கு சத்ரபதிகள் ஆவார். இவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டதால் மேற்கு சத்திரபதிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்.[1] [2] வட இந்தியாவை ஆட்சி செய்த இதே இனத்தவர்களை வடக்கு சத்திரபதிகள் என்பவர்.
மேற்கு சத்ரபதிகள் குசாணர்கள் மற்றும் சாதவாகனர்களின் சமகாலத்தவர்கள் ஆவர். சாதவாகனப் பேரரசின் காலத்தில், மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மேற்கு சத்ரபதிகள் குறுநில மன்னர்களாக இருந்தனர். மேற்கு சத்ரபதி அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளன. [3]
350 ஆண்டுகளில் மேற்கு சத்ரபதிகளில் 27 தன்னாட்சி பெற்ற மேற்கு சத்ரபதி குறுநில மன்னர்கள் மேற்கு இந்தியாவையும், மைய இந்தியாவையும் ஆண்டனர். பாரசீக மொழியில் சத்ரப் எனில் மாகாண ஆளுநர் என்று பொருள்படும்.
குஜராத் மாநிலத்தின் தேவ்னி மோரி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்த போது, மேற்கு சத்ரபதி மன்னர்கள் நிறுவிய பௌத்த விகாரைகள், தூபிகள், கற்பேழைகள் மற்றும் நாணயங்கள் கிடைத்தது. பௌத்த சமயத்தை ஆதரித்த மேற்கு சத்திரபதி மன்னர்களில் புகழ்பெற்றவர்கள் நகபானர், முதலாம் ருத்திரதாமன் மற்றும் மூன்றாம் ருத்திரசிம்மன் ஆவார்.
சாதவாகனர்களால் கிபி இரண்டாம் நூற்றாண்டில் வீழ்ச்சி கண்ட மேற்கு சத்திரபதிகளின் இராச்சியம், கிபி நான்காம் நூற்றாண்டில் குபதர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்.[4]
நாணயங்கள்
[தொகு]மேற்கு சத்ரபதி அரசர்களான பூம்கா, நகபானர், முதலாம் ருத்திரதாமன் மற்றும் மூன்றாம் ருத்திரசிம்மன் ஆகியோர் குஷாணர்கள், சாதவாகனர்கள் போன்று தங்கத்திலும், வெள்ளியிலும் நாணயங்களை வெளியிட்டனர்.[5]
-
கிபி முதலாம் நூற்றாண்டில் மன்னர் பூமிகா வெளியிட்ட நாணயாம்
-
நகபானர் உருவம் பொறித்த நாணயம்
-
முதலாம் ருத்திரதாமனின் நாணயம்
-
முதலாம் ருத்திரசேனரின் நாணயம் (200–222)
-
மூன்றாம் ருத்திரசிம்மனின் நாணயம் (388–395)
முக்கிய அரசர்கள்
[தொகு]சத்ரபதிகள்
[தொகு]- யபிரஜெயா
- ஹோஸ்பிஸ்சஸ்
- ஹிகாரகா
- அபிரகா
- பூமகா(?–119)
- நகபானர்
பத்ரமுக குல அரசர்கள்
[தொகு]- சாஸ்தனா (c. 78-130), சொமொதிகாவின் மகன்
- ஜெயதாமன், சாஸ்தனாவின் மகன்
- முதலாம் ருத்திரதாமன் (கிபி 130–150), ஜெயதாமனின் மகன்
- முதலாம் தாமஜதஸ்ரி (170–175)
- சீவதாமன் (175, d. 199)
- முதலாம் ருத்திரசிம்மன் (175–188, d. 197)
- ஈஸ்வரதத்தா (188–191)
- முதலாம் ருத்திரசிம்மன் (மீண்டும்) (191–197)
- சீவதாமன் (மீண்டும்) (197–199)
- முதலாம் ருத்திரசேனர் (200–222)
- சம்காதாமன் (222–223)
- தாமசேனன் (223–232)
- இரண்டாம் தாமஜாதஸ்ரீ (232–239) உடன்
- வீரதாமன் (234–238)
- முதலாம் யசோதாமன் (239)
- விஜயசேனன் (239–250)
- மூன்றாம் தாமஜாதசரி (251–255)
- இரண்டாம் ருத்திரசேனர் (255–277)
- விஸ்வசிம்மன் (277–282)
- பத்ருதாமன் (282–295)
- விஸ்வசேனன் (293–304)
இரண்டாம் ருத்திரசிம்மனின் குடும்பம்
[தொகு]- இரண்டாம் ருத்திரசிம்மன், ஜீவதாமனின் மகன் (304–348) உடன்
- இரண்டாம் யசோதாமன் (317–332)
- இரண்டாம் ருத்திரதாமன் (332–348)
- மூன்றாம் ருத்திரசேனர் (348–380)
- சிம்மசேனன் (380–384 (5?)
- நான்காம் ருத்திரசேனன் (382–388)
- மூன்றாம் ருத்திரசிம்மன் (388–395)
கட்டிடக் கலை
[தொகு]கர்லா குகை வளாகத்தின் பெரிய சைத்தியத்தை, மேற்கு சத்ரபதி மன்னர் நகபானர் கிபி 120-இல் நிறுவினார்.[6][7][8]
Great Chaitya hall at Karla[6] | |
|
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.gloriousindia.com/history/western_kshatrapas.html Western Kshatrapas]
- ↑ http://empires.findthedata.com/l/137/Western-Satraps-Dynasty[தொடர்பிழந்த இணைப்பு] Western-Satraps-Dynasty]
- ↑ [ http://coinindia.com/galleries-kshaharatas.html The Coin Galleries: Western Kshatrapas: Kshaharata Dynasty ]
- ↑ Ancient India by Ramesh Chandra Majumdar p. 234
- ↑ http://people.bu.edu/ptandon/WK-Legends.pdf How to read the legends on coins of the Western Kshatrapas]
- ↑ 6.0 6.1 World Heritage Monuments and Related Edifices in India, Volume 1 ʻAlī Jāvīd, Tabassum Javeed, Algora Publishing, 2008 p.42
- ↑ Southern India: A Guide to Monuments Sites & Museums, by George Michell, Roli Books Private Limited, 1 mai 2013 p.72
- ↑ "This hall is assigned to the brief period of Kshatrapas rule in the western Deccan during the 1st century." in Guide to Monuments of India 1: Buddhist, Jain, Hindu - by George Michell, Philip H. Davies, Viking - 1989 Page 374
- ↑ Epigraphia Indica Vol.18 p.326 Inscription No1
மேற்கோள்காள்
[தொகு]- Rapson, "A Catalogue of Indian coins in the British Museum. Andhras etc."
- John Rosenfield, "The dynastic art of the Kushans", 1976
- Claudius Ptolemy, "The geography", Translated and edited by Edward Luther Stevenson, Dover Publications Inc., New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-26896-9